April 28, 2018

மதத்தின் பெயரால், அடிபிடிப்படும் கடாமாடுகளே...!

Dr. Mariano Rubharajan. (MBBS)

மதத்தின்/மார்க்கத்தின் பெயரால் சேலைக்கும், அபாயாக்கும் அடிபிடிப்படும் கடாமாடுகளே!

வைத்தியசாலைகளில் உயிர்போகும் தருவாயிலும் இப்படிப்போராட முடியுமா உங்களால்? வைத்தியன், தாதி, உதவியாளன் அப்படி உடை உடுத்தி இருந்தால் நான் செத்தாலும் மருந்தெடுக்கமாட்டேன் என்று போராடமுடியுமா உங்களால்?

உங்களுக்குத்தெரியுமா, இரத்தவங்கிகளில் முக்கால்வாசி இரத்தம் சோனகனுடையது அல்லது சிங்களவனுடையது! எப்போதாவது இப்படி பொங்கியெழுந்து இரத்ததானம் செய்திருப்பீர்களா மடச்சாம்பிராணிகளே!

சேலை ஆபாசம் எனும் வெங்காயங்களே!
கடைத்தெருவில் வெட்டு வைத்த குட்டைப்பாவாடை, கையில்லாத கவுண், ஸீத்ரூ பிளவுஸ் என்று ‘கண்ணியமான’ உடைகள் விற்கும் கடைகள் யாருடையது?

இரண்டு பக்கத்திலும் அற(ரை)ப்படித்த எருமைகளால் சமூகத்தில் இறந்துபோன ஒருத்தியைக்கூட தோண்டியெடுத்து தின்கிறார்கள்! ச்சைக்... வழிசல் நாய்கள்!

சண்முகாவின் ‘காவலர்’களே! எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா உங்கள் சமூகம் குறித்து? உங்கள் பாடசாலைக்கலாசாரம் என்று எவனோ ஒரு விளங்காமண்டை ஏற்றிய உசுப்பில் இப்போது நாறுவது நானும்தான், என் சமூகமும்தான்! அடிப்படை உரிமை குறித்த அறிவு எள்ளளவேனும் கிடையாத உங்களுக்கு யார் எங்கள் சமூகத்தின் பெயரையும் சேர்த்துக்கெடுக்க அனுமதி தந்தது?

‘இனவாதம் வேண்டாம்’ என்று சொல்லிக்கொண்டு அதையே செய்யும் பைத்தியக்காரத்தனத்தையா நீங்கள் அடுத்த சந்ததிக்கும் கொடுக்கப்போகிறீர்கள்?

வீறாப்பாய் பேசினால் மடத்தனம் கூட எடுபடும் என்றா மைக்கை நீட்டியவுடன் பொங்கியெழுந்து பேசுகிறீர்கள்?

என்ன பேசுகிறோம், சரியாகத்தான் பேசுகிறோமா, நாம் பேசுவது உலகநடப்பில் ஏற்கப்படுமா என்பது கூட அறியாத நீங்களா நாளைய சமுதாயத்துக்கு அறிவூட்டுகிறீர்கள்?

குறித்த முஸ்லிம் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுப்பவனும் சரி, அதற்கு உத்தரவிடுபவனும் சரி - ஐந்து சதத்துக்கு உதவாத மூளையை வைத்திருப்பவர்கள்! வேலையை விட்டுவிட்டு ஓய்வு வாங்கிக்கொண்டு பரதேசம் போய்விடுவது எல்லாருக்கும் நன்மைபயக்கும்!

திருமலை மக்களே! அந்த ‘வீர’ப்பெண்மணி பேச்சைக்கேட்டுக்கொண்டு வீதிக்கு இறங்காதீர்கள்! உங்கள் பிள்ளைகளுக்கு நல்லவற்றை போதிக்கும், நல்ல முன்மாதிரியாகத்திகழும் நல்ல பெற்றோராயின், இவர்களுக்கு புத்திவரும்படி நாலு நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுங்கள்!

Teaching Hospital Batticaloa.

11 கருத்துரைகள்:

Dr. Rubharajan, உங்களது நேர்மைக்கும் துணிச்சலான கருத்துக்கும் நிட்சயம் மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதோடு. நீங்கள் ஒரு உண்மைத் தமிழன். துணிச்சல் மிக்க தமிழன். தமிழ் முஸ்லீம் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதட்கு நீங்கள் மிகவும் உந்து சக்தியாய் இருப்பீர்கள் என நம்புகிறோம். God bless you.

சிறந்த கருத்து.. நன்றி ஐயா உங்களைப்போன்று நடு நிலையாக சிந்திப்பவர்களை உருவாக்குவது தான் ஆசிரியர் பணி அவ்வாறில்லாமல் இனங்கனுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்த மாணவரடகளை உருவாக்குவது முட்டாள் பணி

இவர் படித்தவர்

அருமையான பதிவு உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களாலத் தான் இன்னும் எமது நாடு வாழ்கின்றது நன்றிகள்

யதார்த்தமான கருத்து.

அன்பின் நண்பரே
ஆதங்கத்தில் இங்கிதம் தவறிய எம்மரின் தவறுக்கு முதலில் நான் மனவருந்துகிறேன்.
அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காகவும் மேற்கத்திய விசமிகளின் ஏஜண்டுகளின் நரித்தந்திரங்களுக்கும் எமது சமூகங்களிலே தூவப்படும் இனவாத செயற்பாடுகளில் சிக்குண்னாது எமது சமூகத்தை பாதுகாப்போம். எமது பிரிவினையிலே குளிர்காய ஓரு கூட்டம் காத்துக்கிடக்கிறது.

Enei mail Muslim kadaigeil kuddama pavadai Kai Eilatha saddling vekkenrankail madam anru musilm uduppu kadaigeil Karan vekka madam a Kalen muddeku mail parpThu pavam anru soilukenrathu musilm Karatr eppa than tharejathu padepekum acerejaren Kalu it hurts Kailua vageru anru on rum veda mail parpThu erukkankail naila erukku

மனிதம் உங்களை அழங்கரிக்கிறது!

Timely brutal message.Hats off Bro.

Post a Comment