Header Ads



"ஹபாயாவை விரும்பினால், மாற்று மத சகோதரிகளும் அணியலாம்"

இலங்கை முஸ்லிம் பெண்களின், கடந்தகால தற்கால ஆடைகள்

-எம்.ஐ.எம்.அப்துல் லத்தீப்-

முஸ்­லிம்­களைப் பொறுத்­த­மட்டில் அவர்கள் தனி­யான கலா­சா­ரப்­பண்­பாட்டு ஒழுக்க விதிகளைப் பேணு­ப­வர்கள். ‘ஷரீஆ’ சட்­டத்தை அனுஷ்­டிப்­ப­வர்கள். இது அவர்­களின் வாழ்க்கையின் சகல விட­யங்­க­ளிலும் பிர­தி­ப­லிக்கும்,முஸ்லிம் பெண்கள் உலகில் எப்­ப­கு­தியில் வாழ்ந்­தாலும், அவர்கள் வித­வி­த­மான ஆடை­களை அணியத் தேர்ந்­தெ­டுத்­தாலும் அவ்வ மைப்­பு­களில் இஸ்­லா­மிய கலா­சாரம் பிர­தி­ப­லிக்கும். அவர்கள் மார்க்க விதி­மு­றை­களின் படி உடலின் மறைக்க வேண்­டிய பகு­தி­களை மறைத்தே அவ்­வா­டை­களை அணிவர். அதுவே முஸ்லிம் பெண்­களின் தனித்­துவம். நாட்­டுக்கு நாடு உடை அமைப்­புக்கள், வடி வங்கள் மாறி­னாலும் மார்க்க கலா­சாரம் பேணப்­படும். அண்­டையப் பெரு­நா­டான இந்­தி­யாவின் சகல பகு­தி­க­ளிலும் முஸ்­லிம்கள் வாழு­கின்­றனர் எனினும் முஸ்லிம் பெண்­களின் உடைத்­தோற்­றங்கள் மாநி­லத்­துக்கு மாநிலம் வேறுபட்டாலும் மார்க்க சட்ட விதி­களைப் பேணியே ஆடை­களை அணிவர். இதன்­படி இலங்கை யின் சில பகு­தி­களும் அமை­கின்­றன. புத்­தளம், கல்­பிட்டி, மன்னார், யாழ்­ப்பாணம், சிலாபம்,பேரு­வளை, கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் தென்­னிந்­தி­யாவின் காயல்­பட்­டணம், அதி­ராம்­பட்­டணம், கீழக்­கரை, முத­லான பிர­தே­சங்களிலி­ருந்து குடி பெயர்ந்­த­வர்கள். எனவே, இவர்­களின் ஊண், உடை, மொழி நடை, கலாசாரம், பண்­பா­டுகள் யாவும் அவர்­களின் நடை முறை­யா­கவே ஆரம்ப காலத்தில் இருந்திருக்கும், காலப்போக்கில் சில, பல மாற்­றங்கள் ஏற்­பட்­டி­ருக்­கலாம். 

