Header Ads



இந்த அரசாங்கம் தமிழ் இனவாதிகளின், ஒப்பந்தங்களுக்கு ஏற்ப நடைபயில்கின்றது

நாட்டின் அரசியல் நிலவரம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அசாதாரண நிலையிலேயே காணப்படுவதாகவும் இது நாட்டுக்கு பாரிய பாதிப்பாகும் எனவும் தேசிய சங்க சம்மேளன பிரதிநிதிகள் கருத்துத் தெரிவித்தனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் முதன் முதலில் முன்னெடுக்கப்பட்ட ஜனாதிபதியின் நியமனம் தொடக்கம், பிரதமரின் நியமனம், எதிர்க் கட்சித் தலைவர் நியமனம், பாராளுமன்றத்திலுள்ள பொறுப்புக்கள் நியமனம் போன்ற நல்லாட்சி அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுமே அசாதாரண நிலையிலேயே உள்ளது.

இந்த அனைத்து வகையான அசாதாரண நடவடிக்கைகள் மூலமும் நாட்டின் பொருளாதாரம், தேசிய, சர்வதேச விவகாரங்கள் ஆகிய அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த அரசாங்கம் அரசியல் ரீதியிலும், வேறு வகையிலும் மேலைத்தேய நாடுகளினதும், தமிழ் இனவாத அமைப்புக்களினதும் உதவிகளையும், நன்கொடைகளையும் பெற்றுக் கொண்டு அவர்களது ஒப்பந்தங்களுக்கு ஏற்பட நடைபயின்று கொண்டிருக்கின்றது எனவும் தேசிய சங்க சம்மேளன பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.