Header Ads



இந்த அரசாங்கத்திற்கு ஈவு, இரக்கம் கிடையாது - மஹிந்த

இந்த அரசாங்கத்திற்கு ஈவு இரக்கம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்றிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

சவூதி அரேபியாவில் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், உலக சந்தை விலை அதிகரிப்பு என்ற போர்வையில் எரிவாயு விலையை அரசாங்கம் அதிகரித்துள்ளது.

நாட்டு மக்கள் மிகவும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த அரசாங்கம் ரோபோ போன்றது, ஈவு இரக்கம் எதுவும் கிடையாது.

எரிவாயு விலை அதிகரிப்பினால் உணவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரங்களில் மட்டும் காணப்பட்ட எரிவாயு சிலிண்டர் பயன்பாடு இன்று கிராமங்களிலும் வியாபிக்கப்பட்டுள்ளன.

எரிவாயு மட்டுமன்றி இவர்கள் ஏதேனும் ஓர் பொய்யைக் கூறி மின்சாரம், நீர்க்கட்டணம் என்பனவற்றையும் அதிகரிக்கக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. YAHAPALANA COPY OF YOU.
    ALL YOUR SAME THEIFS.

    ReplyDelete
  2. The price of a 12.5 kg LP gas cylinder will be increased by Rs. 245 from midnight Friday, Litro Gas, one of the main suppliers of domestic LP gas said.
    Accordingly, the price of a 12.5 kg LP gas cylinder currently at Rs. 1431 will be increased up to Rs. 1676 from midnight today.
    This price has been revised due to the increase of gas prices in the world market, Litro Gas said.
    Before the present government came to power in 2015, the price of a domestic gas cylinder was Rs. 2,440.
    இந்த அரசாங்கத்துக்கு இரக்கம் கிடையாது என்று புலம்பும் காற்று போன ஜனாதிபதி அவர்களே உங்கள் காலத்தில் காஸ் சிலிண்டர் எவ்வளவு இருந்தது என்று உங்களுக்கு தெரியுமா (Rs. 2,440.) ? தற்போது விலை கூடியும் எவ்வளவு தெரியுமா (Rs. 1676)அந்த நேரம் உங்களுக்கு அதற்கான நேரம் இருக்க இல்லை என்று நான் நினைக்கின்றேன். தற்போது உங்களுக்கு நேரம் மேல் அதிகமாக இருக்கின்றது அதுதான் இந்த புலம்பல். எல்லாம் ஆட்சி கைக்கு வரும் வரைக்கும் தான் புலம்பல் பின் எப்படி இருந்தோம் என்று கூட நினைவில் இல்லது போகும். தற்போது பதவியில் உள்ள லட்டரி (lottery) ஜனாதிபதி போல்.

    ReplyDelete

Powered by Blogger.