Header Ads



நாட்டில் பிக்குமார்களுக்கு, பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாம்..!


"இன்று எமது நாட்டில் பிக்குமார்களின் பற்றாகுறை உள்ளது. பிக்குமார்களை பாதுகாக்காவிட்டால் பிரச்சினை மேலும் வலுவடையும்" என்று கொழும்பு பிரதான சங்கநாயக தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

'பெரிய பிக்குமார்கள் பெரிய உதவிகளை நாடிச் செல்கின்றனர்.
அவர்கள் கிராமத்தில் இருக்கும்  பிக்குமார்களை மறந்து விடுகின்றனர். 
ஆனால் தர்மம் செய்வதற்கு பெரிய சிறிய என்ற வேறுபாடு இல்லை. 
நாங்கள் அனைவரும் கௌதம புத்தரின் வழியை பின்பற்றுவோர் ஆவர்.
இன்று யார் என்ன சொன்னாலும் எமது நாட்டில் பிக்குமார்களின் பற்றாகுறை உள்ளது. 
பெரிய பற்றாகுறை உள்ளது. 
எமது நாட்டில் தற்போது 30 ஆயிரம் பிக்குகளே உள்ளனர். 
நாம் இளம் பிக்கு மார்களை பாதுகாக்காவிட்டால் கடைசியில் இந்த எண்ணிக்கை மேலும் குறைவடைய வாய்ப்புள்ளது.  
அதனால் எமது பிரதான கடமை இந்த இளம் பிக்குகளை பாதுகாப்பதேயாகும்.' என்றார்.

வெசக் வாரத்தை முன்னிட்டு பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் மற்றும் அவரின் நிர்வாக உத்தியோகத்தர்கள் ஏற்பாடு செய்திருந்த புன்னிய நிகழ்விலேயே கொழும்பு பிரதான சங்கநாயக தேரர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் நிறைவின் போது கௌரவ அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது,

'இன்று நிறையபேர் கிரம விகாரைகளை மறந்துவிட்டனர். 
பௌத்த மதத்தை பாதுகாக்க கிராமத்தில் இருக்கும் விகாரைகளை பாதுகாப்பது அவசியமானதாகும்.
அதை பலப்படுத்த வேண்டும். இதற்காக நாங்கள் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றுறோம். 
அதில் ஒன்று இளம் பிக்குமார்களை பாதுகாப்பதேயாகும். 
அவர்களே எதிர்காலத்தில் எமது பௌத்த தர்மத்தை பாதுகாத்து முன்னெடுத்துச் செல்பவர்கள்.
ஆகவே பௌத்தர்கள் என்ற வகையில் இது எமது பிரதான கடமையாகும். 
இன்று நாம் அந்த கடமையையே செய்துள்ளோம்.' என்று அமைச்சர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'நாடு மற்றும் இனம் என்ற ரீதியில் நாங்கள் பிளவுபடவில்லை. 
நாங்கள் பௌத்தர்கள் என்ற வகையில் இன்று நாம் வெசக் கொண்டாடுகின்றோம். 
இதே போலவே மற்ற மதங்களுக்கும் மதிப்பு கொடுத்துள்ளோம். 
காலிமுகத்திடலில் மிகப்பெரிய நத்தார் மரத்தை நிர்மானித்தோம்.
இஸ்லாமிய விழாக்கலை நடாத்தியுள்ளோம். 
ஆகவே நாடு என்ற வகையில் எல்லோருடனும் ஒன்றினைந்து செல்லக் கூடியதாக எம்மால் உள்ளது. 
இன்று எமக்கு உள்ள தேவைப்பாடானது சகல இன மத மக்களை ஒன்றினைந்து இந்த நாட்டை கட்டியெளுப்புவதேயாகும்.' என்றார் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள்.

5 comments:

  1. Go To Makkah for Hajj you can see Real/True Monk but they call as Haji and they are wearing white colors. They are the real follower of Buddha. White Color Dress Monk.

    ReplyDelete
  2. அது மிச்சம் நல்ல செயல் தான் சிறுவர்களை சிறுவயதிலிருந்தே பெற்றோர்களிடமிருந்து வேறுபடுத்தி அவர்களை பிரிக்கிறார்கள் ,சிறுவயதில் தான் பிள்ளைகளுக்கு தாய் தந்தையின் அன்பு பாசம் தேவை ஆனால் இந்த சிறுவர்கள் மதபோதனையில் எல்லாமே இழக்கிறார்கள் போதாதுக்கு அவர்கள் பெரியவர்களாகினால் திருமணம் குடும்பவாழ்க்கை எல்லாமே இழந்து தனியாக தவிர்க்கும் நிலை இது கடுமையான சித்திரவாதம் செய்யும் செயல் அவர்களுக்கு.

    ReplyDelete
  3. Banned Child cruelty by the name of Monk. To be a Monk need age limit... Banned Child Monk. (Where is Human Rights).

    ReplyDelete
  4. This ( Human Rights) is not our business. Let Buddhists take care of their matters) Let us mind our business.

    ReplyDelete
  5. அதுக்கு தானா கடந்த காலத்தில் முசுலீம் சிறுவனை சாமி யாக்கியது

    ReplyDelete

Powered by Blogger.