May 25, 2018

வடகிழக்கில் 1000 வருடங்கள் செயல்பட்ட தமிழ் - முஸ்லிம் சமாதானப் பொறிமுறை எங்கேபோனது..?


-கவிஞர் ஜெயபாலன்-

ஆலையடி வேம்பில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் பெண்கள் தொடர்பான குற்றச் சாட்டின்பேரில் கட்டிவைத்து தாக்கபட்ட சம்பவம் கவலை தருகிறது. 

பாரிய குற்றமென்றால் அவரை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்திருக்கலாம். இதே போன்ற ஒரு சூழலில் முஸ்லிம் பகுதியில் தமிழரோ தமிழ் பகுதியில் முஸ்லிமோ தடுக்கபட்டால் உடனடியாக சம்பந்த பட்டவரின் ஊர் சிவில் சமூகத்துக்கு தகவல் தெரிவிக்கவேணும். மன்னிக்கக்கூடிய குற்றமெனில் எச்சரித்து அவர்கள் ஊர் சிவில் சமூகத்தில் ஒப்படைத்தலே முறையானது. 

பாரிய குற்றமெனில் பொலிசாரிடம் ஒப்படைக்கலாம். எனினும் எல்லா தருணத்திலும் சம்பந்தபட்ட ஊர் சிவில்சமூகத்தினருக்கு தெரிவிக்கப்படுவதும் அவர்களது ஆலோசனையைப் பெறுவதும் கட்டாயமாகும். இதுவே எங்கள் மூததையர்கள் பலநூறு ஆண்டுகளாக கடைப்பிடித்த வளக்கமாகும். 
.
வேலையின் நிமித்தமும் வியாபாரத்தின் நிமித்தமும் தமிழ் ஊர்களுக்கு முஸ்லிம்களும் முஸ்லிம் ஊர்களுக்கு தமிழரும் சென்றுவருவது காலாகாலாமாகத் தொடரும் மரபாகும். இதைவிட கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் மக்களில் பெரும்பகுதியினர் புல்மோட்டை திருகோணமலை மட்டக்களப்பு கல்முனை பொத்துவில்வரையிலாக கிழக்கு கடற்கரைச் சாலையில் புட்டும் தேங்காய்பூவும்போல இனரீதியாக மாறி மாறி அமைந்த கிராமங்களில்தான் வாழ்கின்றனர். 

அதனால் அன்றாடம் என்ன பயணமென்றாலும் தமிழரும் முஸ்லிம்களும் அன்றாடம் அடுத்த இன பிரதேசத்தை கடந்துதான் பயணம் செய்யவேண்டியுள்ளது. இதன்னால் முஸ்லிம் கிராமங்களில் தமிழரோ தமிழ் கிராமங்களில் முஸ்லிம்களோ விபத்துக்களிலோ குற்றச் செயல்களிலோ சந்தேக நபர்களாகும் வாய்ப்பு எப்போதும் உள்ளது. இதனால் பிரச்சினைகளை உடனடியாக அணுகித்தீர்க்கும் பொறிமுறை அவசியமாகும். தொடர்பு சாதனங்களற்ற நூற்றாண்டுகளில் மனிதர்களாக வாழ்ந்த எங்கள் மூதாதையர்களால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட சமாதானப்பொறிமுறை இந்த கைபேசி யுகத்தில் இல்லாமல்போனதுதான் காலக் கொடுமையாகும். 

கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே சமாதானத்தி எடுத்துச் செல்ல யாருமில்லாத சூழல் அச்சம்தருகிறது.

கிழக்கில் தமிழர் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவும் அச்சங்களை தீர்க்கும் முயற்ச்சியில் தமிழ் முஸ்லிம் சிவில் சமூக தலைமையும் இருதரப்பு சமயப்பெரியார்களும் அரசியல் தலமைகளும் போதிய பங்களிப்பு செய்யவில்லையென்று குற்றம் சாட்டுகிறேன். அதனால் இரண்டு பக்கத்திலும் நிலவும் அச்சங்களை ஊதிப் பெருப்பிக்கிற சண்டியர்களின் கை ஓங்கி வருகிறது. 
.
1970 பதுகளின் பிற்பகுதியில் இருந்து தமிழ் முஸ்லிம் இளைஞர்களை மோதல் முரண்பாடுகளோடு தீவிர அடையாள அரசியலுக்குள் எடுத்துச் சென்றவர்களே இன்று, இருதரப்பு ஊர்கள் தோறும் வழிகாட்டும் பெரியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ஒருபோதும் சந்தித்ஜ்துப்பேசி பகை மறந்து உறவாட எந்த மார்க்கமும் உருவாகவில்லை. இதுதான் எங்கள் காலத்தின் கொடுமை. 

