Header Ads



கோதா­ப­யவின் வெற்­றிக்கு, முஸ்லிம்­களின் ஆத­ரவு தேவை­யில்லை

முன்னாள் பாது­காப்பு செயலாளர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வா­ராயின் சிங்கள பெரும்­பான்மை மக்­களின் ஆத­ரவு மாத்­திரம் போது­மா­னது. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவு தேவை­யில்லை என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் கலா­நிதி குண­தாச அம­ர­சே­கர தெரி­வித்­துள்ளார்.

ஒன்­றி­ணைந்த எதிர்­க்கட்­சியின் பெரும்­பான்­மை­யான உறுப்பி­னர்கள் கோதா­பய ராஜ­ப­க் ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மிறக்கும் நிலைப்­பாட்­டிலே உள்­ளனர். இவர்­களின் தீர்­மா­னத்­திற்கு  எமது இயக்­கத்தின் உறுப்­பினர்கள் பூரண ஆத­ர­வினை வழங்­குவார்கள் எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்,

தற்­போது நாட்டில் சர்­வா­தி­கார ஆட்­சி­யும், தான்­தோன்­றித்­த­ன­மான முறை­யற்ற நிர்­வா­கங்­க­ளுமே அனைத்து துறை­க­ளிலும் இடம்பெற்று வரு­கின்­றன. தேசிய கலா­சாரம் தொடர்ந்து அழிவு நிலை­யிலே காணப்­ப­டு­கின்­றது. இவற்­றிற்­கெல்லாம் நிரந்­தரத் தீர்வு கிடைக்­கப்­பெற வேண்­டு­மாயின் பல­மான ஆட்­சி­யாளன் ஆட்­சிக்கு வர­வேண்டும்.

தேசிய அர­சாங்­கத்தின் இறுதி அத்­தி­யாயம் 2020 ஆம்  ஆண்­டுடன் முடி­வ­டை­ந்து விடும். எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் கூட்டு எதி­ர­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோதா­பய ராஜ­ப­க் ஷவை  கள­மி­றக்க வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டிலே கூட்டு எதி­ர­ணியின் பெரும்­பான்மை  உறுப்­பி­னர்கள் உள்­ளனர்.இதன் மூலம் எதிர்­கா­லத்தில் பாரிய மாற்­றங்கள் தோற்றம்பெறும்.

கோதா­பய ராஜ­பக் ஷ ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்றி பெற தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவு தேவை­யற்­ற­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. நாட்டில் பெரும்­பான்மை மக்­களின் ஆத­ர­வினை அடிப்­படையாகக் கொண்டே வெற்றிபெற முடியும். முறை­யற்ற நிர்­வா­கத்­தினை மேற்­கொள்ளும் தேசிய அர­சாங்கம் தோற்றம் பெறு­வ­தற்கு முக்­கிய காரணம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் ஆத­ர­வுகள் 2015 ஆம் ஆண்டு ஒரு­த­லைப்­பட்­ச­மாக கிடைக்­கப்­பெற்­ற­மையே.

தற்­போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளி­டையே  இன நல்­லி­ணக்கம் பாரிய வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. சிறு­பான்மை மக்­களை நம்பி கடந்த தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ செய்த தவ­றினை மீண்டும் எவரும் செய்ய கூடாது. பெரும்­பான்மை மக்­களின் ஆத­ர­வினை அடிப்­ப­டை­யாகக் கொண்டே 2020 ஆம் ஆண்டு தேர்­தலில் பெற்றிபெற ­மு­டியும்.

தமிழ் மற்றும்  முஸ்லிம் மக்­களின் ஆத­ர­வுடன் தேர்­தலில் வெற்றி பெற்றால் அவர்கள் தொடர்ந்து அர­சாங்­கத்­திற்கு தமது தேவை­களை மையப்­ப­டுத்தி அழுத்­தங்­களை பிர­யோ­கிப்­பார்கள். தற்­போது வட­கி­ழக்கு மக்­களின் பிரச்­சி­னைகள் சர்­வ­தேச மட்டம் வரை தாக்கம் செலுத்தி வரு­கின்­றது. தேசிய அர­சாங்­கமும் தேர்­தலின் போது அனை­வ­ருக்கும் வாக்­கு­று­தி­ய­ளித்து தற்­போது எவ­ரது விருப்­பத்­தினை நிறை­வேற்­று­வது என்ற தொடர்பில் முரண்­பட்டு கொண்­டுள்­ளது.

சிறு­பான்­மை­யின மக்கள் சீரிய சிந்­த­னை­க­ளுடன் நாட்டின் நலன் கருதி 2020 ஆம் ஆண்டு தீர்வு காண எண்ணினால் கூட்டு எதிரணியினருக்கு ஆதரவு வழங்குவார்கள்.  மக்களின் வாக்குகளை பெறும் நோக்கில் தேசிய அரசாங்கம் முன்வைத்த பொய்யான வாக்குறுதிகளை போன்று கூட்டு எதிரணி ஒருபோதும் பொய்யான வாக்குறுதிகளை முன்வைத்து  சிறுபான்மை மக்களை ஏமாற்றாது என தெரிவித்தார்.
-Vidivelli

4 comments:

  1. கற்பனை உலகின் அரசியல் பெற்றியை நாடி முன்னோக்கிச் செல்லும் கற்பனைவாதிகளின் கோட்பாடு.

    ReplyDelete
  2. கற்பனை உலகின் அரசியல் வெற்றியை நாடி முன்னோக்கிச் செல்லும் கற்பனைவாதிகளின் கோட்பாடு.

    ReplyDelete
  3. Good to know this before the election. This stupid doesn't want Muslims or Tamil's votes and they will not fulfill our aspirations.

    ReplyDelete
  4. யார் ஆட்சியமைத்தாலும் தமிழர்கள் ஆதரவு கொடுப்பதில்லை. ஆனாலும் இது நாட்டுக்கு நல்ல விடயம் தான்.

    ஆனால், முஸ்லிம் மக்களே நீங்கள் இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயந்துவீடாதீர்கள். உங்கள் தலைவர்கள் லேசுபட்டவர்கள் இல்லை. சிங்களவர்களின் காலில் விழுந்து, கெஞ்சி, வணங்கி, ஆட்சியில் ஒட்டிகொள்வார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.