May 16, 2018

சவுதி விசுவாசிகள், துருக்கியை தவறாக பிரச்சாரம் செய்கிறார்களா..?

ஆக்கிரமிக்கப்பட்ட குத்ஸ் நகரில் திங்களன்று சாதாரணமாகக் கருத முடியாத ஒரு நிகழ்வு நடந்தேறியது. இந்த புனித இஸ்லாமிய நகரில் அமெரிக்கா தனது தூதுவராலயத்தை திறந்ததே அந்த நிகழ்வு. அதில் குத்ஸ் நகரை சியோனிசமயப்படுத்தும் முனைப்பு காணப்படுகிறது.

அது போலவே பல்வகைப்பட்ட நவீன கனரக ஆயுதங்கள் சகிதமுள்ள சியோனிச ஆக்கிரமிப்புப் படைகளை பலஸ்தீன மக்கள் தமது குருதியை காணிக்கையாக்கி முகம் கொடுத்து வீர காவியம் வரைந்த நிகழ்வும் காசாவில் நடந்தது.

இவை குத்சை விற்றவர்களைத் தவிர முழு உலகையும் உலுக்கிய இரண்டு நிகழ்வுகள். இந்த இரண்டு அத்துமீறல்களையும் ஆரம்பத்திலேயே எதிர்த்து வீரப் பங்களிப்பை துருக்கி செய்திருக்கிறது. ஒன்று இஸ்லாமிய குத்ஸ் மற்றும் அதன் அனைத்து பகுதிகளும் மீதான அமெரிக்க அத்துமீறல். அடுத்தது காசாவில் நிராயுதபாணிகளான சிவிலியன்கள் மீதான ஆக்கிரமிப்பு படைகளின் அத்துமீறல்.

குத்சிலும் காசாவிலும் நடந்தவற்றுக்கு கண்டனமாக இஸ்ரேலிலிருந்து தனது தூதுவரை துருக்கி திருப்பி அழைத்துக் கொண்டது.அத்தோடு நில்லாமல் அமெரிக்காவில் இருந்தும் தனது தூதரை திரும்பப் பெற்றது.

பலஸ்தீன் மற்றும் பலஸ்தீன மக்களுக்காக துருக்கி தனது கொடிகளை அரைக்கம்பத்தில் ஆக்கி மூன்று நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்க அறிவித்துள்ளது. 

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமையத்தின் (OIC) அவசர கூட்டத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை இஸ்தான்பூலில் கூட்டுவதற்கு துருக்கி அழைப்பு விடுத்துள்ளது. சிலவேளை சில நாடுகள் கடந்த இஸ்தான்பூல் கூட்டத்தை தோல்வியுறச் செய்ய செயற்பட்டது போல... இதனையும் தோல்வியடையச் செய்யலாம். எனினும் துருக்கி இந்த விடயத்தில் தனது கடமையை நிறைவேற்றி இருக்கிறது.

அவ்வாறே துருக்கி பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய குற்றங்களை ஆராய ஐ. நா பாதுகாப்புச் சபையை கூட்டுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

துருக்கி குத்ஸ், பலஸ்தீனுக்கு ஆதரவாக இரு மாபெரும் மக்கள் ஒன்று கூடல்களை ஒழுங்கு செய்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை இஸ்தான்பூளில் ஒரு மில்லியன் மக்கள் ஒன்று கூடலும் எதிர் வரும் ஞாயிற்றுக் கிழமை தியார் பகர் மாகாணத்தில் ஒரு மில்லியன் மக்கள் ஒன்று கூடலும் ஏற்பாடு செய்யப்படுள்ளன.