ஆரம்பகாலப்­ப­குதி முஸ்லிம் பெண்கள் ‘கம்­பாயம்’ என அழைக்­கப்­பட்ட தடித்த ஒரு வித புடை­வையை அணிந்­தனர். அவை தமிழ் நாட்டின் கம்­பாயம் என்ற பகு­தி­யி­லி­ருந்து தரு­விக்­கப்­பட்­ட­வை­யாக இருக்­கலாம். இப்­பு­டை­வைகள் பல வித சதுரக் கோடு­களால் பல வித கடும் நிறங்­களால் ஆனவை. மருந்­துக்கும் மலர் வடி­வங்­களோ வேறு ‘டிசைன்’  அமைப்­புக்­களோ கம்­பாயப் புடை­வை­களில் இடம் பெற்­றி­ருக்­காது. இப்­பு­டை­வை­யா­லேயே தலையை மறைத்து முக்­காடும் இட்டுக் கொள்வர். வெள்ளை அல்­லது வேறு கடும் நிறங்­களில் மேல் சட்டை அணிவர். கைச் சட்­டையில் ஒரு­வித கொசுவம் வடி­வ­மைத்திருப்பர். ‘றால் மண்­டைக்கை’, ‘விசி­ரிக்கை’ ‘காப்­புக்கை’, ‘பிளேன்கை’ என்­ப­னவும் வேறு. கம்­பாயப் புடை­வையை விரும்­பாத இளம் வயதுப் பெண்கள் ‘சீத்தை’ புடை­வை­களை அணிந்­தனர். இவை கம்­பாயப் புடை­வை­யிலும் சற்று மெல்­லி­யவை. கடும் நிறப் பின்னணியில் மலர்கள், மலர் கொத்­துகள் நிறைந்த அமைப்­பாக இருக்கும். சிலர் சிறிய மலர் டிசைன்­க­ளையும், சிலர் பெரிய பெரிய மலர் டிசைன்கள் கொண்ட சீத்­தை­க­ளையும் விரும்பி அணிந்­தனர். மேல் சட்­டை­களை தனித்­தனி நிறங்­க­ளி­லா­ன‘ பொப்லின்’ துணி­களில்  பெற்றுக் கொண்­டனர். காலப்­போக்கில் சீத்தைப் புடைவை அணி­வ­திலும் பெண்கள் மாற்­றத்தைத் தேடினர். அவற்றை சிறு­மி­களின் ‘கவுன்’ முத­லான ஆடை­க­ளுக்கு மாற்­றி­விட்டு தாங்கள் சீத்­தை­யிலும் மெல்­லி­தான ‘வொயில்’ சாரி­களை அணி­வதில் நாட்டங் கொண்­டனர். அவை மெல்­லியதாகவும், ஊட­றுத்துப் பார்க்கக் கூடி­ய­தா­கவும், இது­வ­ரை­யி­லான கடும் நிறங்­களை நாடு வதி­னின்றும் சற்று விலகி, ‘லைட்‘ இளம் டிசைன்­களைத் தெரிவு செய்­வ­திலும் கவனஞ் செலுத்­தினர். இதனை கம்­பாயம் அணி­வதைத் தொடர்ந்து கடை­பி­டித்த மூத்த பெண்கள் அதா­வது பாட்டி தரத்­தி­லா­ன­வர்கள் சற்று முறைத்தும் பார்த்­தனர்.  இதற்கு இக்­கா­லப்­ப­கு­தியில் அறி­மு­க­மான சினி­மாத்­துறை நாக­ரிகம், கல்­வித்­துறை வளர்ச்சியுடன் வெப்­பக்­கா­ல­நி­லையும் கார­ணங்­க­ளா­யின. எனினும் கம்­பாயம் அணி­வோ­ரது ஆடைத்  தெரிவில் மாற்றம் இருக்­க­வில்லை.
வொயில் சாரி­களை விரும்­பிய இளம் பெண்கள் அவற்றின் ஊடு­ருவும் தன்­மை­யி­லி­ருந்து தவிர்ந்து கொள்ள சாரி அணியு முன்னர் பொப்லின்  துணி­யா­லான ‘சாயா’ என்ற உள்­ளா­டையை அணிந்தே வொயில் சாரி­க­ளையும், இதற்கும் பின்னர் அறி­மு­க­மான பல­வித சாரி­க­ளையும் அணிந்­தனர். இக்­கா­லப்­ப­குதியில்­கல்வித் துறையும் வளர்ச்சி கண்டு முஸ்லிம் பெண்­களும் ஏனைய இனத்­த­வர்­களைப் போல ஆசிரியைத் தொழில் மற்றும் தொழில்­க­ளுக்கும் செல்லத் தொடங்­கி­யதால் இச்­சாரித் தெரி­வு­களிலும் மாற்­றங்கள் ஏற்­பட்­டன.அத்­துடன் உள்­ளாடை பெயரில் மார்­புக்­கச்­சையும் இணைந்­தது. பின்னர் சாரி­களில் மாற்­றங்கள் வந்­தன. புதுப்­புதுப் பெயர்­களில் பல சாரி டிசைன்கள் படிப் படி­யாகப் புழக்­கத்தில் வந்­தன.அவற்றைப் பெண்கள் ஆவ­லுடன் வாங்கி அணிந்து மகிழ்ந்தனர்.

