April 25, 2018

இஸ்­ரே­லி­யர்கள் ஆக்­கி­ர­மிப்­பா­ளர்கள் என்­பதை உறு­தி­செய்து கொண்டேன் - கிறிஸ்­தவ மத­குரு சரத்


இஸ்­ரே­லிய பொலிஸார் என்னை அதட்டி சப்­த­மிட்டு பேசி­னார்கள். எனது பலஸ்­தீ­னுக்­கான விசா ரத்துச் செய்­யப்­பட்­டு­விட்­ட­தா­கவும், இஸ்­லா­மிய மாநாடு நடக்­கா­தெ­னவும் ஜோர்­தா­னுக்கு திரும்பிச் செல்­லு­மாறும் உத்­த­ர­விட்­டார்கள். பலஸ்­தீ­னுக்கு செல்­வதை அனு­ம­திக்க முடி­யா­தென்­றார்கள். இதி­லி­ருந்து இஸ்­ரே­லி­யர்கள் ஆக்­கி­ர­மிப்­பா­ளர்கள் என்­பதை உறு­தி­செய்து கொண்டேன் என கிறிஸ்­தவ மத­குரு சரத் இத்­தமல் கொட தெரி­வித்தார். 

பலஸ்­தீனில் நடை­பெற்ற சர்­வ­தேச மாநாட்டில் பங்­கேற்க இலங்­கை­யி­லி­ருந்து சென்ற தூதுக்­கு­ழு­வினர் ஜெரூ­ச­லே­மி­லுள்ள அலன் பீ எல்­லையில் தடுத்து நிறுத்­தப்­பட்டு திருப்­பி­ய­னுப்­பப்­பட்­டமை தொடர்பில் கொழும்­பி­லுள்ள பலஸ்­தீன தூத­ர­கத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது, 

"பலஸ்­தீன நாட்டில் இஸ்­லா­மிய சர்­வ­தேச மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­கான அழைப்­பிதழ் பலஸ்­தீ­னத்­தி­லி­ருந்து எனக்கு அனுப்­பப்­பட்­டது. பலஸ்­தீன தூத­ரகம் எனது விமான டிக்­கெட்டும் தயார் என தெரி­வித்­தி­ருந்­தது. ஜோர்­தா­னி­லி­ருந்து என்னை பலஸ்­தீ­னுக்கு அதி­கா­ரிகள் அழைத்துச் செல்­வார்கள் என கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. 

நான் ஜோர்தான் சென்­றதும் ஒரு பலஸ்­தீன அதி­காரி என்னை விமான நிலை­யத்தில் வர­வேற்று ஹோட்டல் ஒன்­றுக்கு அழைத்துச் சென்றார். அடுத்த நாள் பொஸ்­னி­யா­வி­லி­ருந்து வரு­கை­தந்­தி­ருந்த பேரா­சி­ரி­யர்கள் இரு­வரும் இருந்­தார்கள். காலையில் அவர்­களைச் சந்­தித்தேன்.

அங்­கி­ருந்த மாநாட்டு ஏற்­பாட்­டா­ளர்­க­ளான பலஸ்­தீன சார்பில் அதி­கா­ரிகள் எம்மை காரில் ஜோர்தான் பலஸ்­தீன எல்­லை­வரை அழைத்­துச்­சென்­றார்கள். அவ் எல்­லை­யி­லி­ருந்து இஸ்­ரே­லுக்கு செல்­வ­தற்கு பஸ் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. அங்கு பலஸ்­தீ­னுக்கு செல்­வ­தற்கு விசா காரி­யா­ல­யத்­துக்கே நான் அனுப்­பப்­பட்டேன். எனதும், பொஸ்­னி­யர்கள் இரு­வ­ரதும் பாஸ்­போர்ட்­களைப் பெற்­றுக்­கொண்­டார்கள். எம்மை வரி­சையில் நிற்­கு­மாறு கூறி­னார்கள். பாஸ்­போர்ட்டை  பரி­சோ­தனை செய்­வ­தற்­கா­கவே எடுத்துச் சென்­றார்கள். நான் வரி­சையில் நின்று கொண்­டி­ருந்தேன். 

