Header Ads



அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது - முஜிபூர் ரஹ்மான்

இன, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ள போதிலும், சட்டத்தின் ஆட்சியை நிலைப்படுத்துவதில், அரசாங்கத்துக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

“நல்லிணக்கத்தைக் கொண்டு வருவதிலும், கடும்போக்குக் குழுக்களை நிறுத்துவதிலும் அரசாங்கத்தின் தோல்வி, அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளில் வெளிப்பட்டிருந்தது. நாடகங்கள் மூலமாகவும் ஏனைய விடயங்கள் மூலமாகவும், நல்லிணக்கத்தைக் கொண்டுவர முடியாது. நடைமுறைச் சாத்தியமான ஏதாவதொன்று செய்யப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டார். 

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களை, பல்வேறு பதவிகளில் அமர்த்துவது சிறந்த வழியாக அமையுமென அவர் தெரிவித்தார். அண்மையில் நியமிக்கப்பட்ட மாகாண ஆளுநர்கள் தொடர்பான விடயத்தைச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு மாகாணத்துக்கேனும், முஸ்லிம் ஆளுநரொருவர் நியமிக்கப்படவில்லை என, தனது விமர்சனத்தை முன்வைத்தார்.   

1 comment:

  1. இவர் பல தடவை சொல்லி விட்டார் அதிலிருந்து விலகுவதுமில்லை.

    ReplyDelete

Powered by Blogger.