Header Ads



உண்மையான முஸ்லிம் மாணவர்கள், பகடிவதை செய்யமாட்டார்கள்

இன்றைய காலகட்டத்தில் பேசுபொருளாகியுள்ள விடயம் பல்கலைக்கழகங்களில் நடக்கின்ற பகடிவதை. நிச்சயமாக பல்கலைக்கழகங்களில் ஒட்டுமொத்த மாணவர்களாலும் இந்த பகடிவதை மேற்கொள்ளப் படுவதில்லை என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.

பல்கலைக்கழகங்களில் ஒரு சிலர்தான் Ragging செய்கிறார்கள் ஏனையவர்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்று இனவாத செயற்பாடுகளை கடந்து செல்வது போல நாம் கடந்து செல்ல முடியுமா என்றால், இல்லை என்பதே உண்மை. 

பொதுவாக பல்கலைக்கழகங்களில்இரண்டாம் ஆண்டு (2nd year) மாணவர்களே பகடிவதைகளில் ஈடுபடுவர். பகடிவதைகளினால் புரிந்துனர்வுகளை ஏற்படுத்த முடியும் என்பது முட்டாள்தனமான சிந்தனை.

புதிதாக வருகின்ற எல்லா மாணவர்களும் ஒரே மனநிலையில், ஒரே குடும்ப பின்னணியில் இருந்து வருவதில்லை. எத்தனையோ மாணவர்கள் எத்தனையோ வகையான கனவுகளுடனும் எதிர்பார்க்கையுடனுமே வருவார்கள். 

மரியாதை யாக வளர்ந்த எத்தனையோ பெண் பிள்ளைகள் பகடிவதை என்ற பெயரில் அவமானப் படுத்தப்படுவது, மாணவர்கள் மிருக வதை போல் தாக்கப்படுவது இதெல்லாம் இன்னும் எங்கோ ஒரு மூலையில்  நடந்து கொண்டுதான் இருக்கிறது. இரவு நேரங்களில் விடுதிகளில் இருப்பது பாதுகாப்பு இல்லை என்று தங்களால் தாங்கமுடியாத செலவாகினும் எத்தனையோ மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வெளியில்  தங்குகின்ற அவலமும் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றது.

பல்கலைக்கழகங்களில் நடக்கின்றன இந்த பகடிவதைகளை நிறுத்த முடியாதா? நிச்சயமாக நிறுத்த முடியும். நாங்கள் பகடிவதையை அனுபவித்தவர்கள் புதிதாக வருகின்ற மாணவர்களுக்கும் அதனை செய்வோம் என்ற குறுகிய சிந்தனைக்குள் ஆட்படாத ஒரு ஆண்டு மாணவர்கள் நினைத்தால் நிச்சயமாக அதனை நிறுத்த முடியும்.

ஒரு சிறிய உதாரணம். 
ஸ்ரீ ஜயவர்த்தனபுற பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்களை முஸ்லிம் மாணவர்கள் பகடிவதை செய்வதில்லை அத்துடன் பெரும்பான்மை மத மாணவர்களிடம் மாட்டிக் கொடுப்பதுமில்லை என்ற கலாச்சாரம் பின்பற்றப் படுகின்றது. இந்நடைமுறை ஒன்றும் 1980 களிலோ 1990 களிலோ உருவாக்கப்பட்டதல்ல. 2008/9 மாணவர்களால் தாங்கள் பகடிவதையை அனுபவித்தாலும் வருகின்ற புதிய மாணவர்களுக்கு அந்த வேதனையை கொடுப்பதில்லை என்ற அவர்களின் உயர்ந்த மணப்பாங்கின் மூலமே உருவாக்கப்பட்ட கலாச்சாரமாகும்.

பெரும்பான்மை சமூகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தின் ஒரு ஆண்டு மாணவர்களால் Ragging Free கலாச்சாரத்தை உருவாக்க முடியுமானால் தமிழ் பேசும் மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் ஏன் அந்த கலாச்சாரத்தை அமுல்படுத்த முடியாது? 

இன்னும் இன்னும் அடுத்த மாணவர்களின் மனநிலையை அறியாது பகடிவதை என்ற பெயரில் நம்மை நாமே வதைத்துக் கொள்ள போகின்றோமா ?? பல்கலைக்கழக மாணவர்களே சற்று சிந்தியுங்கள். நமது எதிர்காலம் நம் கைகளில். படித்த சமூகம் என்பதை பெயரில் மாத்திரம் வைத்துக் கொண்டு முட்டாள்களாகவே நமது எதிர்காலத்தை எதிர் கொள்ள போகின்றோமா??

இரண்டாம் வருட (second year) மாணவர்களே!
பகடிவதை இல்லாத பல்கலைக்கழக வாழ்க்கையை எதிர்கால சந்ததியினருக்கு தாரை வார்க்க உறுதி கொள்வோம்.

Sameen Mohamed Saheeth
(University of Sri Jayawardenepura)

3 comments:

  1. காவாலி ரவுடி வேசி தனத்திற்கு பெயர் ராகிங்?

    இப்படிப்பட்டவர்களை உடணடியாக கைது செய்ய வேண்டும்

    ReplyDelete
  2. கட்டுரை நல்ல தான் இருக்கு. அதற்காக, 90% முஸ்லிம் மாணவர்களை “உண்மையான முஸ்லிம்கள் இல்லை” என கூறுவது அநியாயமாக படவில்லையா?

    ReplyDelete

Powered by Blogger.