April 21, 2018

சிங்களவர்களின் சந்தேகங்களை, நாம் தீர்த்துள்ளோமா ?

 -மும்தாஸ் முபாறக்-

இன்று அன்றாட வாழ்வின் ஒரு முக்கியமான பேச்சுப்பொருளாகஇனவாதம்எனும்  தலைப்பு  காணப்படுகிறதுசமூகவலைத்தளங்களிலும் வேறு ஊடகங்களிலும் இது பரவலாக காணப்படுவதுடன் இதற்கான சில தீர்வுகளும் இரு சமூகத்தாலும் முன் வைக்கப்படுகிறன.எமது நாட்டில் நடந்த நீண்டகால யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் முஸ்லிம்கள் மீதான இனவாதமும் மேலோங்கியது.இதற்கு இரு தரப்பிலும் ஒரு சில தவருகள் ஏதுவாக அமைந்தன எனலாம்.விஷேடமாக இது பாரியஅளவில் தலை தூக்குவதற்கு என்ன காரணம் என நாம் ஆராய கடமைப்பட்டுள்ளளோம்.ஹலால் முதல் மலட்டு மருந்து வரை வியாபித்துள்ள இந்த பிரச்சாரத்தில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பதை பெரும்பாலான சிங்களவர்கள் அறிந்திருந்தும் இந்த அளவிற்கு முஸ்லிம்களை தாக்குவதற்கு என்ன காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சில தப்பபிப்பிராயங்களுக்கு தகுந்த பதில்கள் எமது சமூகத்தால்  முன் வைக்கப்பட்டுள்ளதையும் நாம் அறிவோம்.ஆனாலும் இப்படி சில பொய் பிரச்சாரங்கள் மூலம் பெருன்பான்மை இனத்தை இனவாதிகள் குழப்பி அதன் மூலம் முஸ்லிம்களின் உயிர்களையும் உடைமைகளையும் அழிக்கும் செயற்திட்டம் ஏன் நடைபெறுகிறது என்பதை நாம் ஆராய வேண்டும்.பெறும்பான்மை இனத்தவர்கள் இது பொய் பிரச்சாரம் என உணர்ந்தாலும் இதை  தடுக்கவோ அல்லது இதற்கு எதிராகவோ செயற்பட ஒரு சிலரைத் தவிர நடு நிலைமையாக சிந்திப்வர்கலும் முன் வருவதில்லை. இங்குதான் பிரச்சினை உள்ளது.நடு நிலைமையாக சிந்திக்கும் பெரும்பாலானோர் மௌணமாக இருப்பதுதான் மிகவும் ஆபத்தானது என்பது  வெளிப்படை.இதற்கான காரணம் என்னவென்று நோக்கினால்,இங்கு பிரதானமாக இரண்டு விடயங்களை கூறலாம்.

முதலாவது முஸ்லிம்களின் சனத்தொகை பற்றிய தப்புக்கணக்கு,
இரண்டாவது  முஸ்லிம்களின் பொருளாதார வளர்ச்சி பற்றிய எண்ணத்தால்  உருவான ஒரு வகையான பொறாமை.

எமது சனத்தொகை  இன்னும் 70,80 வருடங்களில் அவர்களை விட மேலோங்கும் எனும் எண்ணக்கரு அவர்களின்  மனதில் விதைத்திருத்தல்.இதனால் அவர்கள் எம்மை ஒரு அச்சுருத்தல்கவே நோக்குகின்றனர்.இது முற்றிலும் தவறு என்பதை ஆதாரம்,புள்ளி விபரங்கள் மூலம் நாம் எந்த அளவு பெரும்பான்மை இனத்தவர்களை தெளிவுபடுத்தியுள்ளோம்.இதற்கான ஒரு முயற்சியை ஜனாதிபதி சட்டதரணி எம்.எம்.ஸுஹைர்,சட்டதரணி ஏ.ஸீ.அஜாஸ் முஹம்மத் போன்றோர் முன் வைத்துள்ளதை சமூக வலைத்தளங்களில் பார்த்துள்ளோம்.இது மிகவும் பாராட்டக்குரியது.எனினும் இது பெரும்பான்மை இனத்தவர்களிடம் மிக குறைந்தளவே சென்றடைந்துள்ளது எனலாம்.இதை அவர்களிடம் கொண்டு போய்ச்சேர்க்கும் பாரிய பொறுப்பு எம்மிடம் உள்ளது.

