Header Ads



ஈரானியர்களை இலங்கைக்கு, அழைக்கிறார் ஜனாதிபதி


ஈரானுக்கான இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈரானைச் சேர்ந்த முதலீட்டாளர்களை, இலங்கைக்கு வந்து முதலிடுமாறு, நேற்று (13) அழைப்பு விடுத்தார். 

ஈரான் நேரப்படி நேற்று (13) காலை அங்கு சென்ற ஜனாதிபதி சிறிசேனவுக்கு, தலைநகர் தெஹ்ரானிலுள்ள சடாபாட் வரலாற்று - கலாசார வளாகத்தில் வைத்து வரவேற்பளிக்கப்பட்டது.

அங்கு வழங்கப்பட்ட மரியாதை அணிவகுப்பை, ஈரான் ஜனாதிபதி ஹஸன் றௌஹானியுடன் இணைந்து, ஜனாதிபதி சிறிசேன பார்வையிட்டார். 

அதைத் தொடர்ந்து, இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றதோடு, அதன் முடிவில், இணைந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. 

அங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி சிறிசேன, இரு நாடுகளுக்குமிடையில் 1961ஆம் ஆண்டு முதல் ஆரம்பித்துக் காணப்படும் இராஜதந்திர உறவுகளைச் சுட்டிக்காட்டி, “இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை ஆழப்படுத்துவதற்கு, எங்களது தீர்க்ககரமான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினோம் என்பதைக் கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்” எனத் தெரிவித்தார். 

இரு நாடுகளுக்குமிடையிலான ஒப்பந்தங்களைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அவை அனைத்தையும் அமுல்படுத்துவதில், இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும், இரு நாடுகளின் மக்களும் வணிகர்களும் அடிக்கடி சென்று வருவதற்கு வசதியாக, நேரடி விமான சேவையை உருவாக்க வேண்டுமெனவும் கோரினார். 

தொடர்ந்து அவர், “ஈரான் உட்பட ஏனைய நாடுகளுடன் எமது வர்த்தக, பொருளாதார உறவுகளை அதிகரிப்பதற்காக, முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலிடுவதை ஊக்குவிப்பதற்கான நல்ல வசதிகளை நாங்கள் கருத்திற்கொண்டோம்” என்றும் குறிப்பிட்டார். 

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு உறவை மேலும் மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்துக் கருத்துத் தெரிவித்துடன், இலங்கைத் தேயிலையை அதிகளவு கொள்வனவு செய்கின்ற நாடுகளுள் ஈரானும் ஒன்று எனவும் குறிப்பிட்டார். 

அத்தோடு, ஈரானிடமிருந்து மேலும் அதிகமான எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான கோரிக்கையை, இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 

7 comments:

  1. If We Learn the History of Islam from Authenticated sources and Teach it to our kids... we have nothing to worry about their visit as it is not going to shaken us at all.

    The issue is... How many of us know, why the AQEEDA of SHIA is wrong? We simply say SHIA are not following correct ISLAM. BUT Do we know WHY THEY ARE WRONG? Or what is correct Islam as it was with Muhammed (sal) and his companions and Imaams ?

    Let us learn our self and then teach our kids and educate our society about the CORRECT form of ISLAM from authentic sources that stick to the way of SALAFUS Saliheens ( the 3 successful generations).

    Insha Allah, If our foundation is strong nothing can harm us.

    Allah knows best.

    ReplyDelete
  2. What can Srilanka do if Saudi of Wahhabism take money from muslims in Hajj and give it to Donald Trump and his Daughter.
    Sri lanka is a Poor country trying to develop its economy through collaboration with Iran or with any other country,This her right, If You don't like this collaboration go to Saudi Arabia and work as Slave there.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. முதலீட்டுக்கு ஷீஆ வந்தாள் என்ன யூதன் வந்தா என்ன நாம நமது கொள்கையில் உறுதியாக இருந்தா சரி.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. In my opinion JM is creating an unwanted issue here by publishing inappropriate heading. Please withdraw this heading .

    ReplyDelete
  7. Jaffna Muslim ... If you do leave inappropriate articles and titles creating division... you will be responsible for what is going to come after...

    Please.. Do follow ethics and code in publishing articles in your website.. Do not think you as best Tamil website for Muslim by publishing every garbage. Keep a standard as a descent news site. If you fail..repeatedly.. No question good readers will mover away from you.

    ReplyDelete

Powered by Blogger.