Header Ads



தங்கத்திற்கு வரி விதிப்பு - ரவிக்கு கொதிப்பு

தங்கத்திற்கான வரி தேவையற்ற ஒன்றாகும் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பு தொட்டலங்க பகுதியில் நடைபெற்ற கட்சி நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்...

தங்கத்திற்கான 15 வீத வரி தேவையற்ற ஒன்றாகும்.

மக்கள் மீது தேவையற்ற வரி சுமத்துவதனை ஏற்றுக் கொள்ள முடியாது, இதனை எதிர்க்கின்றேன்.

அரசாங்கம் மாறினாலும் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் அதிகாரிகளில் மாற்றம் ஏற்படவில்லை.

இதன் காரணமாகவே இவ்வாறான நிலைமைகள் உருவாகியுள்ளன.

ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டை பாதுகாப்பதற்கு கடுமையான முயற்சி எடுத்து வருகின்றனர்.

எனினும், அதனை குழப்பும் முயற்சியில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. People will teach a good lesson to UNP in the next election......

    ReplyDelete
  2. Who need advise from this Big THIEF RAVI...
    Again trying to catch the seat..

    ReplyDelete
  3. Big THIEF GIVING ADVISE.. Silly.. Write or wrong we are not in need of your ADVISE... YOU THIEF..

    ReplyDelete

Powered by Blogger.