Header Ads



தமிழருக்கு அநீதி, முஸ்லிம் ஊடகவியலாளரின் முன்மாதிரி

-பாறுக் ஷிஹான்-

ரயில் ஊழியரின் இனத்துவேச கருத்துளினால்,  யாழ்ப்பாணம் ஊடகவிலயாளருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை சமூக ஊடகம் வாயிலாக அறிந்த முஸ்லீம் பெண் ஊடகவியலாளர் கொழும்பு கோட்டை பிரதம புகையிரத அத்தியட்சகர்  ஊடாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதன் காரணமாக சம்பந்தப்பட்ட ரயில் ஊழியர்  தற்காலிக பணி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணம் வலம்புரிப் பத்திரிகையில் ஊடகவியலாளராகப் பணியாற்றும் உதயராசா சாளின் நேற்றுமுந்தினம்  (07) காலை 06.30 மணி புகையிரத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துள்ளார்.

புகையிரதம் வவுனியாவை வந்தடைந்தபோது பிரித்தானியாவை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் வவுனியா புகையிரத நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார். இதன் போது குறித்த புகையிரதத்தில் பெருமளவில் சன நடமாட்டம் இல்லாமையால் இதனை பயன்படுத்தி கொண்ட புகையிரதத்தில் பணியாற்றுகின்ற சிட்டை பரீட்சிக்கும் ஊழியர் ஒருவர் குறித்த பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். இதன் போது குறித்த ரயில் ஊழியரிடம் நியாயம் கேட்ட ஊடகவியலாளரை இனத்துவேச கருத்துக்களால் அச்சுறுத்தியமை தொடர்பான காணோளி வைரலாக சமூக ஊடகங்களில் வெளிவந்த நிலையில் மட்டக்களப்பு ஊடகவியலாளரான காலிதா பேகம் தனிப்பட்ட முறையில் தன் சக ஊடகவியலாளருக்கு நிகழ்ந்த அநீதியை சம்பந்தப்பட்ட அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு ஒன்றை பெற்று கொடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பெண் ஊடகவியலாளர் தனது கருத்தில் இது சம்பந்தமாக  கொழும்பு கோட்டைபிரதம புகையிரத அத்தியட்சகரை சந்தித்து நான் மட்டக்களப்பு ஊடகவியலாளர் என்ற வகையில் யாழ் ஊடகவியலாளருக்கு நடந்த அசம்பாவிதத்துடன் கூடிய மனித உரிமை மீறல் சம்பவத்தை விளக்கி முறைப்பாட்டை தெரிவித்தேன்.உடனடியாக பிரதம புகையிரத அத்தியட்சகர் அக்குறிப்பிட்ட பணியாளரான  ஜயநாத் பெரேரா என்பவரை  தற்காலிக பணி நீக்கம் செய்ய  உத்தவு பிறப்பிக்கப்பட்டதாக  தன்னிடம்  கூறினார்.இது தவிர மக்கள்    ஊடகவியலாளர்கள்  ஒற்றுமை மனிதாபிமானம் இவ்வாறான சந்தர்ப்பங்களில்  வெளிப்படுத்துவதன் டாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பலாம்   என கூறினார்.

3 comments:


  1. Well done sister!

    முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 4:135)

    ReplyDelete
  2. Very good and we are always with you

    ReplyDelete
  3. You did a good job on time in this difficult situation almighty Allah bless you

    ReplyDelete

Powered by Blogger.