மேற்படி ஊர்ப் பெரியவர்களான தமிழரும் முஸ்லிம்களும் வரலாற்றில் தங்கள் தரப்பு தவறுகளை இளைய சந்ததிகளுக்கு சொல்வதில்லை. அடுத்த இனத்தைக் குற்றம் சாட்டுவதே அவர்கள் நிலைபாடாக உள்ளது. இதனால் மறு இனம் கொடுமைக்காரர்கள் எங்கள் இனம் தொடர்ந்தும் பாதிக்கபடுகிறவர்கள் என்கிற எண்ணம் இரு தரப்பிலும் தீவிரமாகி வருவது கவலை தருகிறது. கிழக்கு அடங்க இந்த கோணல் மனசே அடுத்த இனம்மீதான அநீதிக்கு நீதிச் சான்று வளங்கும் ஊர் அதர்மமாகச் சீரழிந்துள்ளது.
.
நீண்ட வீதியில் பிட்டும் தேங்காய்பூவும்போல அமைந்த கிராமங்களில் வாழ்கிற தமிழரும் முஸ்லிம்களும் ஒற்றுமையாய் இருப்பதைத்தவிர வேறு தெரிவில்லை. தமிழரும் முஸ்லிம்களும் தங்கள் இளைஞர்களுக்கு வடகிழக்கு மாகாணங்களின் வரலாற்றை முன்பிருந்த சகவாழ்வின் கதைகளை சொல்லவேணும் 1970பதுகளின் பிற்பகுதியில் இருதரப்பும் எதிர்கொண்ட புதிய அரசியலின் மோதல் முரண்பாடுகளை இருதரப்பும் ஒருவருக்கு ஒருவர் கொலை வீடெரிப்பு உட்பட மாறி மாறிச் செய்த கொடுமைகளின் சுயவிமர்சனத்தோடும் ஒழிவு மறைவில்லாமல் சொல்லவேணும். 

இதுமட்டுமே நம் தமிழ் முஸ்லிம் முன்னோர் வழ்ந்து காட்டிய சமதான சகவாழ்வின் அறங்களை எங்கள் தமிழ் முஸ்லி இளைய தலைமுறை வரித்துக்கொண்டு மீண்டும் ”நாம் முதலில் மனிதர்கள்” என மேம்பட்டு வாழ உதவும். . அதன்மூலம் மட்டுமே தமிழ் முஸ்லிம் இளைய தலைமுறைக்கு ஒற்றுமையாய் இருப்பது தவிர நமக்கு வேறு தெரிவு இல்லை என்கிற உண்மையை உரத்து சொல்லுதல் சாத்தியமாகும். 

எதிர் காலத்தில் பிரச்சினைகள் ஏற்படும்போதெல்லாம் பிரச்சினைகளை உறையவைத்து சம்பந்தபட்ட தரப்பு சிவில் சமூகத்தின் துணையுடன் அவற்றை கையாள வேண்டும். தமிழனுக்கும் முஸ்லிம்களுக்கும் மலையக தமிழருக்கும் சிங்களவருக்கும் நீதியும் சமத்துவமும் உரிமைகளும் உள்ள ஒற்றுமை வாழ்வு. விரோதம் அழிவு. 

9 கருத்துரைகள்:

இந்த கால முஸ்லிம்களை “பணம்-பதவி” கொடுத்து இலகுவாக வாங்கிவிடலாம். அதாவது சார், உங்கட சினிமா படங்களில் வரும் அடியாட்கள் மாதிரி. அப்படி மிகவும் துரதிஸ்டவிதமாக எமது முஸ்லிம் சழூகத்தின் கலாச்சாரம் மாறி விட்டது. ஆனால். கதைக்க விட்டால் தங்களை தாங்களே ஆகா ஓகா என புளுகி தள்ளுவார்கள்.

குரான் புத்தகத்தில் எல்லாம் நல்லா தான் இருக்கு, ஆனால் அதை ஒரு சிலர் தான் சரியாக பின்பற்றுகிறார்கள்.

ஆனாலும் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள், உலக முஸ்லிம்களோடு ஒப்பிடும் போது நம்மட முஸ்லிம்கள் நல்லவர்கள். உதாரணத்திற்கு, ஐக்கிய நாடுகள் சபை (UN) யில் தற்போது 24 அமைப்புகளை பயங்கரவாதிகளா உத்தியோகபோர்வமாக அறிவித்துள்ளார்கள். அவ்வளவும் 100% முஸ்லிம் அமைப்புகள் தான்

நானும் ஏதோ ஏதோ அறிவுரைகள் சொல்லிபாக்குறன், . ம்., ம்ம்கும்...திட்டு தான் வாங்கிறன்.

