Header Ads



உளுத்துப்போன ஒப்பந்தம், அமெரிக்கா வெளியேறியது, இஸ்ரேல் வரவேற்பு, ஈரான் எச்சரிக்கை


மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.

ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்இ அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்துகொண்ட இந்த ஒப்பந்தத்தில் தற்போதைய ஜனாதிபதி டிரம்புக்கு முற்றிலும் உடன்பாடு கிடையாது.

இதுதொடர்பாக தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது பற்றி 12 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என கடந்த 1-ம் தேதி டிரம்ப் அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளது என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதனை உளுத்துப்போன ஒப்பந்தம் என்று வர்ணித்துள்ள டிரம்ப், நாட்டின் குடிமகன் என்ற முறையில் அது தமக்கு மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் ஒப்பந்தத்தில் குறைபாடு உள்ளது. எனவேஇ ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக முடிவு செய்துள்ளது என தெரிவித்தார்.

ஏற்கனவே அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறினால் மிகப்பெரிய வருத்தத்தை சந்திக்கும் என ஈரான் அதிபர் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரம்பின் தைரியமான இந்த முடிவை ஆதரிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. Friends Isreal and Saudi are happy about Trump's stupid move.

    ReplyDelete
  2. ஈராக், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிடம் அணு ஆயுதங்கள் இருப்பது, உலக அமைதிக்கு எப்போதும் அச்சுறுத்தல் தான்.
    எனவே அவைகளை அழிக்க USA நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  3. ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா, பிரான்ஸ் கூட்டின் இரண்டாவது நாடகம் ஆரம்பம் முதலாவது நாடகம்: குமைனியை பிரான்ஸிலிருந்து கொண்டு வந்து ஈரானின் தலைவராக ஆக்கி அமெரிக்கா அவருக்கு மரண தண்டனை விதித்ததுடன் ஆரம்பமானது அதன் முடிவில் ஈராக், ஸிரியா, ஆப்கானிஸ்தான், போன்ற நாடுகளை ஈரானிய ஷீஆவுக்கு ஆதரவான நாடுகளாக மாற்றியதுடன், ஏனைய பல முஸ்லிம் நாடுகளில் அரசாங்கத்திற்கு எதிரான பலமான ஆயுதக் குழுக்களை உருவாக்கியது குறிப்பாக லெபனானில் ஹிஸ்புல்லாஹ், யெமனில் ஹீதி போன்றவற்றுடன் உத்தியோகபூர்வமற்ற தீவிரவாத அமைப்புக்களும் உருவாக்கப்பட்டன அதற்கான நிதிகள் பகிரப்பட்டது கதர் ஆரவாரமில்லாமல் ஈரான் மற்றும் துருக்கியின் தொட்டிலானது. எவருடைய உள்ளத்திலும் முஸ்லிம் நாடுகள் பற்றிய நல்லெண்ணம் இல்லாத அளவு துடைத்தெறியப்பட்டது. சர்வதேச ரீதியாக தன் கூட்டாளிகளுடன் இணைந்த பலமான ஊடகக் கட்டமைப்பு ஈரானுக்கு உருவாக்கப்பட்டது, போதைப் பொருள் வியாபாரத்தில் பிரசித்தி பெற்றது.

    இனி இந்தக் கூட்டாளிகளின் இரண்டாவது நாடகம் ஆரம்பமாகியுள்ளது... என்ன நடக்கப்போகிறது யார் இதற்குள் விழப்போகிறார்கள்... இதனால் எத்தனை பேர் தங்களின் ஈருலக வாழ்க்கையையும் இழக்கப்போகிறார்கள் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    அல்லாஹ் நமது ஈமானைப் பாதுகாத்து நயவஞ்சவகர்கள் பற்றிய தெளிவைத்தருவானாக.

    ReplyDelete
  4. முழு உலக நாடுகளும் இவ்விடயத்திள அமேரிக்காவின் போலிக்குற்றச்சாட்டுகளை கண்டித்துள்ளன. ஆனால் இஸ்ரேளும் சவ்திஅரேபியாவும் மாத்திரம் அமேரிக்காவுக்கு ஆதரவாக உள்ளன. முஸ்லிம் நாடுகளை அழிப்பதிள் கூட்டாக செயள்படுபவர்கள் யார் என்பது இன்று தெட்டத் தெழிவாகியுள்ளன.

    ReplyDelete
  5. 'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

    என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
    ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை # 34

    ReplyDelete
  6. முதலாவது நாடகம் அமெரிக்க தூதரகத்தை அழிக்கிறோம் என்ற பெயரில் இடம்பெற்றது, இரண்டாவது நாடகம் இஸ்ரேலை அழிக்கிறோம் என்ற பெயரில் இடம்பெறுகிறது. இரண்டின் நோக்கமும் ஒன்றுதான். முஸ்லிம்களை அழிப்பது.

    ReplyDelete

Powered by Blogger.