நேற்று குத்சுக்காக , பாலஸ்தீனுக்காக ஆதரவளிக்காத எந்த அரசியல்வாதியும் எந்த மார்க்கவாதியும் துருக்கியில் இருக்கவில்லை. சியோனிச தேசத்தை விசாரணை செய்யும் படியும் இந்த காலகட்டம் வேண்டிநிற்பது போல அமெரிக்காவுடனான உறவை மீள்பரிசீலனை செய்யுமாறும் அவர்கள் கோரினர்.
துருக்கி காசாவுக்கு ஒரு வைத்திய குழுவை அனுப்பியது. அதனுடன் அவசர மருத்துவ உதவிகளையும் அனுப்பியது. காயப்பட காஸா மக்களுக்கு முதலுதவிகளை செய்வதற்கும் அவர்களை தனது பூமிக்கு கொண்டு வந்து தனது வைத்தியசாலைகளில் சிகிட்சையை வழங்குவதற்கு தேவையான முதல் கட்ட ஏற்பாடுகளை செய்யவும் நடவடிக்கை எடுத்தது. 

துருக்கி இஸ்ரேலை ஆக்கிரமிப்பு தேசம் என்று வர்ணித்தது. துருக்கிய ஜனாதிபதி ரஜப் தையிப் அர்துகான் பலஸ்தீன மக்களுக்கும் பாலஸ்தீனுக்கும் ஆதரவைத் திரட்டும் வகையில் உலக தலைவர்களோடு பேசுவதற்கான இராஜதந்திர முன்னெடுப்பை ஆரம்பித்தார்.

இஸ்ரேலை தண்டிப்பதற்கான விடயங்களை பல வழிகளில் துருக்கி தயார் செய்கிறது. அந்த வழிமுறைகள் என்னவென்று பின்னர் வெளியிடப்படும்.

துருக்கியில் நேற்று பலஸ்தீனுக்காக, குத்சுக்காக, காசா – குத்ஸ் முழுப் பலஸ்தீன மக்களுக்காகவும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

நேற்று துருக்கியிலிருந்து இஸ்ரேலுக்கெதிராக பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பாரிய இலத்திரனியல் செயற்பாடுகள் நடந்தன.

துருக்கி குத்சை விற்பதற்கு எத்தனிக்கவில்லை.

பலஸ்தீனை அதன் மைந்தர்களுக்கன்றி எவரிடமும் ஓப்படைக்க உடன்படவுமில்லை.துருக்கிய மக்கள் இஸ்ரேலை என்றுமே தற்காத்து நின்றதுமில்லை. துருக்கிய அரச அதிகாரிகள் எவரும் “இஸ்ரேலுக்கு தன்னைக் காத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது” என்று சொன்னதும் கிடையாது.
இது தான் (நீங்கள் நகையாடும்) “முகவர்” (ஏஜென்ட்) துருக்கி.

ஆம் துருக்கி தனது உம்மத்துக்கு முகவராகவே இருக்கிறது. எத்தனை அழகான ஏஜெண்ட் பணி!!
ஆயினும்.. உங்களது முகவர் பணி என்ன ?
தன்னாலானவற்றை செய்யும் துருக்கி மீதான குற்றச்சாட்டுகளை அளப்பதற்குப் பதிலாக அதை முதலில் கூறுங்கள்.

இன்றுவரை துருக்கியின் கைகள் கட்டப்பட்டது போலவே உள்ளன. வரலாற்று குப்பைத் தொட்டிகள் கொள்ள இயலாத அளவு கொண்ட உங்கள் முகவர் பணிகளின் காரணமாக அந்த நிலை இன்றுமுள்ளது.

துருக்கியைப் பார்ப்பதை விட்டு விட்டு – குறைந்தது அது சரி இயங்கியது – குத்சுக்காக , பாலஸ்தீனுக்காக நேற்று துருக்கி செய்தவற்றில் 5 % வீதம் நீங்கள் செய்தவற்றை சொல்லுங்கள்.
பலஸ்தீனுக்கு ஆதரவாக இஸ்ரேலின் குற்றங்களை தோலுரித்து .....

- உங்கள் பொறுப்பிலுள்ள எவருமே எதையும் கூறியதை நாம் கேட்கவில்லை .

- எந்தவொரு இலத்திரனியல் செயற்பாடுகளும் நேற்று உங்கள் தரப்பில் நடந்ததை நாம் காணவில்லை.

- மக்கள் ஆர்ப்பாட்டத்துக்கு உங்களிடமிருந்து எந்தவித ஆதரவையும் நாம் நேற்றுக் காணவில்லை.
- குத்ஸில் எமக்குள்ள உரிமைக்காக, குத்ஸ் மீதான அமெரிக்க அத்துமீறலுக்காக உங்கள் தூதுவர்களை அமெரிக்காவிலிருந்து திருப்பி எடுக்கும் உங்கள் எத்தனத்தின் எந்த வாடையும் வீசவில்லை.

