May 14, 2018

பேரியல் அஷ்ரபும், ஜம்மியத்துல் உலமாவின் காரியாலயமும்

மாளிகாவத்தையில் - இஸ்லாமிய நிலையத்திற்கு அருகில் அமையப் பெற்றுள்ள ஜம்மியத்துல் உலமா தலைமைக் காரியாயலயம் - இந்தக் கட்டிடம் அமைந்துள்ள காணிக்கும் முன்னாள் அமைச்சா் பேரியல் அஷ்ரப்புக்கும் ஒரு தொடா்பு உள்ளது. அமைச்சா் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த காலத்திலேயே இந்தக் காணியை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து ஜம்மியத்துல் உலமாவிற்கு பெற்றுக் கொடுத்த வரலாறு அவரையே சாரும். 

இந்தக் காணிக்குரிய உறுதிப் பத்திரத்தினை அப்போது நகர அபிவிருத்தி அமைச்சா் தினேஸ் குணவா்த்தனவின் கையால் அஷ் ஷேக் றிஸ்வி முப்திக்கு வழங்கும்போது நான் புகைப்படம் எடுத்தேன். 

அப்போது மேடம் என்னைக் கூப்பிட்டுச் சொன்னாா் இந்தப் படத்தினை எந்த ஊடகங்களுக்கும் அனுப்ப வேண்டாம் இரகசியமாக இருக்கட்டும் என வேண்டிக்கொண்டாா். இல்லாவிட்டால் நாளை அரச காணியை பள்ளி நிர்மாணிக்க வழங்கியதாக செய்தி வந்துவிடும். என வேண்டிக் கொண்டதக் கிணங்க அதனை நான் கணனியில் சேமித்து வைத்தேன். 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்குப் பின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவா்கள் ஜனாதியாக தோ்தல் குதிக்க இருந்த சமயத்தில் முன்னாள் அமைச்சா் ஆறுமுகம் தொண்டமான் ஊடக மட்டக்குழியில் உள்ள தேசிய வீடமைப்பு காக்கைத் தீவு பகுதியில கோயில் நிர்மாணிக்க காணியை வழங்கும் படி கேட்டதற்கிணங்கவே மேடம் இவ்வாறு ஜம்மியத்துல் உலமாவுக்கு ஒரு தலைமைக் காரியாயலம் அமைக்க காணி கேட்பதாகச் சொல்லி அனுமதி அளித்து ஆறுமுகம் தொண்டமானுக்கு காணி வழங்கினாா் அதே நேரம் இக் காணியை அனுமதி பெற்றுக் கொடுத்து காணி உறுதிப்பத்திரத்தனையும் வழங்கி வைத்தாா். அவா் ஒரு போதும் நான் அது தருவேன் இது தருவேன் என்று பொய் வாக்குறுதி அளிக்காமல் அமைதியாக இருந்து தன்னால் செய்யமுடிமானவற்றை செய்தாா்.

-Ashraff A Samad-

6 கருத்துரைகள்:

She was a partner of a Great leader. She might have learned from her legend husband to do something interlectually.

In that case she is much better than the current SLMC politicians, who are just for a show off.

WHAT HAPPENED TO THIS LAND ACJU GOT FROM MAHINDA DURING HIS REGIME?
DID MOULAVI RIZVI/ACJU SELL THIS LAND. QUESTIONS RAISED BY "THE MUSLIM VOICE" HAAS NOT BEEN ANSWERED YET BY MOULAVI RIZVI OR THE ACJU. ARE THESE FELLOWS NOT CHEATS? DISGRACE TO THE MUSLIM COMMUNITY.
Colombo, 04 July, (Asiantribune.com): Sri Lanka Government donated valuable land from Colombo 12, for “All Ceylon Jamiyyathul Ulama” the Council of Muslim Theologians and the apex Islamic religious body in Sri Lanka.
President Mahinda Rajapaksa handed over the document pertaining to the land to M.I.M.Rizvi, Chairman of the All Ceylon Jamiyyathul Ulama at Temple Trees.
Ministers Dinesh Gunawardana, A.H.M.Fowzie, M.H. Mohamed, Ferial Ashraff, Najeeb Majeed and Hussein Bhaila, Deputy Minister Rohana Kumara Dissanayake, Western Province Governor Alavi Mowlana and Presidential Advisor A.H.M. Azwer were also present.

என்ன இருந்தாலும் அஷ்ரபின் மனைவி அல்லவா. பூவுடன் சேர்ந்து நாரும் மணக்கும் தானே

அல்லாஹ்வின் அருள் கிடைக்கட்டும். பழம்பெரும் முஸ்லிம் தலைவர்கள் வரிசையில் இவரும் சாதுரியமான சேவை புரிந்திருக்கிறார் என்பதை காலம் கடந்தாவது அறியக்கிடைத்தது மகிழ்ச்சியைத் தருகின்றது. நவீன நாடகமாடிகளுக்கு இது சமர்ப்பணம்.

வ்வாறு தன்னை காட்டிக்கொள்ளாமல் சேவை செய்பவர்கள் தான் தற்போதைய சூழலில் அரசியலுக்கு தேவை .எனவே இவர் போன்றவர்களை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரவேண்டும்

Post a Comment