Header Ads



அதிநவீன சர்வதேச விமான நிலையம் - பாகிஸ்தான் பிரதமர் திறந்து வைத்தார்


பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அதிநவீன சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி இன்று திறந்து வைத்தார். 

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பெனாசிர் பூட்டோ விமான நிலையத்தில் பயணிகளுக்கு வசதிகள் குறைவும், அதிக அளவிலான வந்து, செல்ல முடியாதவாறு இட நெருக்கடியும் ஏற்பட்டதால் மிகப்பெரிய புதிய விமான நிலையம் ஒன்றை இஸ்லாமாபாத் நகரில் அமைக்க கடந்த 1980-ம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. 

இந்த அதிநவீன சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்ப்பட்டது. பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. சடார் மற்றும் ராவால்பிண்டி ஆகிய இரு நகரங்களை இணைத்து இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. 

இந்த விமான நிலையம் முதல்கட்டமாக ஆண்டுக்கு ஒன்றரை கோடி பயணிகள் உபயோக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விரிவாக்கப்பணிகள் முடிவடைந்த சுமார் இரண்டரை கோடி பயணிகள் பயன்படுத்தலாம். 

ஒய் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமானநிலையம் பாகிஸ்தானின் சர்வதேச விமானங்களில் மிகப்பெரியதாக இருக்கும். இதன் மூலம் எராளமான மக்கள் பயன்பெறுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த புதிய விமான நிலையத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி இன்று திறந்து வைத்தார். 

இவ்விழாவில் பேசிய  பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி, முல்தான், பைசலாபாத், குவெட்டா மற்றும் பெஷாவர் ஆகிய நகரங்களிலும் விமான நிலைய கட்டுமானப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார். 

முறைப்படி அவர் இன்று திறந்து வைத்தாலும் வரும் வியாழக்கிழமையில் இருந்துதான் இங்கு விமானங்களின் வருகையும், புறப்பாடும் நடைமுறைக்கு வரும். எனினும், திறப்பு விழாவின்போது இன்று இங்கு தரை இறங்கிய பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானத்தின் பைலட், ஜன்னல் வழியாக பச்சை கொடியை காட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

No comments

Powered by Blogger.