- உங்களில் எந்த மன்னரும்..எந்த அமீரும்..எந்த ஜனாதிபதியும் பாலஸ்தீனுக்காக இஸ்ரேலின் குற்றங்களை தோலுரித்ததை நாம் காணவில்லை.

ஏன்? ஏன்? ஏன் ?

பாலஸ்தீனுக்காக இஸ்ரேலின் குற்றங்களை துகிலுரிப்பதற்காக வரும் வெள்ளிக்கிழமை இஸ்தான்பூல் மாநாட்டுக்கு சமுகம் தருவீர்களா?

துருக்கியைத் அதன் பாட்டிலாவது செயற்பட விடுவீர்களா?
உங்கள் மக்களையாவது சுதந்திரமாக இயங்க அனுமதிப்பீர்களா?

பலஸ்தீனில் போராடுகின்ற, வினயமாக கருமமாற்றுகின்றவர்களுக்கு துரோகப் பட்டம் அளிப்பதை நிறுத்துவீர்களா?

உம்மத்துக்கு உதவும் வகையில் பிரவாகம் கொள்ளும் மக்கள் சக்தியை தூற்றுவதை நிறுத்துவீர்களா?

இந்த கபளீகர தேசத்தை “ஆக்கிரமிப்பு தேசம்” என்று வார்த்தைகாளால் சரி வர்ணிப்பீர்களா?

சர்வதேசத்தோடு மன்னரளவில், அமீரளவில், ஜனாதிபதியளவில் அமைச்சுக்களளவில் இராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுப்பீர்களா?

சியோனிச ஆக்கிரமிப்பை தண்டிப்பதற்கு முயற்சி எடுப்பீர்களா?

உங்களையிட்டு நீங்கள் வெட்கப்படுங்கள். ஏனெனில், புத்திஜீவிகள் அனைவருக்கும் உம்மத்தின் விவகாரங்களுக்கு எதிரான உங்களது முகவர் தன்மை வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

எம்மை எம் பாட்டில் விட்டுவிடுங்கள். குத்சையும் பாலஸ்தீனத்தையும் நீங்கள் வைத்திருப்பவற்றால் அன்றி எமது ஆயுதங்களால் எமது ஈமானினால் நாங்கள் விடுவிக்கின்றோம்.

துருக்கி தன்னாலானதை செய்திருக்கிறது. நீங்கள் விரும்பினாலும் மறுத்தாலும் அல்லாஹ் நிர்மூலமாக்கக் கூடிய உங்களது சிம்மாசனங்களையும் பதவிகளையும் பாதுகாப்பதற்கு பகரமாக குத்சை விற்கும் உறுதிப்பத்திரத்தில் நீங்கள் இட்ட கையெழுத்தைத் தவிர நீங்கள் வேறு என்னதான் செய்திருக்கின்றீர்கள்?

ஆம்..அல்லாஹ் அந்த பதவிகளையும் சிம்மாசனங்களையும் தாமதிக்காது அவசரமாக அழிப்பான். பூமி அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கே எஞ்சும்.
துருக்கி தனது உம்மத்துக்கு முகவராக இருக்கிறது. தனது பெருமைக்குரிய வரலாற்றுக்கு முகவராக உள்ளது. தனது மகத்துவமான மார்க்கத்துக்கு முகவராக உள்ளது. பாலஸ்தீனுக்கும் குத்சுக்கும் முகவராக இருக்கின்றது.

புதிய துருக்கி; அது ஆஸ்தியாக பலவற்றைப் பெற்றது போலவே இஸ்ரேலோடு தொடர்பானவற்றையும் வாரிசுரிமையாக வரிந்து பெற்றுள்ளது.

