Header Ads



"யாருக்கு முதுகெலும்பு இருக்கின்றது, என்பதை அறிய காத்துக்கொண்டிருக்கின்றோம்"

அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம் அந்த கட்சியின் முக்கியமான மத்திய செயற்குழுக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சேஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -16- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாளை நடைபெறும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் முக்கியமான தீர்மானத்தை எடுக்க அவர்களுக்கு முதுகெலும்பு இருக்க வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாருக்கு முதுகெலும்பு இருக்கின்றது என்பதை அறிய நாங்கள் காத்துக்கொண்டிருக்கின்றோம் எனவும் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, நாட்டில் விவசாய தொழில் துறை பெரிய நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட போகிறார் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள பந்துல குணவர்தன, ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்தை நாங்கள் கேலிக்காகவும் பேசியதில்லை. எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியை பெறும் எனவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.