Header Ads



பள்ளிகளுக்கு நஷ்டஈடு, வழங்குவதில் சிக்கல்

கண்டி மாவட்­டத்தில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்­களில் அநே­க­மா­னவை நஷ்­ட­ஈடு கோரி தமது விண்­ணப்­பங்­களை புனர்­வாழ்வு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்­சுக்கு அனுப்பி வைக்­கா­மை­யினால் பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான நஷ்­ட­ஈடு வழங்­கு­வதில் சிக்கல் நில­வு­வ­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கண்டி மாவட்­டத்தின் 10 பிர­தேச செய­லாளர் பிரி­வு­களைச் சேர்ந்த 20 பள்­ளி­வா­சல்கள் வன்­செ­யல்­க­ளின்­போது சேத­மாக்­கப்­பட்­டன. சில பள்­ளி­வா­சல்கள் எரிக்­கப்­பட்­டன. பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்­காக புனர்­வாழ்வு அமைச்சு விண்­ணப்­பங்­களை கோரி­யி­ருந்­தாலும் இது­வரை 7 பள்­ளி­வா­சல்­களே விண்­ணப்­பங்­களை அனுப்பி வைத்­துள்­ளன.

இது தொடர்பில் புனர்­வாழ்வு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்து சமய அலு­வல்கள் அமைச்சின் மேல­திகப் பணிப்­பாளர் எஸ்.எம்.பதுர்­தீனைத் தொடர்­பு­கொண்டு வின­வி­ய­போது,

இது­வரை 7 பள்­ளி­வா­சல்­களின் விண்­ணப்­பங்­களே கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. கிடைக்­கப்­பெற்­றுள்ள விண்­ணப்­பங்­களில் சில பூர­ண­மற்­ற­தாக இருக்­கின்­றன. பள்­ளி­வா­சலின் பதிவு இலக்கம், வங்கிக் கணக்­கி­லக்கம் என்­பன குறிப்­பி­டப்­பட்­டில்லை. இதனால் நஷ்­ட­ஈடு வழங்­கு­வதில் பிரச்­சினை உரு­வா­கி­யி­ருக்­கி­றது. பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்­களின் நஷ்­ட­ஈடு கோரு­வ­தற்­கான விண்­ணப்­பத்தை கால தாம­த­மின்றி உட­ன­டி­யாக அனுப்பி வைக்­க­வேண்டும் என்றார்.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் கண்டி மாவட்டக் கிளையின் செய­லாளர் மௌலவி ஏ.எல்.ஏ.கப்­பாரைத் தொடர்பு கொண்டு வின­வி­ய­போது கண்டி மாவட்­டத்தில் வன்­செ­ய­லினால் பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களை உலமா சபையின் கண்டி மாவட்ட கிளை தொடர்­பு­கொண்டு நஷ்­ட­ஈடு பெற்­றுக்­கொள்­வ­தற்­கான விண்­ணப்­பங்­களை தாம­தி­யாது அனுப்பி வைக்­கு­மாறு அறி­விக்­கப்­பட்­டது. ஆனால் இது­வரை பல பள்­ளி­வா­சல்கள் இவ்­வி­ட­யத்தில் அசி­ரத்­தை­யாக இருப்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

பள்­ளி­வா­சல்­களின் நிர்வாகத்தினரின் அசிரத்தையால் பள்ளிவாசல்களுக்கான நஷ்டஈடு பெற்றுக்கொள்வது தொடர்ந்தும் தாமதமாகி வருகிறது. எனவே வன்செயல்களால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களின் நிர்வாகங்கள் இது தொடர்பில் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

-Vidivelli / ARA.Fareel

2 comments:

  1. What??? Are all the mosques going to be rennovated under the Ministry of Hinduism. Anyway it's a good sign for the barbarians

    ReplyDelete
  2. Mr Anusath Chandrabal,

    Don’t shout like Bullshit Man. You have to learn something. There is a procedure in Ministry of Disaster Manegement in Sri Lank for obtaining compensation. Please learn something before you comment.

    ReplyDelete

Powered by Blogger.