அவை­யா­வன ‘ஓகண்டி’, ‘டிஷு’, ‘நைலோன்’, ‘நைலக்ஸ்’ போன்­றவை. இவை ஓரளவு பள­ப­ளப்­பா­கவும், வழு­வ­ழுத்த தன்­மை­யு­டனும், கவர்ச்­சி­யான அலங்­கார டிசைன்­க­ளுடனும் வந்­த­வண்­ண­மி­ருந்­தன. புடைவை வியா­பா­ரத்­திலும், அவற்றை அணிந்து வலம் வருவதிலும் போட்டித் தன்­மைகள் ஏற்­பட்­டன. விசேட தினங்­க­ளிலும், பண்­டிகைத் தினங்­க­ளிலும் புடைவை வியா­பா­ரங்கள் கரை புரண்­டன. புடைவை வர்த்­தக நிலை­யங்­களின் விற்­பனையைத் தவிர, புடை­வைப்­பொட்­டணி வியா­பா­ரி­களும் வீடு­க­ளுக்கு வருகை தந்­தனர். ஒரு வீட்­டுக்கு ஒரு பொட்­டணி வியா­பாரி வந்து வீட்டு முன்­தண்ணையில் பொட்­ட­ணியை இறக்­கி­விட்டால் அக்கம்பக்­கத்து வீட்­டுப்­பெண்­களும் புடைவை பார்க்க, வாங்க வந்து குழு­மி­வி­டுவர். பெண்கள் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கும், தெரு வழியே அமைக்­கப்­பட்­டி­ருக்கும் பெருநாள் ‘சேல்’ களுக்கும் சென்று புடை­வை­களை வாங்கும் நிலை­மை­களும் ஏற்­பட்­டன. இதனால் கலா­சாரப் பிரச்­சி­னைகள் தோன்­றின. மஸ்­ஜித்­க­ளிலும், மார்க்க உப­தே­சக்­கூட்டங் களிலும் சமயப் பெரி­யார்­களால் கண்­ட­னங்­களும் அறி­வு­ரை­களும் நிகழ்த்­தப்­பட்­டன. அதுவரைகா­லமும் கண­வர்­களே கடை­களில் பெண்­க­ளுக்கும் பிள்­ளை­க­ளுக்குமான ஆடை­க­ளையும் விரும்பி வாங்கி வருவர்.வீட்­டி­னரும் அவற்றை விரும்பி அணிவர். பெண்கள் ஆண்­கள் முன்  செல்­வ­தில்லை.

இப்­போது காலம் மாறி பெண்­களே புடைவைக் கடை­களில் உடை­களைத் தெரிவு செய்­கின்­றனர், கொள்­மு­தலும் செய்­கின்­றனர். அல்­லது கண­வர்­க­ளுடன் மனை­விய ரும் புடைவைக் கடை­க­ளுக்குச் செல்­கின்­றனர். இது கலா­சார பிறழ்ச்­சியைக் காட்­டு­கி­ன்­றது என்பர். இந்­நி­லை­மை­களால் கணவர்களும் பொரு­ளா­தா­ர­சிக்­கல்­களுக்கு உள்­ளா­கின்­றனர். அதிக பணம் தேட­வேண்­டிய நிலை அவர்­க­ளுக்கு இக்­காலப் பகு­தியில் வட இந்­திய ஆடை நாக­ரி­கமும் நம் இளம் வயதுப் பெண்களை ஈர்த்துக் கொண்­டது.சாரி­க­ளுக்குப் புறம்­பாக வட­இந்­தியப் பெண்­களைப் போல இவர்­களும் ‘சராரா’, ‘மெட்சி’, ‘சல்­வார்’­ அ­ணி­யத்­தொ­டங்­கினர்.முஸ்லிம் பிள்­ளைகள் ‘சோல்’ என்னும்  துண்­டினால் தங்கள் தலை­களை மறைத்துக் கொண்­டனர்.இப்­போது இளம் பெண்கள் சாரி களை ஒதுக்­கி­விட்டு இவை­க­ளையே அணிந்து வலம் வந்­தனர்.கம்­பாயம், சீத்தை, கலா­சாரம்  பாவி­னை­யி­லி­ருந்து மறைய, பெரிய பெண்கள் சாரி­களை அணிய இள­சுகள், வட­இந்­திய மேற்­படி ஆடை­களை மோகித்­தனர். மனப்­பெண்­க­ளுக்­கென விசேட சாரிகள் அதிக விலைக ளுடன் கொள்­முதல் பண்­ணப்­பட்­டன.
 
