Header Ads



நன்கொடை பேரீச்­சம்­ப­ழத்தை, தாமதிக்காமல் வழங்குங்கள் - இலங்கை கோரிக்கை

நோன்பு நோற்கும் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு வரு­டாந்தம் சவூதி அரே­பியா அர­சாங்­கத்­தினால் நன்­கொ­டை­யாக வழங்­கப்­படும் பேரீச்­சம்­ப­ழத்தை தாம­தி­யாது உரிய காலத்தில் வழங்­கு­மாறு முஸ்­லிம சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் ஊடாக இலங்­கை­யி­லுள்ள சவூதி தூத­ர­கத்­திடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

மே மாதம் நடுப்­ப­கு­தியில் புனித நோன்பு ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளதால் பேரீச்சம் பழங்­களை உரிய காலத்தில் நாடெங்­கி­லு­முள்ள பள்­ளி­வா­சல்கள் மூலம் மக்­க­ளுக்கு விநி­யோ­கிக்க வேண்­டி­யுள்­ள­தா­கவும் ஒரு வார­கா­லத்­துக்குள் பேரீச்­சம்­பழம் கிடைக்­கப்­பெற்­றாலே இது சாத்­தி­ய­மாகும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவித்தார்.

-Vidivelli

5 comments:

  1. If they give then distribute... BUT asking for it?

    Allah knows best.

    ReplyDelete
  2. ஆம் அவசரமாக அனுப்புங்கள்.அந்த ஈச்சப்பழம் இல்லாவிட்டால் இந்த நாட்டில் உள்ள 10 இலட்சம் முஸ்லிம்களுக்கும் நோன்பு பிடிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்பது அரசாங்கத்தில் உள்ள பகடைக்காய்களின் கருத்து. உண்மை என்னவென்றால் பாராளுமன்றத்தில் தொழில் செய்யும் எனது சக அன்பர் ஒருவர் கூறினார். அவருக்கு சென்றமுறை 2கிலோ ஈச்சம்பழம் இலவசமாக பாராளுமன்றத்தில் கிடைத்தது என்றார். நான் கேட்டேன். அந்த ஈச்சப்பழம் எங்கிருந்து வருகிறது, ஏன் உங்களுக்குத் தர வேண்டும் என கேட்டேன். அவர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர். அவருடைய பதில் நான் கடந்த 8 வருடங்களாக பாராளுமன்றத்தில் பணியாற்றுகிறேன். ஆரம்பத்தில் எங்களுக்கு 1கிலோ தந்தார்கள். இப்போது 4வருடங்களாக 2கிலோ தருகிறார்கள். சவூதி அரேபியா ஒவ்வொரு வருடத்துக்கு ஒரு முறை இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்க என இலவசமாக இலங்கை அரசுக்குத் தருகிறது என்றார். அதே நேரம் நான் சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத்தூதரத்தில் பணியாற்றியபோது அப்போதிருந்த சனாதிபதியின் கையொழுத்துடன் ஒரு பெக்ஸ் வந்தது. அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்கள். நீங்கள் கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கு நோன்பு பிடிக்க உதவும் வகையில் ஒரு மெற்றிக் தொன் ஈச்சம்பழம் வழங்குகின்றீர்கள். இப்போதைய தேவையைக் கருத்தில் கொண்டு அதை 2 மெற்றிக் தொன்களாக அதிகரித்துத் தரும்படி சவூதி அரசாங்கத்தைக் கேட்குமாறு அதில் எழுதப்பட்டிருந்தது. அதன்படி நாம் உரிய ஆவனங்களைத் தயாரித்துக் கொண்டு உரிய அமைச்சுக்கு விஜயம் செய்து உரிய அதிகாரியிடம் ஒப்படைத்தேன். அவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். இந்த ஈச்சப்பழம் இல்லாவிட்டால் உங்களால் நோன்பு நோற்க முடியாதா? அதைக் கேட்ட எனக்கு எனது கீழாடை நீங்கிய ஒரு உணர்வு வந்தது. இப்போது 4 மெற்றிக் தொன் ஈச்சம்பழம் இலங்கைக்கு சவூதி அரசு வழங்குவதாகக் கேள்விப்பட்டேன். அந்த ஈச்சம்பழம் செல்லும்வழிகளைப்பற்றி உங்களுடன் கலந்து கொள்ளலாம் என விரும்புகிறேன். எங்கள் பராளுமன்றத்தில் 225 பா.உ. இருக்கின்றனர். அவர்களுக்கு பெரும் பகுதி செல்கிறது. அங்கு உத்தியோகம் செய்யும் அனைத்து பெரும்பான்மையினருக்கும் தாராளமாக விநியோகிக்கப்படுகிறது. அதன்பிறகு பெரிய பெரியவர்களின் காரியாலயத்துக்கு எவ்வளவு தேவை எனக் கேட்கப்பட்டு அவ்வளவும் சரியாக அனுப்பப்பட்டு முடிந்தபின் எஞ்சிய சொச்சங்கள் பஞ்சப்பள்ளிவாயல்களுக்கும் பெரியவர்களின் அடிவருடிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு முதுகெழும்பு இருந்தால் எமக்கு அந்த ஈத்தம்பழம் தேவையில்லை என்று தைரியமாகச் சொல்ல முடியுமானால் அந்த தொகை ஈச்சம்பழம் எமது சகோதரர்களான ரோஹிங்கிய முஸ்லிம்கள்,காஸாவில் துன்பப்படும் முஸ்லிம் சகோதரர்கள், சோமாலியா, லைபீரியா போன்ற கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு சவூதி அரசைக் கேட்டுக் கொள்ளமுடியுமாக இருந்தால் உலகில் பட்டினியால் வாழும் மக்களுக்கு நாம் செய்யும் மிகக் குறைந்த பட்ச உதவியாகவாவது இருக்கும். இந்த முயற்சியில் நாம் எதிர்வரும் காலங்களில் கூட்டாக சேர்ந்து இந்த பணியில் உழைக்க திடசங்கட்பம் பூணுவோமாக.

    ReplyDelete
  3. marathula ippathan pachchakkai. paluthal thane tharuvan.
    en saudi eecham palam illati nonbu pidika iyalatho??

    ReplyDelete
  4. உண்மையைச் சொன்னீர்கள் சகோதரர் @ Professional Translation service அழ்ழாh உங்களுக்கு அருள் புரிவானாக

    ReplyDelete

Powered by Blogger.