Header Ads



மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும், ராஜாளிப் பறவையும்

அல்லாமா நைஸாபூரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும், யூஷஃ இப்னு நூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ஓரிடத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, உருவ அமைப்பில் சிட்டுக்குருவியைப் போன்று இருந்த வெள்ளைப் பறவை ஒன்று வேகமாக சிறகடித்துக் கொண்டு, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இருப்பிடத்தை வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் பதறித்துடித்தவாறு “அல்லாஹ்வின் நபியே! என்னை ராஜாளிப் பறவை ஒன்று துரத்திக் கொண்டு வருகிறது. அதன் தீங்கிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்கு நீங்கள் அடைக்கலம் தாருங்கள்!" என்றது.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தங்களது மேலாடையில் ஒளிந்து கொள்ளுமாறு அந்த வெள்ளைப் பறவையிடம் கூறினார்கள்.

அதுவும் ஒளிந்து கொண்டது. சற்று நேரத்தில் ராஜாளியும் அங்கு வந்து சேர்ந்தது. கொஞ்ச நேரம் அங்கும் இங்கும் பறந்து திரிந்து தேடியது. பின்னர், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மேலாடையில் ஒளிந்து கொண்டிருப்பதை வெளியே தெரிந்து கொண்டிருக்கிற அதன் இறகை வைத்து கண்டு பிடித்தது.

நேராக, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்த ராஜாளி “அல்லாஹ்வின் நபியே! ஒளித்து வைத்திருக்கிற அந்த வெள்ளைப் பறவையை வெளியே விட்டு விடுங்கள்!” என்றது.

அதற்கு, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “ஒளித்து வைக்கவில்லை, மாறாக, நான் அதற்கு அடைக்கலம் தந்திருக்கின்றேன்” என்றார்கள்.
அப்போது, ராஜாளி “அல்லாஹ்வின் நபியே! எங்களின் உணவாக அல்லாஹ் இது போன்ற சிறிய பறவைகளைத் தான் அமைத்துத் தந்திருக்கின்றான். ஆகவே, என்னுடைய உணவை என்னிடம் கொடுத்து விடுங்கள்” என்று வேண்டி நின்றது.

அதற்கு, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பசியும், உணவும் தான் உன்னுடைய பிரச்சனை என்றால் நான் வைத்திருக்கும் ஆட்டு மந்தைக்கு என்னோடு வா! உனக்கு விருப்பமான கொழுத்த ஆட்டை எடுத்துக் கொள்! தயவு செய்து அடைக்கலம் பெற்றிருக்கிற வெள்ளைப் பறவையை வெளியே விட நிர்பந்திக்காதே!” என்றார்கள்.

அப்போது, ராஜாளி “ஆட்டு இறைச்சியெல்லாம் எனக்கு சரி பட்டு வராது” என்றது. அதற்கு, மூஸா (அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “அப்படியானால் என்னுடைய தொடைக் கறியை உனக்கு அறுத்ததருகிறேன் நீ உன் பசியைப் போக்கிக் கொள்” என்றார்கள்.

அப்போது, ராஜாளி “மனித உடலில் எங்கள் இனத்திற்கு மிகவும் பிடித்த பாகம் கண்கள் தான்” வேண்டுமானால் உங்களின் கண்களைத் தாருங்கள்” என்றது.

அதற்கு, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உடனடியாக கீழே படுத்து விட்டு “இதோ என் இரு கண்கள்! இரண்டையோ, இரண்டில் ஒன்றையோ எடுத்துக் கொள்! என்றார்கள். ராஜாளி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்பின் மீது வந்து அமர்ந்தது.

இதுவரை இந்த உரையாடலை சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்த யூஷஃ இப்னு நூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ”மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களே! கண் என்பது அல்லாஹ் தந்த மாபெரும் அருட்கொடையாகும்! இந்த கண் இல்லை என்றால் ரிஸாலத்தை எப்படிக் கொண்டு போய் மக்களிடம் சேர்ப்பீர்கள்! ஒரு பறவைக் கேட்கிறது என்பதற்காக இப்படியெல்லாம் நடந்து கொள்வது எனக்கு சரியாகப் படவில்லை. நாளை மறுமையில் அல்லாஹ் கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள்?” என்று கேட்டார்கள்.
இந்த உரையாடலைக் கேட்டதும் ஒளிந்திருந்த வெள்ளைப் பறவை வேகமாக வெளியேறி பறந்து சென்றது. அதைத் துரத்தியவாறே ராஜாளியும் பறந்து சென்றது.

பறவைகள் சென்ற திசையை நோக்கியவாறே மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கவலையில் ஆழ்ந்திருந்த நேரத்தில் அங்கே ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், மீக்காயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் வருகை தந்தார்கள்.

கவலை தோய்ந்த முகத்திற்கான காரணம் என்னவென்று ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வினவ, நடந்த சம்பவத்தை ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் விடையாக விவரித்தார்கள்.

அப்போது, ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “பதறித்துடித்தவாறு, உயிரைக் காப்பாற்ற உங்களிடம் அடைக்கலம் தேடி வந்ததே அந்த வெள்ளைப் பறவை நான் தான். ராஜாளியாக வந்தது மீக்காயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் அல்லாஹ் தான் எங்களை அந்த உருவத்தில் உங்களிடம் எங்களை அனுப்பினான்” என்றார்கள்.
அப்போது, மூஸா அலைஹிஸ்ஸலாம் “எதற்காக அல்லாஹ் உங்களை அந்த தோற்றத்தில் அனுப்பினான்” என ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கேட்டார்கள்.