 எனினும் இவை அவ்­வை­ப­வத்­திலும் அடுத்த இரண்டொரு வைபவங்களி­லுமே அணி­யப்­பட்­டன. ஜரி அலங்­கார வேலைப்­பா­டு­க­ளுடன் கூடி­ய­தான  ‘பெனாரஸ்’ ‘காஞ்­சி­புரம்’ ‘காஷ்­மீர்’­முத­லான சாரி­களும் மணப்­பெண்­களை அலங்­க­ரித்­தன.  பொது­வாக பாரம்­ப­ரிய இப்­பெ­யர்கள் இவை விசே­ட­மாகத் தயா­ரிக்­கப்­படும் நக­ரங்­களின் பெயர்­களைத் தாங்­கியே வந்­தன, வரு­கின்­றன. இவ்­வாறு காலம், நாக­ரிகம் என்­பன மாற­மாற உடைகள் மாத்­தி­ர­மன்றி யாவுமே மாற்றம் கண்­டன. எனினும் புதிய வித­வித ஆடை­க­ளை­ய­ணிந்­தாலும் முஸ்லிம் பெண்கள் தமது மார்க்கக் கலா­சாரம் பேணியே ஆடை­ய­ணிந்­தனர். முற்­காலப் பெண்கள் கம்­பாயம் அணிந்த போது தலையில் முட்­டாக்கு (முக்காடு) இட்­டனர். தெருக்­களில் செல்­லும்­போது வீதி ஓர­மாக செல்­வ­துடன் தலையை மறைத்த முக்­காட்டின் முகத்­துக்கு இரு­பக்க சீலை கரை யை ஒரு கையால் ஒன்­றி­ணைத்து முகவாய்க் கட்­டை­யுடன் பிடித்து முகம் மூடிச்­சென்­றனர். மோட்டார் வண்­டிகள், மாட்டு வண்­டி­களில் பய­ணிக்கும் முஸ்லிம் பெண்கள் மோட்டார் வண்­டியின் இரு பக்­கங்­க­ளிலும், மாட்டு வண்­டியின் முன் பின் பக்­கங்­க­ளிலும் துணி­களை தொங்­க­விட்டு தங்­களை மறைத்துப் பய­ணித்­தனர். 

பாட­சாலைச் சீருடை 
பொது­வாக பெண் பிள்­ளை­களின் பாட­சாலைச் சீரு­டை­யாக சிங்­கள தமிழ் மாண­விகள் முழங்கால் வரை­யான வெள்ளை நிற கவுன் அணிந்து கழுத்துப் பட்­டியும் அணிந்து செல்வர். இது முஸ்லிம் பெண் பிள்­ளை­க­ளுக்குப் பொருந்­தாது. எனவே முஸ்லிம் கல்வியாளர்­களும், பெற்­றார்­களும் பரி­சீ­லித்து வட இந்­தி­யாவின் சகல பெண்­களும் இன, மத பேதம் பாராது அணியும் ‘பஞ்­சாப்பி’ ஆடை எனப்­படும் நாம் அழைக்கும் ‘பாய் கல்சான்  என்னும் ஆடையைத் தெரிவு செய்­தனர். பஞ்­சாப்­பி­யரை நாம் பொது­வாக 'Baai’ பாய் என்றே அழைப்போம். இவ்­வாடை இஸ்­லா­மிய ஒழுக்க நெறிக்கும் உட்­பட்­ட­தாக அமைந்ததால் நாமும் இவ்­வா­டையைத் தெரி­வு­செய்தோம்.ஆனால் நமது நாட்டுப் பிற மதப் பாட­சாலை நிர்­வா­கத்­தினர் சிலர் இந்த பஞ்­சாப்பி சீரு­டையை முஸ்லிம் சீருடை எனக் கருதி தடை செய்­வது பெரும் தவறும் கவலை தரு­வ­து­மாகும். எம்மில் இத்­த­கை­ய­தான இன­வாதப் பார்வை இல்லை.

