Header Ads



3 உயிர்களை காப்பாற்றச்சென்று, தன்னுயிரை நீத்த பொலிஸாரை தேடும் பணி தீவிரம்


மாதம்பே, கல்முருவ பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முற்பட்டு வௌ்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ள பொலிஸ் காண்ஸ்டபிளை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. 

29 வயதுடைய மாதம்பே பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் காண்ஸ்டபிளான (88587 ) தசநாயக்க பதிருன்னகலாகே டிலான் சம்பத் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

திருமணமாகாத அவர் கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்றைய தினம் (25) மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முருவ பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கியிருந்த குடும்பமொன்றை காப்பாற்ற நீரில் நீந்திச் சென்று கொண்டிருக்கும் போது குறித்த பொலிஸ் காண்ஸ்டபிள் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போனார். 

நேற்று காணாமல் போனது முதல் அவரை தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் தரைப்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

இதுதவிர பிரதேசவாசிகளும் குழுக்களாக இணைந்து காணாமல் போயுள்ள பொலிஸ் காண்ஸ்டபிளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.