Header Ads



வியாழக்கிழமை மைத்திரிக்கு, மற்றொரு 'சோதனை'

கூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா என்று, தீர்மானிக்கும் வாக்கெடுப்பு ஒன்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடத்தப்படவுள்ளது.

எதிர்வரும், 17ஆம் நாள் சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடத்தப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்திலேயே, கூட்டு அரசாங்கத்தில் நீடிப்பதா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் எனக் கோரும் முன்மொழிவு ஒன்றை கட்சியின்  மூத்த துணைத் தலைவரான  ஜோன் செனிவிரத்ன சமர்ப்பிக்கவுள்ளார்.

இதன் அடிப்படையிலேயே வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டு அரசாங்கத்தில் நீடிப்பது தொடர்பான விவகாரத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. ஏற்கனவே 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.