அதற்கு, ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “சோதனையான நேரத்தில் நீங்கள் எவ்வாறு இறை நினைவோடும், இறைக்கட்டளைகளை மதித்தும் வாழ்கின்றீர்கள்” என்பதை சோதிப்பதற்காக வேண்டி. அதில் நீங்கள் வெற்றியும் அடைந்து விட்டீர்கள்.

மேலும், அல்லாஹ் உங்களின் இந்த தியாகம், உங்களின் கண்களை அர்ப்பணிக்க முன் வந்த அந்த செயல் அல்லாஹ்வை மிகவும் மகிழ்வித்ததாக தெரிவிக்கச் சொன்னான்” என்று கூறி அங்கிருந்து விடை பெற்றுச் சென்றார்கள்.

(இந்த சம்பவத்தின் அரபி வாசகம் நான் வைத்திருக்கும் ஷாமிலாவின் கிதாப் தொகுப்பில் இல்லை. மேலே இடம் பெற்றிருக்கிற அரபி வாசகத்தை ஒரு வலைப்பூவில் இருந்து காப்பி செய்து போட்டிருக்கின்றேன். ஏனெனில், அரபி வாசகத்திற்கும் அதன் மொழியாக்கத்திற்கும் நீங்கள் வித்தியாசத்தை உணர்வீர்கள் என்பதற்காக இதைத் தெரிவிக்கின்றேன். இன்ஷா அல்லாஹ்.. மூல அரபி முழுமையாக கிடைக்கும் பட்சத்தில் அப்டேட் செய்திடுவேன்.) (நூல்: ரவ்ளத்துல் வாயிளீன் லி இமாமி நைஸாபூரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி)

وأشارت عائشة رضي الله عنها إلى ما جرى في غزوة حمراء الأسد، وهي على نحو ثمانية أميال من المدينة، وذلك أنه لما كان في يوم الأحد، وهو الثاني من يوم أحد، نادى رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ في الناس بإتباع المشركين، وقال: (لا يخرج معنا إلا من شهدها بالأمس) فنهض معه مائتا رجل من المؤمنين. في البخاري فقال: (من يذهب في إثرهم) فانتدب منهم سبعون رجلا. قال: كان فيهم أبو بكر والزبير على ما تقدم، حتى بلغ حمراء الأسد، مرهبا للعدو، فربما كان فيهم المثقل بالجراح لا يستطيع المشي ولا يجد مركوبا، فربما يحمل على الأعناق، وكل ذلك امتثال لأمر رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ورغبة في الجهاد. وقيل: إن الآية نزلت في رجلين من بني عبد الأشهل كانا مثخنين بالجراح، يتوكأ أحدهما على صاحبه، وخرجا مع النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فلما وصلوا حمراء الأسد، لقيهم نعيم بن مسعود فأخبرهم أن أبا سفيان ابن حرب ومن معه من قريش قد جمعوا جموعهم، وأجمعوا رأيهم على أن يأتوا அ3ஞ إلى المدينة
فيستأصلوا أهلها، فقالوا ما أخبرنا الله عنهم:" حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ". وبينا قريش قد أجمعوا على ذلك إذ جاءهم معبد الخزاعي، وكانت خزاعة حلفاء النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وعيبة அ1ஞ نصحه، وكان قد رأى حال أصحاب النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وما هم عليه، ولما رأى عزم قريش على الرجوع ليستأصلوا أهل المدينة احتمله خوف ذلك، وخالص نصحه للنبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وأصحابه على أن خوف قريشا بأن قال لهم: قد تركت محمدا وأصحابه بحمراء الأسد في جيش عظيم، قد اجتمع له من كان تخلف عنه، وهم قد تحرقوا عليكم، فالنجاء النجاء! فإني أنهاك عن ذلك

00000000000000000000000000000000000000000000000000000000000000000000

أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ (2) وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ

“நாங்கள் நம்பிக்கை கொண்டு விட்டோம்” என்று மட்டும் கூறுவதனால் விட்டு விடப்படுவார்கள்; மேலும், அவர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று மக்கள் எண்ணிக் கொண்டார்களா என்ன?” உண்மையில், இவர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அனைவரையும் நாம் சோதித்திருக்கின்றோம்”. (அல்குர்ஆன் 29: 1-2)

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ (214)

“உங்களுக்கு முன் சென்றுவிட்ட (நம்பிக்கையுடைய) வர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலை உங்களுக்கு வராமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடலாமென்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களா? இன்னல்களும், இடுக்கண்களும் அவர்களை அலைக்கழித்தன.

(அன்றைய) இறைத்தூதரும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் “அல்லாஹ்வுடைய உதவி எப்போது வரும்?” என்று கெஞ்சிக் கேட்கும் வரை அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். அப்போது, அவர்களுக்கு “இதோ அல்லாஹ்வுடைய உதவி அண்மையில் இருக்கிறது” என கூறப்பட்டது”. (அல்குர்ஆன் 2: 214)

மாறாக, சிரமத்திற்கும், பிரச்சனைகளுக்கும், சோதனைகளுக்கும் மத்தியில் இறை நினைவோடும், இறை வழிபாட்டோடும் வாழ்ந்து, அருள் நிறைந்த, அல்லாஹ்வின் உதவி நிறைந்த ஓர் உன்னத வாழ்க்கையை அனுபவிக்குமாறு இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

அது தான் உண்மையான வாழ்க்கை என்றும் இஸ்லாம் கூறுகின்றது.

யா அல்லாஹ்! எங்களை உன்னை நினைவு கூர்பவர்களாகவும், உனக்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாகவும், உன்னை அழகிய முறையில் வழிபடக்கூடிய வணக்கசாலிகளாகவும் ஆக்கியருள் புரிவாயாக!

ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

1 comment:

  1. For me I seems like a fake story that has been written by someone called Naisabhuri

    ReplyDelete

Powered by Blogger.