Header Ads



ஷாஜஹான் சேருக்கு, ஆலயத்தில் தோன்றிய ஐடியா (இந்தப் பிள்ளைகளுக்கு உதவுவோமா..?)

ஆலயமொன்றில் நடைபெற்ற நிகழ்வு அது. அங்கு ஒரு யுவதி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

அந்தப் பெண் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய விதம் விஷேட பேச்சாளராக அங்கு சென்றிருந்த ஷாஜஹான் சேர் அவர்களை மிகவும் கவர்ந்தது. அந்த யுவதி குறித்து மதகுருவிடம் வினவலானர்.

 'இது உங்கட இனத்துப் பிள்ளதான். ஆனால் அவள் ஒரு அநாதை சின்ன வயது முதல் இந்த ஆலயத்தில் தான் இருக்கின்றாள்.

எத்தனையோ முஸ்லிம்களிடம் அவளை எடுத்துச் சென்று வளர்க்கச் சொன்னேன் யாரும் முன்வரவில்லை. பின்னர் இங்கேயே வளர்ந்தாள்'

மதகுருவின் பதில் சாஜஹான் சேரின் மனதில் பல விதமான எண்ணங்களைத் தோற்றுவித்தது. அடுத்த மதங்களில் அநாதைகளை ஆலயங்கள் பொறுப்பேற்கும் வழக்கம் உள்ளது. ஆனால் எமது மதத்தவர்களிடம் அப்படியான ஏற்பாடுகள் மிகவுமே குறைவு. ஆனாலும் இந்த நிலை இனிமேலும் தொடரக் கூடாது. இதற்காக தன்னால் முடிந்த ஏற்பாடுகளை செய்தே ஆகவேண்டும் என்பதாக முடிவெடுத்தார்.

தனக்கு தெரிந்த பலரிடமும் இது சம்பந்தமாக கதைத்தார். சேர் இது பெண்பிள்ளைகள் விடயம், திருமணம் முடிக்கும் வரை அவர்கள் பராமரிக்கப்பட வேண்டும். இது ஒருவகையில் ரிஸ்க்கான விடயம். பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும். அந்தக் குழந்தைகள் நடுத்தெருவுக்கு வந்தால் அது குறித்து நீங்கள் பாரிய விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும். எதற்கும் இன்னொரு முறை யோசித்துக் கொள்ளுங்கள் என்பதாகவே அபிப்பிராயங்கள் வந்தன.

எனினும் இந்த விடயத்தை ஒதுக்கிட சாஜஹான் சேர் எண்ணவில்லை. தன்னால் முடிந்த அளவில் இந்த திட்டத்தை முன்னெடுப்பது என முடிவெடுத்தார். (கம்பளை) வட்டதெனியவில் அவரது வீட்டுக்கு பக்கமாக உள்ள காணி ஒன்று கொள்வனவு செய்யப்படுகின்றது.

எஸ் எப் ஆர் டீ நிறுவனத்தின் ஊடாக முதல் கட்டிடம் கட்டப்படுகின்றது. ஆரம்ப கட்டமாக 21 மாணவியுடன் ஆடம்பரமில்லாமல் ஆரம்பமானது அந்த விடுதி.
இன்றளவில் ஓரிரு வருடங்கள் கடந்து விட்டன. 72 மாணவிகளுக்கு இந்த நிறுவனம் புகலிடமளித்துவருகின்றது. அவர்களுக்காக பாடசாலையும் ஒன்றும் அந்த வலாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 6ஆம் ஆண்டு முதல் 11ஆம் ஆண்டுவரை வகுப்புக்கள் நடாத்தப்படுகினறன. அது தவிர முதலாம் ஆண்டு முதல் ஆங்கில மொழி மூல பாடசாலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

மேற் குறிப்பிட்ட பாடசாலைகளின் கதவுகள் பொதுவானவர்களின் பிள்ளைகளுக்காவும் திறக்கப்பட்டுள்ளன. அதில் கல்வி பயில்வதற்கு யாராயினும் தமது பெண் பிள்ளைகளை சேர்க்கலாம் அவர்கள் அனாதைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. காலையில் பாடசாலைக் கல்வி மாலையில் சரீஆ கற்கை என்ற அடிபபடையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்ட அந்தப் பாடசாலையில் கற்கும் மாணவியர் 11 ஆம் ஆண்டு கல்வியைப் பூர்த்தி செய்யும் போதே ஒரு மௌலவியாவாக கற்றுத் தேர்ந்திருப்பர்.
இன்றளவில் விடுதியில் தங்கியிருக்கும் அநாதைக் குழந்தைகளுக்காக நாளாந்தம் 18,000 ரூபா அளவில் செலவுண்டு.