இரண்டாவது முஸ்லிம்களின் பொருளாதார நிலைமை குறித்து கொண்டுள்ள தப்பான பொறாமை.அவர்களின்  எண்ணப்படி பெரும்பான்மை சமூகத்தில் முக்கால் பங்கிற்கு மேல் மக்கள் வறுமையில் வாடும் போது முஸ்லிம்களின் முக்கால் பங்கிற்கு மேல் மக்கள் வியாபாரங்களின் மூலம் அவர்களை ஏமாற்றி செல்வச்செழிப்புடன் காலத்தை கழிப்பதாக எண்ணுகிறார்கள்.இது முற்றிலும் தவரானது என்பதையும் எமது சமூகத்திலும் பெரும்பாலான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ்தான் வாழ்கிறார்கள் என்பதையும் ஆதாரங்களுடன் அழுத்தமாக தெளிவுபடுத்தப்பட்டதை மிகக் குறைவாகவே காண்கிறோம்.முஸ்லிம்களும் அவர்களைப் போன்று பெறும்பாலனோர் அன்றாட கூலி வேலை செய்பவர்களாகவும்,விவசாயம்,மீன்பிடித்துறை,வெளிநாட்டு வேலை மற்றும் பல வகையான தொழில்களில் ஈடுபட்டு குறைந்த வருமானங்களுடன்தான் தமது வாழ்க்கையை முன்னெடுக்கிறார்கள் என்பதையும் அவர்களுக்கு புரிய வைத்தல் அவசியம்.

இந்த இரண்டு காரணிகளிலும் நாம் மிகுந்த கவணத்துடன் செயற்படுவது கட்டாயமாகும்.ஏனெனில், இது அவர்களின் ஆழ் மனதில் புதைக்கப்பட்டிருக்கும் இரு நச்சு விதைகள்.இதனால்தான் சிறு வதந்திகளையும்  அடிப்படையாகக்கொன்டு எம்மை தாக்குவதற்கும் குறை காண்பதற்கும் முற்படுகிறார்கள்.இதற்கான தெளிவை நாம் முன்வைக்க தவறும் பட்சத்தில் அவர்களின் மனதில் வாழ்நாள் முழுவதும் சந்தேகமும் அச்சமும் நிலவுவதுடன் அவர்களின் அடுத்தடுத்த சந்ததியினருக்கும் இதை எத்திவைப்பதில் ஈடுபடுவார்கள்.ஆகவே இது பாரிய அச்சுருத்தலாகவே உள்ளது.இது இனவாதிகளின் அபட்டமான பொய் என்பதை நிரூபிப்பதால் நடு நிலைமை சிந்தனை கொண்ட பெரும்பாலான சிங்கள மக்களை நாம் வென்ரெடுக்கலாம்.

இதற்காக எமது சமூகத்தலைவர்கள்அரசியல்வாதிகள்துறைசார் நிபுணர்கள்சமூக ஆய்வாளர்கள்ஊடகவியலாளர்கள் போன்றோர் முன்வர வேண்டும்.இதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மை பொறுந்திக்கொள்வானாக. ஆமீன்.

4 கருத்துரைகள்:

இரண்டாவது காரணமான வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் முஸ்லிம்களின் தொகை ஒப்பீட்டளவில் சிங்களவர்களை விட குறைவாக இருக்கும், இருக்க வேண்டும் என நம்புகின்றேன், காரணம் முஸ்லிம்களின் வீண் விரயம் ஒப்பீட்டளவில் பெருன்பான்மையினரை விட குறைவானதே, அதுமட்டுமல்ல ஸகாத் ஸதகா கொடுக்கும் பழக்கம் முஸ்லிம்களிடம் இருப்பதும் முக்கிய காரணம், இதனை தான் பெருன்பான்மை சமூகத்தவர்களிடம் எத்திவைக்க வேண்டிய கடமைப்பட்டு எமக்கு உள்ளது.

மேலும் முஸ்லிம்கள் தங்களை ஏனைய சமூகத்தவர்களிடம் இருந்து தனியான பிரிவாக அடையாளப்படுத்தும் எமது உடை கலாச்சாரத்தித்திலும் புரிதலின் அடிப்படையில் பாரிய மாற்றம் ஒன்று தேவையானதாக உள்ளது. முகத்திரை, ஜுப்பா போன்ற இறக்குமதி செய்யப்படட உடை கலாச்சாரத்தில் மாற்றம்கள் ஏற்படுத்தப்படலாம்.

@Abdullah says- face cover pannitu poradaalataan boys ku Muslim girlsa sight adikkavo photos pudikkavo mudiyavillai. Tamil nanban oruvanum idai patri complacom panninaanga. Boys ku saarfaha pesinadatku nandri

I agree with your comment except the last point about that imported culture of face cover and Jubbas. if Muslims are being identified as separate race in Sri Lanka, they need these sort of symbols too. Cultural changes or adoptions are common in a moderate society and they are free to follow what they wish.in my view there are many reasons behind these problem as mentioned by M Mubarak, Abdullah and also Corrupted political system that make the people poorest by imposing unaffordable taxes which make politician richer day by day.
rected thikabove

Mumthas mubarak, ungal karuththu 100% unmayanazu, mihavum paarattathtgakkazu, izu ponra mukkiya karuththukkalai naangal innum ezir parkirom. Mihavum nanri sollikkolluvazodu, ungalai vaalthuhirom. Nanri

Post a Comment