Header Ads



தர்மசங்கடமான நிலைக்கு, தள்ளிவிடப்பட்டுள்ள ஜனாதிபதி

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சார்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தர்மசங்கடமான நிலைக்கு தள்ளிவிட்டுள்ளனர். ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றிநை்தே நாட்டின் எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

குருநாகல் வெலகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கூட்டு எதிரணியினரின் நம்பிக்கையில்லா பிரேரணை பாரிய தோல்வியினை அடைந்துள்ளது.  தேசிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தற்போது பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை தோற்றம் பெற்றுள்ளது. இவர்களின் முறையற்ற செயற்பாட்டின் காரணமாக இரண்டு பிரதான கட்சிகளுக்குமிடையில் தற்போது கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.