Header Ads



ஐ.தே.க. யின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில்தான் - மங்கள

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல், ஐக்கிய தேசியக் கட்சிச சார்பில் களமிறக்கக்கூடிய தகுதியான வேட்பாளர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான உறுப்பினர்களுடனான சந்திப்பில் பங்கேற்று கருத்த வெளியிட்ட அவர், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த சிலருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமத்துவத்தில் மாற்றம் தேவையெனவும், அது நகைப்புக்குறிய விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், "1980களில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவை பதவி விலகுமாறு அநுர பண்டாரநாயக்க வலியுறுத்தியிருந்தார். எனினும் அந்த சந்தர்ப்பத்தில் ஶ்ரீமாவோ கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகவில்லை. அது பதவி ஆசையில் அல்ல, கட்சியை சரியான தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம்தான்.

1998 - 99 காலப்பகுதியில் சந்திரிக்கா குமாரதுங்க இரண்டாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில போட்டியிட்ட சந்தர்ப்பத்தில், "ரணிலுக்கு முடியாது" என்ற தலைப்பில் சுவரொட்டிகளை நானே ஒட்டினேன். காரணம் அந்த சந்தர்ப்பத்தில் எமக்கிருந்த சவால் ரணிலே, அவரால் முடியுமென நாம் நம்பினோம். அதனாலேயே நாங்கள் சுவரொட்டிகளை ஒட்டினோம்." எனக் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.