இன்று அது தான் ஆஸ்தியாகப் பெற்ற சிலவற்றை (இஸ்ரேலிய உறவு ) விட்டெறிவதற்காக சரியான பாதையில் பயணிக்கிறது. ஆயினும் நீங்கள் இஸ்ரேலை அதன் இழிந்த அசூசைப் பாலை புகட்டுவதற்காக உங்கள் மடிகளில் அரவணைத்துக் கொள்கின்றீர்கள்.

துருக்கி தனது மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறது.

இது எமது முகவர் தன்மை. அது உங்கள் முகவர் தனம்.

அல்லாஹ் தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் சிறந்தவன்.
.
Fairooz Mahath

10 கருத்துரைகள்:

Dear brother do not be emotional.

Brother Edorgan is one of the best Muslim Leader at present... I always appreciate his promotion of Turkey toward Islam.

From your article I come to know that Turkey has embassy in Israel am I correct? But for my knowledge Saudi dose not have embassy in Israel do you know that? Does not this mean Turkey has accepted the state of Israel since it has embassy there?

Brother Do not look through windows of Groups and Jamaaths.

Every governtment has reason to keep connection with Israel... Do not be emotional...

If you did not get information .. It does not mean Saudi did not say or do anything.

Brother We are not living like sahabaa...and our leaders are not like kulafa ur raahedoons... we love world and our leaders too. so unless we both change our life.. it is difficult to win them.
Let us call ourself Muslim and not stick to dividing Jamaaths.

எது எவ்வாறிருப்பினும், துருக்கியின் சர்வதேச முஸ்லிம்கள்பாலுள்ள சகோதரத்துவ உணர்வைப் பாராட்டாமல் இருக்க முடியாது.  அவர்களிடம் நாம் கற்க வேண்டியவை ஏராளம் இருக்கின்றன.

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மீள்நிர்மாணம் தூரத்தில் இல்லை!

துருக்கியும் சவ்தியும் இஸ்ரேளுடன் மிக நெறுங்கிய ராஜதந்திர உரவுகள் உள்ள நாடுகளாகும். துருக்கி பகிரங்கமாகவும் சவ்தி மரைமுகவாகவும் தற்போது நேரடியாகவும் உரவு வைத்துள்ளன.பிரச்சினைவரும்போது முஸ்லிம்களை சமாளிப்பதற்கு இஸ்ரவேளை ஏசுவது இது மதள் முறையள்ள. பாளஸ்தீன போராட்ட குழுவான ஹமாசுக்கு ஒரு தோட்டாவையாவது இவர்கள் வழங்கியுள்ளனரா இல்லவே இல்லை.எந்தவிதமான உரவோ இல்லாமல் ஹமாசுக்கு பணம் ஆயும் ஏவுகனை பயிற்ச்சி ... வளங்கும் ஈரானை பற்றி இவர்கள் பேசாமள் இருப்பது அமேரிக்காவினதும் இஸ்ரேளினதும் தேவைக்கே.துருக்கி சவ்தி போன்ற போலி தலைவர்களே சியோனிஸ்டுகள் விரும்பும் முஸ்லிம் தலைமைத்துவமாகும்.ஏன் ஹமாஸ் ஹிஸ்புள்ளாஹ் ஈரான் என்பவற்றிக்கு பொருளாதார தடை இன்னும் எத்தனையோ தடை ஆனால் சவ்திக்கோ துருக்கிக்கோ இத்தடைகள் இல்லை. சிந்தித்தாள் புரியும்

துருக்கியும் சவ்தியும் இஸ்ரேளுடன் மிக நெறுங்கிய ராஜதந்திர உரவுகள் உள்ள நாடுகளாகும். துருக்கி பகிரங்கமாகவும் சவ்தி மரைமுகவாகவும் தற்போது நேரடியாகவும் உரவு வைத்துள்ளன.பிரச்சினைவரும்போது முஸ்லிம்களை சமாளிப்பதற்கு இஸ்ரவேளை ஏசுவது இது மதள் முறையள்ள. பாளஸ்தீன போராட்ட குழுவான ஹமாசுக்கு ஒரு தோட்டாவையாவது இவர்கள் வழங்கியுள்ளனரா இல்லவே இல்லை.எந்தவிதமான உரவோ இல்லாமல் ஹமாசுக்கு பணம் ஆயும் ஏவுகனை பயிற்ச்சி ... வளங்கும் ஈரானை பற்றி இவர்கள் பேசாமள் இருப்பது அமேரிக்காவினதும் இஸ்ரேளினதும் தேவைக்கே.துருக்கி சவ்தி போன்ற போலி தலைவர்களே சியோனிஸ்டுகள் விரும்பும் முஸ்லிம் தலைமைத்துவமாகும்.ஏன் ஹமாஸ் ஹிஸ்புள்ளாஹ் ஈரான் என்பவற்றிக்கு பொருளாதார தடை இன்னும் எத்தனையோ தடை ஆனால் சவ்திக்கோ துருக்கிக்கோ இத்தடைகள் இல்லை. சிந்தித்தாள் புரியும்

