May 13, 2018

பௌத்த விகாரையில் பாலியல், வல்லுறவு செய்த பிக்கு கைது

விகாரைக்கு தானம் கொண்டு சென்ற பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் முன்னணி செயற்பாட்டாளரான சீகிரியே தம்மிந்த தேரரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பிக்கு இதற்கு முன்னரும் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், நீதிமன்றத்தினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என தெரியவருகிறது.

இந்த சம்பவம் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்துள்ளதுடன் அப்போது அவர் தம்புள்ளை பிரதேச சபையின் உறுப்பினராக இருந்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச அணியில் அங்கம் வகித்த காரணத்தினால், கிடைத்த அரசியல் ஆதரவை பயன்படுத்தி, நாகலவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

இதன் பின்னர் தனது அரசியல் பலத்தை காட்டி அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று பெண்ணின் கணவனை திட்டி, தொடர்ந்தும் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார்.

மிகவும் வறிய நிலையில் வாழும் இந்த குடும்பத்தினர் காவி உடைக்கு கொடுக்கும் மரியாதை மற்றும் தேரரின் அரசியல் பலத்தின் மீதுள்ள அச்சம் காரணமாக பொறுமையாக இருந்துள்ளனர். பிக்குவால் தொடர்ந்தும் கொடுக்கப்படும் தொல்லை தாங்க முடியாது அது குறித்து சீகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தம்மை தொந்தரவு கொடுக்காது வாழ விடுமாறு பிக்குவிடம் கூறுமாறு இந்த குடும்பத்தினர் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.

ஏன் அப்படி கூறுகிறீர்கள் என பொலிஸார் கேட்ட போது, சம்பவங்கள் குறித்து குடும்பத்தினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் பிக்குவை கைது செய்து தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பிக்கு, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதுடன் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து பிணையில் விடுவித்துள்ளது.

இந்த நிலையில், சீகிரிய -நாகலவெவ பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான மூன்று பிள்ளைகளின் தாய், கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி மதியம் தானத்தை எடுத்துக்கொண்டு கிராமத்தில் உள்ள விகாரைக்கு சென்றுள்ளார்.

அப்போது சந்தேக நபரான பிக்கு அந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

இது சம்பந்தமாக பெண் சீகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பொலிஸ் பிக்குவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

பிக்கு இதற்கு முன்னர் இதே குற்றத்தை செய்துள்ளதை கவனத்தில் கொண்டு அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

10 கருத்துரைகள்:

Buddhist country.. Sinhalay Style... Shame on them they better follow latest Philosophy and get marry and live life. not the old Buddhist Philosophy Its very Old.

திருமணம் கொள்ளாமல் வாழ முடியாது என்பதை இதன் மூலம் தெளிவாக இருக்கின்றன .மனிதனால் உருவாக்கப்பட்ட மதம் தெளிவில்லை அது ஒருசாராருக்கு சரியென்றாலும் இன்னொரு சாரருக்கு பொருந்தாது.அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதம் இஸ்லாம் ஒன்று மட்டுமே அல்ஹம்துரில்லா!

இலங்கை பௌத்த குருமாருக்கெல்லாம் நல்ல வேட்டைதான். கரும்பு தின்ன கூலியும் பெறுகின்றது போல

These kind of incidents are should be handled by Balu Sena and must be trialed in Balu Sena's head office.

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் துறவறம் மேற்கொள்ள விரும்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைத் தடுத்துவிட்டார்கள். அவருக்கு (மட்டும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால், (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம்.

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 16. பிரிவு: திருமணம்
ஹதீஸ் எண் 2717
www.tamililquran.com/hadhees

இந்த பதிவை இங்கே இடுவதன் அர்த்தம் என்ன ?


அவன் தப்பு செய்கின்றான், அவனோட சமூகம் தண்டிக்கட்டும் - நமக்கு எதுக்கு நாமதான் பன்சலை போற இல்லையே

Dear Brothers Do not generalize you comments... These kind of incidents happen in every society. I have seen such cases from few of our religious preaching people also.

So let us limit the case individuals, you comments can only increase hate but not peace.

முதலாவது வேலையா இந்த பிக்கு எல்லாருக்கும் ஆண்மை உறுப்பை சத்திர சிகிச்சை மூலம் அகற்றனும்.. அப்ப தான் இவர்கள் கொள்கையை நடை முறை படுத்த முடியும்.

I am proud to say I am budhist because I can rape women, can looting, killing human being, hate speech against Minority, violating law, and No one take decision against me. because I am BUDHA PUTHRA.

நல்ல செய்தி, வாசகர்களுக்கு அறியப்படுத்தியமைக்கு நன்றி.

Post a Comment