Header Ads



சிறிலங்கா ரூபாவின் மதிப்பு சரிவு – 160 ரூபாவைத் தொடுகிறது

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி நேற்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.

சிறிலங்கா மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி, 159.26 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இது கடந்த செவ்வாய்க்கிழமை இருந்த நிலையை விட 30 சதம் குறைவாகும்.

இதற்கு முன்னதாக ஏப்ரல் 25ஆம் நாள், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி, 159.04 ரூபாவாக காணப்பட்டது.

அதற்குப் பின்னர், சற்று வலுவடைந்திருந்த சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி, தற்போது 159.26 ரூபாவாக சரிந்துள்ளது.

No comments

Powered by Blogger.