அப்­போது பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் எனது பெயரை சப்­த­மிட்டு அழைத்தார். மாநாடு ரத்துச் செய்­யப்­பட்டு விட்­டது. ஜோர்­தா­னுக்கு திரும்பிச் செல்­லுங்கள் என்றார். 

அத்­தோடு எனது பாஸ்­போர்ட்டை இன்னோர் பெண் பொலி­ஸா­ரிடம் கொடுத்து ஜோர்­தா­னுக்கு திரும்பிச் செல்­வ­தற்­காக என்னை பஸ் வண்­டிக்கு அழைத்துச் செல்­லு­மாறு உத்­த­ர­விட்டார். நான் மேலும் இரு­வ­ருடன் வந்­தி­ருக்­கிறேன். அவர்­க­ளு­டனே நான் செல்ல வேண்டும் என்று பொலி­ஸா­ரிடம் கூறினேன். 

பின்பு என்னை வெளியில் அழைத்­துச்­சென்று அம­ரு­மாறு கூறினார். 45 நிமி­டங்கள் அவ்­வாறு  அமர்ந்­தி­ருந்தோம். சிறிது நேரத்தில் பொஸ்­னி­யாவைச் சேர்ந்த பேரா­சி­ரியர் ஒரு­வரை அழைத்து வந்­தார்கள். இஸ்ரேல் பொலிஸ் அதி­கா­ரிகள் எம்மை அச்­சு­றுத்தி கடு­மை­யான வார்த்தைப் பிர­யோ­கத்­தின்பின் எம்மை ஜோர்தான் எல்­லைக்கு அழைத்துச் செல்­லு­மாறு பஸ் டிரை­வ­ரிடம் கூறி­னார்கள். 

மீண்டும் நாங்கள் ஜோர்­தானில் தங்­கி­யி­ருந்த ஹோட்­ட­லுக்கு வந்து சேர்ந்தோம். 

ஏன் என்னை இப்­படி இஸ்ரேல் பொலிஸார் நடத்­தி­னார்கள் என்று புரி­ய­வில்லை. எனது விசா ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது என்றால் அவர்கள் அந்த விப­ரத்தை என்­னிடம் அமை­தி­யான முறையில் தெரி­வித்­தி­ருக்­கலாம். ஆனால், அவர்கள் என்னை அச்­சு­றுத்தும் விதத்­திலே விசாவை மறுத்­தார்கள். இதி­லி­ருந்து இஸ்­ர­வே­லர்­களின் ஆணவம், பலாத்­காரம் எனக்குப் புரிந்­தது. 

இலங்­கையர் என்ற வகையில் என்னை நிந்­திக்கும் வகை­யிலே அவர்கள் செயற்­பட்­டார்கள். ஒரு நாட்­டுக்கு இன்னோர் நாட்டின் சர்­வ­தேச மாநாட்­டினை தடை செய்­ய­மு­டி­யுமா? முடி­யா­தல்­லவா? பொலிஸார் சப்­த­மிட்டு கூறி­னார்கள். மாநாடு தடை செய்­யப்­பட்டு விட்­டது என்­றார்கள். 

ஒரு நாட்டின் மாநாடு நடத்தும் உரி­மையை இன்னோர் நாட்­டினால் தடை செய்­வது என்­பது மனித உரிமை மீறல் அல்­லவா? பலஸ்­தீ­னர்­க­ளுக்கு மாநாடு நடத்துவதற்கு உரிமை உள்ளதல்லவா? 

ஒரு நாட்டுக்கு கௌரவம் கிடைப்பது துப்பாக்கிகளினாலோ, அல்லது இராணுவத்தினரின், பொலிஸாரின் எண்ணிக்கையினாலோ அல்ல. அடுத்த நாடுகளை நேசிக்கும், கௌரவிக்கும் அளவிலேயே அவர்களும் கௌரவப்படுத்தப்படுகிறார்கள். இஸ்ரேல் பலஸ்தீனத்தை ஆக்கிரமித்து மேற்கொள்ளும் அடாவடித்தனங்களுக்கு மனிதாபிமானமுள்ள எவரும்  அனுமதியளிக்க முடியாது" என்றார்.

-Vidivelli

0 கருத்துரைகள்:

Post a Comment