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:1)
www.tamililquran.com

தமிழ் முஸ்லிம் உறவைக் குலைக்க தமிழர்கள்தான் அதிகம் முனைவதை அன்மைய பல சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

Muslim endal ellorukkum poramaithan karanam avanthan manithanaga vala mutpadupavan, ongalamathiri akkal athavathu nangal nallavargal oru pavamum saiyyathavargal endu vayal sollikondu kamganam kattikondu thiripavargalal than nallavanudaiyya irrippu illamal pogirthu, athatku nangal valivida mattom ethirthu ninru unmaiyaum and nallathaum ulahukku kattuvom. Intha poratathai theviravatham endu sollupavan than muthalla thiviravathi and manitha kulathukku achuruthal vidupavan. So appadiyana manithargal iruppathai vida illamal povathuthan ulahukku nallathu.
Engaludaiya markam velippadiyaga ella manithargalukku sari samamaga nallthu ethu kettahu ethu endu solli thanthu irikkirathu. Athanal than nagal pavam saithalum oru mana uruthaloda sairom and pava mannipu thedonum endu ninaikkirom. Ana ongada markam pavam endale ennavendu sariya sollium illa adutha vanda vaitrula adikkiratha oru nanmaya solli thanthu irikki. So ongata irunthu eppadi oru niyamana and nadunilyana judgement a ethirparka mudium.
1) utharanamaga biramanan pamaranda vaitrula adikkan - pacha theviravatham
2) milk and water are wasred just for stones: create ecconomic issues and hunting human resources
3) Sethanakkodumai and antheviravathm penkalukku ethiraga
4) Eat only vegi.; Distroy greenery and create so much mentally depressed people.
5) Thiyanam and samism; manithanai somberiyakku oru valimurai.
Ippediye arukki kondu pogalam.

தமிழ் முஸ்லீம் உறவால் தமிழர்களுக்கு ஒன்றும் நன்மை கிடைக்கப்போவதில்லை. அதை விடுத்து சிங்களவர்களுடன் நட்பு பாராட்ட தமிழர்கள் முன் வர வேண்டும். தமிழர்களின் காணி அபகரிப்பை தடுப்பதட்கும் பொருளாதார ரீதியில் முன்னேறுவதட்க்காக சரி உதவும். இனியும் தாமதிக்காது மக்களின் நம்மை கருதி அரசுடன் இணைந்து பயணிக்க தமிழ் தலைமைகள் முன்வரவேண்டும். தமிழர்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை அமைச்சு படவிகளை பெற்று ஒரு நியாயமற்ற முறையில் சில பெருச்சாளி கூட்டங்கள் கொழுத்து வருகின்றன.

No one needs to have a byforced relationship whith oher community, all the communities have a full rights to do their needful according to their requirement in this free world, unless the fucking guys are hurting and killing the humans unreasonably. Existing of jealous people is most dangorous to the peacefulness of word and need to distroy them first before distroy anyone. As a result, now we are currently experiencing everyone comes against muslims but definitely those fuckers never get any gain against us as history express. But some dogs will keep on coming against us till they get fire, burn and distroy.
Some people are thinking that they are well clean since thay dont take any political designation, but those are the people useless people don't do any thing and only they have enough time to do treason against human and country. Rather allow such personals to live, kill them is always best so then we can save the country and ecconomy.

We - Muslims, Hindhus,Christians and Budhists should respect each other & live together happily. Everyone should learn English, Singhalese and Tamil. Then, we will talk the rest.

இப்போதுள்ள தமிழ் முஸ்லீம் பிரச்னைக்கு காரணம் முஸ்லிம்களே தவிர தமிழர்கள் அல்ல . Jaffna Muslim இணையத்தளம் ஒரு பத்திரிகைக்கு இருக்கவேண்டிய அடிப்படை பத்திரிகை தர்மம் என்பவற்றை கூட பொருட்படுத்தாது இதற்கு பெருமளவு பங்களிப்பு செய்து வருகிறது. தமிழர்களுக்கு எதிராக குறிப்பாக இந்துக்களை கேவலப்படுத்தி கோபப்படுத்தும் செய்திகளை உலகெங்கும் இருந்து தேடிப்பிடித்து அவற்றின் நம்பகத்தன்மை பற்றி சிறிது ஆராயாமல் பிரசுரித்து நச்சு விதையை விதைத்து வருகிறது .இஸ்லாமிய அடிப்படைவாத பயங்களாவதிகளின் விஷ கருத்துக்களை தடையில்லாமல் வெளியிட்டு வருவதுடன் ஏனையவர்களின் கருத்துக்களை தடை செய்து வருகிறது

Post a Comment