Header Ads



சம்பளம் முழுவதையும், கல்விக்காக செலவிடும் உள்ளூராட்சி உறுப்பினர்

இறக்குவானை தோட்டப் பகுதிகளிலும் கிராமங்களிலும் வறுமையின் காரணமாகக் கல்வியைத் தொடர முடியாமல் உள்ள பிள்ளைகளுக்கு உதவுவதற்காகத் தமது மாதாந்த சம்பளத்தை அந்தப் பிள்ளைகளின் செலவிற்காக வழங்கப்போவதாக கொடக்கவெல பிரதேச சபையின் உறுப்பினர் ஆர்.அசோக்குமார் தெரிவித்தார்.

கொடக்கவெல பிரதேச சபையின் முதலாவது கூட்டத் தொடர் கடந்த வியாழக்கிழமை சபை தலைவர் பிரியந்த குணதிலக்க பண்டார தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை அறிவித்தார்.

இறக்குவானை டெல்வின் பீ பிரிவு தோட்டத்தில் சுமார் 50 குடும்பங்கள் அதாவது லயத்தில் வாழ்பவர்கள்.

அவர்கள் கொடக்கவெல பிரதேச சபைக்கு வரிப்பணம் செலுத்துகிறார்கள். ஆனால், இங்கு கொடக்கவெல பிரதேச சபையால் குப்பை சேகரிக்க வாகனம் அனுப்புவதில்லை. சபையால் குப்பைகளை சேகரிக்க நடவடிக்கையெடுக்க வேண்டும்.

இறக்குவானை பிரதான வீதியின் அருகில் அனுமதியுடனும் அனுமதியின்றியும் தற்காலிக கடைகளும் நிரந்தரக் கடைகளும் ஆற்றுப்பகுதி யின் ஓரமாக அமைக்கப்பட்டுள்ளன.

நிரந்தரக் கடைக்கு மின்சாரமும் குடி நீரும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இவற்றைத் தேடிப் பார்க்க வேண்டும். சட்டவிரோதமான நிர்மாணங்களைத் தடைவிதிக்க வேண்டும். அல்லது சகலருக்கும் ஒரே முறையில் வியாபாரத்தை மேற்கொள்ள கடைகளை நிர்மாணித்துக்கொள்ள அனுமதி கொடுக்க வேண்டும் .

சிறுவர் பராமரிப்பு நிலையங்க ளில் முன்பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. தோட்ட பகுதிகளில் முறையான முன்பள்ளி இல்லை. எனவே, சப்ரகமுவ மாகாண சபை,கொடக்கவெல பிரதேச சபை அங்கீகாரத்துடன் முன்பள்ளிகள் ஆரம்பிக்க வேண்டும் என்றும் கோரிக்ைக விடுத்த அவர், தமது மாதாந்தச் சம்பளம் 15ஆயிரம் ரூபாயை நான்கு வருடங்களும் ஏழை மாணவர்களின் கல்விக்காக வழங்கப்போவதாகவும் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.