இறை­வனும் தன் திரு­மறை அல் - குர்­ஆனில்,
‘நபியே! விசு­வா­சி­யான ஆண்­க­ளுக்கு நீர் கூறும்! அவர்கள் தங்கள் பார்­வையை கீழ் நோக்கி வைக்கவும். தங்கள் கற்­பையும்; இரட்­சித்துக் கொள்­ளவும். இது அவர்­களை பரி­சுத்­த­மாக்கி வைக்கும். நிச்­ச­ய­மாக அல்லாஹ் அவர்கள் செய்­ப­வை­களை நன்­க­றிந்து கொள்­கிறான்’ அத்.24: 30. ‘நபியே! விசு­வா­ச­முள்ள பெண்­க­ளுக்கு நீர் கூறும்! தங்கள் பார்­வையை கீழ் நோக்­கியே வைத்துத் தங்கள் கற்­பையும் இரட்­சித்துக் கொள்­ளவும்.(அன்றி, தங்கள் தேகத்தில் பெரும்­பாலும்) வெளியில் தெரி­யக்­கூ­டி­யவைகளைத் தவிர தங்கள் அழ­கையும், (ஆடை, ஆப­ரணம் போன்ற) அலங்காரத்­தையும் வெளிக்­காட்­டாது மறைத்துக் கொள்­ளவும். தங்கள் முந்தானைகளால் மார்­பையும் மறைத்துக் கொள்­ளவும்…’ அத்.24: 31 

 எனவே, எமது முஸ்லிம் பெண்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி ஆண்­க­ளுக்கும் தங்கள் பார்வையைத் தாழ்த்­தும்­படி கூறு­வ­துடன் தங்கள் கற்­பையும் பாது­காக்கும் படி புனித குர்ஆன் வலி­யு­றுத்­து­கின்­றது.

ஹபாயா
கடந்த இரு­பது வரு­டங்­க­ளுக்குள் இலங்கைப் பெண்கள் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு  வீட்டுப் பணிப் பெண்­க­ளாகச் சென்­றது போல முஸ்லிம் பெண்­களும் சென்­றார்கள். குறிப் பாக சவுதி அரே­பி­யா­வுக்குச் சென்ற பெண்கள் அங்­குள்ள சட்­ட ­திட்­டங்­க­ளுக்கு ஏற்ப அவர்கள் வெளியில் செல்லும் போது தலையை மறைத்து செல்ல நேரிட்­டது.பொது­வாக பணிப்­பெண்கள் வீட்டுப் பெண்­க­ளு­ட­னேயே செல்­வார்கள். அப்­போது அவர்­களும் அரபுப் பெண்­களைப் போல ‘ஹபாயா’ அணிந்து செல்லப் பழகிக் கொண்­டனர். இது நமது  முஸ்லிம் பெண்­க­ளுக்குத் தமது கலா­சா­ரத்­துக்கு ஏற்ற உடை­யா­கவும், சிக்­க­ன­மா­ன­தாகவும் அமைந்­ததால் விடு­மு­றையில் வரும்­போ­தெல்லாம் அதனை அணிந்து வந்­த­துடன்  தமது உற­வு­க­ளுக்கும் வாங்கி வந்­தனர். இப்­ப­டித்தான் அரபு நாட்டு ஹபாயா இலங்கை முஸ்லிம் பெண்­க­ளி­டமும் புழக்­கத்தில் வந்­தன. இக்­கா­ர­ண­மன்றி சில இன­வா­திகள் கூறுவது போல அரபு நாட்­ட­வ­ராலோ அல்­லது பாக்­கிஸ்­தா­னி­ய­ராலோ வலிந்து திணிக்கப் பட்­ட­தல்ல.


