May 29, 2018

"சாபக்கேடு பீடித்த மூதேவிகளால் மாத்திரமே, ஹராமான பகிடிவதை பண்ண முடியும்..."


சாபக்கேடு பீடித்த ஒரு மூதேவியால் மாத்திரமே ஹராமான பகிடிவதை பண்ண முடியும்.
எந்தவொரு கல்லூரியாக இருந்தாலும் பலகலைக் கழகங்களாக இருந்தாலும் இஸ்லாமிய பண்பாட்டு விழுமியங்களை முஸ்லிம் மாணவர்கள் கண்டிப்பாக கடைப் பிடித்து அடுத்த சமூக மாணவர்களுக்கு அழகிய முன்மாதிரிகளாக திகழுவது ஒவ்வொருவர் மீதும் விதிக்கப் பட்ட சன்மார்க்கக் கடமையாகும்.

இஸ்லாத்தின் பார்வையில் பகிடிவதை ஹராமாக்கப்பட்ட கொடிய பாவமாகும், ஒரு முஸ்லிமுக்கு மற்றொருவரின் இரத்தம், பொருள், தன்மானம் ஆகிய மூன்று விடயங்களும் ஹராமானதாகும், எவ்வாறு அடுத்தவரை கொலை செய்யும் உரிமை அல்லது அடுத்தவரது பொருளை தீண்டும் உரிமை மற்றொருவருக்கு கிடையாதோ அதே போன்றே இன்னொருவரை அவமானப் படுத்துவது, கேளி செய்வது , பகிடி பண்ணுவது, நையாயாண்டி பண்ணுவது முற்றிலும் இஸ்லாத்தினால் தடுக்கப் பட்ட விடயங்களாகும்.

பல்கலைக் கழகம் வரும் பருவ வயதை எட்டியுள்ள பட்டதாரி மாணவர்களுக்கு அல் குரானும் ஸுன்னாவும் போதிக்கும் அழகிய இஸ்லாமிய குண ஒழுக்கங்களை விளாவரியாக எடுத்துச் சொல்வது அவசியமில்லை என்றாலும் எவ்வாறான உயரிய பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட ஒருசமூகத்தை இஸ்லாம் கட்டியெழுப்ப விரும்புகிறது என்பதனை உணர்த்தப் போதுமான இரண்டு குரான் வசனங்களை ஞாபகமூட்டளுக்காக இங்கு குறிப்பிடலாம்:

“முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.” (ஸூரதுல் ஹுஜ்ராத் : 11)

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (ஸூரதுல் ஹுஜ்ராத் : 12)

ஒவ்வொரு பெற்றோரும் தமது அன்புச் செல்வங்களை படாத பாடு பட்டு வளர்த்து ஆளாக்கி பல்கலைக் கழகம் வரை கொண்டு வந்திருக்கின்றார்கள், வாழ்வின் ஆரம்ப அத்தியாயங்களை பெரும் கனவுகளோடு தொடங்கும் இளம் மாணவர்களின் மன நிலையை கொடூரமாக பாதிக்கச் செய்யும் பகிடி வதைகள் அவர்களுக்கு மாத்திரமன்றி ஆயிரம் வலிகளோடும் கனவுகளோடும் கண்விழித்து காத்திருக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இழைக்கப் படுகின்ற அக்கிரமமாகும்.

தங்கள் வாழ்வின் அத்திவாரங்களை இடுகின்ற அழகிய இளம் பருவத்தில் பாதிக்கப் படும் மாணவர்களின் அவர்களது பெற்றோரின், சமூகத்தின், கல்விக்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிப்புச் செய்யும் நாட்டு மக்களின் ஆசீர் வாதங்களையும் பிரார்த்தனைகளையும் நிறையவே பெற்றுக் கொள்ள வேண்டிய பட்டதாரி மாணவர்கள் மேற்சொன்ன சகல தரப்புக்களினதும் சாபத்திற்கு ஆளாக வேண்டாம் என தனிப்பட்ட முறையில் பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.

Inamullah Masihudeen

2 கருத்துரைகள்:

இவ்வுயரிய கருத்துக்கள் கல்வியமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, மீறும் மாணவர்களை கடுமையாகத் தண்டிக்கும் விதமான பொதுச் சட்டங்களை இயற்றி அமுல் நடாத்துமாறு வேண்டப்பட வேண்டியவை.

This advice with more additions to be sent to "Muslim Majlis" of All universities in our country to circulate among Muslims students as hand bills.

Hope An educated scholar or ACJU can prepare this hand bill and pass it Muslim Organization in Universities.

May Allah reward all of us Jannah.

Post a Comment