Mr. Sri Serandib...

You are entering among the Muslim brothers as Abdullah Ibn Sabah who divided us in the past.

We Know what IRAN is looking from Palestine people.

Simply You Say Saudi and Turkey has done nothing to people of Palestine.. I feel sorry for you lack of knowledge. Go and search What Turkey and Saudi has done. They Do financial, humanitarian, health and other assistance too... They Turkey, Saudi and other Arab Nations do this help to Palestinians considering them as our Sunni brothers and for the sake of Allah.

But Iran helping Palestine with the aim of converting them to religion of grave worship. Have you ever seen Israel attacking Iran or Iran attacking Israel? They only keep passing statement to show they are enemies of each other.. But in reality they are to gather harming Sunni in long run.

Both Saudi and Turkey has political reason have connection with Israel...But It does not mean these countries supporting Israel.

Stay Away from Dividing Muslims Brothers.. at last all of us are followers of Quran and Sunnah of Muhammed (sal) and We follow the footsteps of Kulafa ur Rashidoon and other sahabaa as our SALAF.

Sorry for your plot ... turn to main stream of Muslim.

Dear Muslim brothers those who wanted to know about SRI SERANDIB..
please visit the link below. You will find "AHLBYTE" videos, which possible shows he his from SHIA.

So stay away from his act which is similar to what Abdullah ibn Sabah did in the past to divide Muslim unity and produced Shia groups.

Thanks to Allalh for exposing the dividers.

https://plus.google.com/115495728103580938200

Mohamed Rasheed.you do what ibnu Saud did to the Muslim world. He collaborated with British and destroyed the Otamen kilafath and pawed the way for the creation of Zionist Israel.

Mohamed Rasheed.you do what ibnu Saud did to the Muslim world. He collaborated with British and destroyed the Otamen kilafath and pawed the way for the creation of Zionist Israel.

ஈரானுக்கெதிராக அமேரிக்காவும் இஸ்ரவேளும் சவ்தியும் ஏன் ஒன்றுசேர்ந்துள்ளன.ஈராக்கை லிபியாவை ஆப்கானிஸ்தானை சிரியாவை யெமெனை பாளஸ்தீனை அழிக்கும் அழித்துக்கொண்டிருக்கும் சியோனிச அமேரிக்காவுடனும் இஸ்ரேளுடனும் சவ்தி கூட்டு சேர்ந்திருப்பது பாளஸ்தீனை விடுவிப்பதற்காகவா? உங்கள் சீயா சுன்னி கதைகள் இனி வேகப்போவதில்லை. ஹமாஸ் இயக்க தலைவரே ஈரானை பாளஸ்தீனத்தின் ஒரே நம்பிக்கை நாடு என புகழும் போது நீங்கள் கதை அலப்பதிள் பயனில்லை.பாளஸ்தீனுக்கும் ஈரானுக்கும் உல்ல தொடர்பை கொஞ்சம் இன்டர் நெட்டை தட்டி பாருங்க புரியும். 18 வருடம் ஆக்கிரமித்திருந்த இஸ்ரேலை லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாஹ் இயக்கம் எவ்வாறு விரட்டி விரட்டி அடித்தார்கள் என்பதையெள்ளாம் கொஞ்சம் கண்ண துரந்து பாருங்க.

At last got Exposed, Could not apply takiyya this time.

May Allah Guide you and Me in the path of Sahaba (Umar, Aboobaker, Uthman and Ali ) ral.

Post a Comment