இது­வரை இந்­திய ஆடை­களை அணிந்த இலங்கை முஸ்லிம் பெண்கள் தற்­போது ஒரே நிறத்­தி­லான ஹபா­யாக்­களை அணிந்து வெளியில் செல்­வ­தற்கு மார்க்க, பொரு­ளா­தார ரீதி­யான கார­ணங்கள் உள்­ளன. மார்க்­கத்தில் கூறப்­பட்­டுள்ள நிய­தி­க­ளுக்கு ஏற்ப இந்த ஒரே ஹபா­யாவில் அத்­தனை விட­யங்­களும் அமை­வ­தாலும் உடலின் இடை, மார்­பகம், முகம் முத­லா­னவை வெளிக்­காட்­டப்­ப­டா­மலும் பாது­காக்க முடி­கின்­றது. அத்­துடன் அயலவர்­களைப் பார்த்­துப்­பார்த்து வித­வி­த­மான சாரி­களில் நாட்­டங்­கொள்­ளாது,கண­வர்­க­ளுக்கு பொரு­ளா­தார தாக்கம் ஏற்­ப­டாது பாது­காக்­கின்­றது. அத்­துடன் தமது தனித்­து­வமும் பேணப் படு­கின்­றது. இந்த வகையில் இது­வரை அணிந்து வந்த டசின் கணக்­கான சாரி­க­ளுக்கு பதி­லாக இரண்­டொரு சாரி­களை பாவ­னையில் வைத்துக் கொண்டு வெளியில் செல்லும் போது சாரியின் மேலால் ஹபாயா அங்­கியை அணிந்து செல்­கின்­றனர். இளம் வயதுப் பெண்கள் சாரி அணி­யாது உள்ளே மெல்­லிய கால்­சட்­டை­ய­ணிந்து ஹபா­யாவை அணிந்து செல்­கின்­றனர். இப்­படி ஹபா­யாவின் தெரி­வா­னது செல்­வந்தர், ஏழை என்ற தரம் நீக்கி சமத்­துவம், சிக்­கனம், கவர்ச்சி நீக்­கிய ஒழுக்கம் பேணலை வலி­யு­றுத்­து­கின்­றது. எனினும் இது முஸ்­லிம்­களின் ஆடை என்ற மாயையை நீக்கி யாவரும் அணி­யலாம் என்­ப­துவே உண்மை.

32 வய­தான சவூதி அரே­பி­யாவின் பட்­டத்து இளவரசரான மொஹமட் பின் சல்மான் அண்மையில் அமெரிக்காவின் CBSN தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த நேர்காணலில் ‘கறுப்பு அபாயாதான் அணிய வேண்டுமென இஸ்லாம் கூறவில்லை ஷரீஆ சட்டங்களில் மிகத் தெளிவாகக் குறித்துரைக்கப்பட்டுள்ளன. பெண்கள் ஒழுக்கமான, மரியாதையான ஆடைகளை அணியவேண்டும், எனினும் இது கறுப்பு நிற அபாயா அல்லது கறுப்பு நிற தலை மூடும் ஆடையினை அணிய வேண்டும் என குறிப் பிடவில்லை. ஒரு பெண் எவ்வாறு ஒழுக்கமான மரியாதையான ஆடைகளை அணியவேண்டும் என நினைக்கின்றாரோ அவ்வாறு அவர் அணிந்து கொள்ள முடியும், அதனைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெண்களிடமே விடப்பட்டுள்ளது…..’ (30.03.2018 விடிவெள்ளி) இது கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

இங்கே சவூதி அரேபிய பெண்கள் ஹபாயாவை அணிவதால் நமது முஸ்லிம் பெண்களும் அதனை அணிகின்றனர் என்ற கருத்தை விடுத்து மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது  போல அது ஒழுக்கத்துக்கும், சிக்கன வாழ்வுக்கும் உதவுகிறது என்பதாலேயே அணிகின்றனர் என்பதே பொருத்தமான கருத்தாகும். விரும்பினால் மாற்று மத சகோதரிகளும் இதனை அணியலாம்.

2 comments:

  1. Writer article very long no body will read this. Pls rewrite with short news. Thanks

    ReplyDelete
  2. Comprehensive article from holistic perspe tive. Well n Good.

    ReplyDelete

Powered by Blogger.