Header Ads



காவி திருடர்கள் கூறுவதை, மக்கள் ஏற்கமாட்டார்கள் - பிமல்

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது தொடர்பான 20வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் குறித்து பௌத்த மகா சங்கத்தினர் கொண்டுள்ள நிலைப்பாட்டை மக்கள் 5 தேர்தல்களில் நிராகரித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் பிரிவினைவாத தேவையை நிறைவேற்றும் என்பதால், அதனை தோற்கடிக்க அனைவரும் இணைய வேண்டும் என தேசிய பௌத்த சங்க சபை நேற்று வலியுறுத்தியிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைக்கு அமையவே மக்கள் விடுதலை முன்னணி இந்த திருத்தச்சட்டத்தை கெண்டு வர தயாராகி வருவதாக மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குற்றம் சுமத்தியிருந்தார்.

அவரது இந்த குற்றச்சாட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க பதிலளித்துள்ளார்.

கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை 5 முறை மக்கள் வழங்கிய ஆணைக்கு அமையவே நாங்கள் 20வது திருத்தச் சட்டத்தை கொண்டு வருகின்றோம்.

நாட்டுக்கு நன்மை ஏற்படுவதற்காக நாங்கள் உதவுகிறோம். திருடர்களுக்காக பிச்சை பாத்திரம் ஏந்திச் செல்லும் காவி திருடர்கள் கூறுவதை மக்கள் ஏற்பார்கள் என நான் கருதவில்லை. எவரும் இதனை எதிர்க்கலாம், ஆனால், அவர்கள் கூறுவது தான் நடக்க வேண்டும் என வற்புறுத்த முடியாது என பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.