தணவந்தர்களின் உதவிகள் இறந்தவர்களுக்கு நன்மை கருதி அவர்களது உறவினர்களால் வழங்கப்படும் சதகாக்கள் என்ற அடிப்படையில் கிடைக்கும் நிதி உதவி மூலம் இறைவனின் அருளால் அந்த நிறுவனம் இயங்குகின்றது. சில தணவந்தர்களின் அன்பளிப்புகளால் கட்டிடங்களின் பகுதிகளும் நிர்மாணிக்கப்பட்ட வண்ணமுள்ளது.

அந்தக் குழந்தைகள் ஆக்கப் பணி செய்வதற்காகவும் பயிற்றுவிக்கப்படுகின்றன. அவர்கள் வரைந்த ஓவியங்கள் சில 50,000 ரூபா வரை விற்பனையாகின என்பது மேலதிகத் தகவல்.
இந்தக் குழந்தைகளின் நலனுக்காக அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிர்மாணப் பணிகள் ஏராளமுள்ளன. நாளை அவர்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான வாழ்வாதார பாட நெறிகள் ஆரம்பிப்பதற்கான தேவைகளும் உண்டு.

அநாதைகளுக்கு ஆதரவளிப்பது குறித்து அல்குர்ஆன் நேரடியாகவே பேசியுள்ளது. அநாதைகளுக்கு ஆதாரவளிப்போர் என்னுடன் இவ்வாறு இருப்பார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் தனது இரண்டு விரல்களை சேர்த்துக் காட்டினார்கள்.

உங்களாலும் இவர்களுக்கு ஆதரவளிக்கமுடியும். ஒரு முறை அந்த விடுதிக்கு சென்று பாருங்கள். உங்களது குழந்தைகளின் அகீக்கா பிறந்த நாள் கொண்டாட்டம் போன்ற நிகழ்வுகளை அந்த குழந்தைகளுக்காக வழங்குங்கள். உங்களது வீட்டு வலீமா நிகழ்வின் போது சில சகன்களுக்கான செலவை அவர்களுக்காகவும் வழங்குங்கள். அவர்கள் உங்களுக்காக துஆச் செய்வார்கள்.

அதுவும் முடியவில்லையா இந்தச் செய்தியை இன்னொருவருக்கு எத்திவையுங்கள். இதனை செயார் செய்வதால் வட்சப் நிறுவனமோ பேஸ் புக் நிறுவனமோ எந்த தொகையையும் வழங்காது. மாறாக இதை செயார் செய்வதன் ஊடாக இறைவனின் அருள் உங்களுக்கு கிட்டும். பயங்கரமான ஆபத்துகளிலிருந்து இறைவன் உங்களைக் காபபற்றக் கூடும். சில வருடங்கள் கடந்து வரவிருக்கும் கென்சர் சிறுநீரக நோய் இருதய நோய் போன்ற கொடிய நோய்கள் உங்களையோ உங்கள் குடும்பத்தையோ அண்ட விடாமல் இறைவன் தடுக்கக்கூடும்.

இன்று மாலை அந்த வளாகத்திற்கு சென்றபோது அங்கு அமைத்திருக்கும் மீன் தொட்டியில் இடுவதற்க இரண்டு அலங்கார மீன்களை வாங்கிக்கொண்டு ஐந்து வயது சிறுவன் ஒருவன் தன் தந்தையை அழைத்துவந்தான். 


அந்த சிறுவனின் அக்கறையைவிட பலமடங்கு அக்கறை இதை வாசிப்பவர்களுக்கு இருக்கும். இருக்கவேண்டும்.
மேலதிக தகவல்களுக்கு

சாஜஹான் சேரை 0772223930 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்

அன்புடன் 
வெலம்பொட ராஃபி

1 comment:

Powered by Blogger.