Header Ads



நிலாமின் முதல் சம்பளம், ஆனந்த சுதாகரனின் குடும்பத்திற்காக தியாகம் (படங்கள்)


யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் . நியாஸ் நிலாம் அவர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. தனது முதல் மாதச் சம்பளத்தில் ஆனந்த சுதாகரனின் மழலைச்செல்வங்களின் குறைத்தீர்த்தார்.

இன்று (2018-05-11)அகில இலங்கை மக்கள் காங்கிரசின் யாழ் கிளைத்தலைவரும், யாழ் மாநகர சபை உறுப்பினருமாகிய கே.எம்.நிலாம் அவர்கள் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் வீட்டிற்கு  விஜயம் செய்தார்.

அக்குடும்பத்திற்கு தனது ஆறுதலை கூறியததுடன் அப்பிள்ளைகளை தனது வாகனத்தில் ஏற்றி கிளிநொச்சி நகர்ப்புற கடைகளுக்கு அழைத்துச் சென்று அங்கு பிள்ளைகள் தாம் விரும்பி கைகாட்டியவற்றை தன் பிள்ளைகள் போல் எண்ணி வாங்கிக் கொடுத்ததுடன், மேலதிமாக  வீட்டில் கல்வி கற்பதற்கான தளபாடங்கள், மகள் சங்கீதா ஆசைப்பட்டுக்கேட்ட பாடசாலைக்குச் செல்ல துவிச்சக்கர வண்டி மற்றும் பாதனிகள், வீட்டில் அணிவதற்கான ஆடைகள் என்பனவற்றை வாங்கி கொடுத்தார்.

அவர்களின் தந்தையின் விடுதலைக்காக தனது குரல் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும் என்றும் தெரிவித்துள்ளதுடன், இந்த நிலை வேறு எந்த பிள்ளைகளுக்கும் ஏற்படக்கூடாதென்று தனது ஆதங்கத்தை தெரிவித்ததுடன், ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக இறைவனைப் பிரார்திப்பதுடன் இது தொடர்பாக கட்சியின் தேசியத் தலைவரும், அமைச்சருமான கௌரவ ரிசாத் பதியூதினூடாக அரச தலைவருடன் தொடர்ந்தும் இவரின் விடுதலைக்காக பேசுவதாக உறுதி படத்தெரிவித்து பிள்ளைகளின் மன மகிழ்வைப்பார்த்து மன நிறைவுடன் திரும்பினார்.



3 comments:

  1. மாஷாஅல்லாஃ.அல்லாஃ உங்களுக்கு நீண்ட ஆயுலைத்தருவானாக ஆமீன்

    ReplyDelete
  2. நல்லதொரு முன்மாதிரி. இறைவன் பொருந்திக்கொள்ளட்டும், சுதாகரனுக்கும் விடுதலை கிடைக்கட்டும்.ஆமீன்.

    ReplyDelete
  3. எங்கே அனுசந்தும் ,அந்தோனியும் ?

    ReplyDelete

Powered by Blogger.