Header Ads



இஸ்ரேல் மீது ஈரான், எவுகணை தாக்குதல் -மத்திய கிழக்கில் நெருக்கடி


இஸ்ரேல் மீது ஈரான் முதல்தடவை எவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளதை தொடர்ந்து மத்திய கிழக்கில் நெருக்கடி தீவிரமடையலாம் என்ற அச்ச நிலை உருவாகியுள்ளது.

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய கோலான் குன்றிலுள்ள இஸ்ரேலிய தளங்களை நோக்கி ஈரானிய படையினர் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.சிரியாவிலிருந்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஈரான் 20 எவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் இவற்றில் பலவற்றை நடுவானில் அழித்துவிட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து சிரியாவில் உள்ள ஈரானிய தளங்கள் மீது இஸ்ரேல் விமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

சிரியாவில் உள்ள ஈரானிய நிலைகள் மீது எறிகணை தாக்குதலை மேற்கொண்ட பின்னரே இஸ்ரேல் விமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

சிரியாவில் இரவு முழுவதும் விமான எதிர்ப்பு பொறிமுறைகள பயன்படுத்தப்பட்டதை அவதானிக்க முடிந்ததாக சுயாதீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிரியாவிற்குள் உள்ள ஈரானிய இராணுவதளங்களை இலக்கு வைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

7 comments:

  1. சிரியாவை அளிக்க புதிய தந்திரம்... எப்படியும் அழியுரது முஸ்லீம் நாடான சிரியா தான்....

    ReplyDelete
  2. How can it be. Israel and Iran are same. Both are friend behind the screen. Something wrong Here... Something sure going to happen...

    ReplyDelete
  3. அமேரிக்காவும் சவ்தியும் தனது நன்பன் இஸ்ரவேளை ஈரானிடம் இருந்து எவ்வாறு பாதுகாக்க போகின்றன. சல்மான் பார்ஸி ரலியல்லாஹுஅன்ஹு அவர்களின் பரம்பரையில் வந்த ஈரானியருக்கு யுத்த கலை பற்றி யாரிடமும் கற்க வேண்டி வராது அவர்கள் இஸ்ரவேளையும் அவர்களின் நன்பர்களையும் நரகத்துக்கு அனுப்பாமள் ஓயமாட்டார்கள்.இன்ஷாஅல்லாஹ்.

    ReplyDelete
  4. என்னப்பா இன்ஷாஅல்லாஹ் என்று சொல்லுற இன்ஷாஆயஸ்துல்லா கோமேனி என்றல்லோ நீர் சொல்லணும்...

    ReplyDelete
  5. hello Sri Serandib, can you tell us why Iran sought the help of Bush to hang Saddam Hussain? this is becoz they are real friends

    ReplyDelete
  6. Yoodharhalum shiakalun sahodhararhal. Iwarhal ahlusunnahwai pin patrum muslimgalai alipadhey. Aanal yoodharhal shiakalaiwida balamanawarhal thandhuramanawarhal ariwu niraindhawarhal. Oruthan dejjal waranum andru awasara paduhindraner innondu mooda nambikaium poiyaha uruwaki pinpatrum kewalad ketta waliketta shiakal. Plan panni siriyawai alikindraner. Aanal appadium irudhi wetri unmayana muslimgalukay.ongaluku awahasam siriyawai pondru egypt,turkeyai alithadhan pin insha allah miha periya aliwu ungaluku undu. Marumaikana adayalam sila nadaka wendama. Everybody waiting for imam mahdi and nabi iesa alaihisalam (jesus). So muslimgal wetri peruwanga insha allah nabi iesa alaihisalam neediyana atchiyai ulaham muluka nilai natuwar.

    ReplyDelete

Powered by Blogger.