Header Ads



இலங்கையில் பேஸ்புக் பாவிப்பவர்களை, கண்காணிக்க புதிய வழிமுறை

இலங்கையில் பேஸ்புக் பயனாளிகளை கண்காணிப்பதற்கான புதிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இனங்களுக்கிடையிலான பகைமை மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான கருத்துக்கள் உள்ளிட்ட தவறான கருத்துக்களை பேஸ்புக் ஊடாக பரப்புவதை தடை செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கென தானியங்கி புலனாய்வுக் கருவிகள் மற்றும் மனித வளம் என்பன மேம்படுத்தப்படவுள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் நாட்களில் சிங்கள மொழியில் பாண்டித்தியம் கொண்ட பலர் பேஸ்புக் வலைத்தளத்தில் ஊழியர்களாக இணைத்து கொள்ளப்படவுள்ளனர்.

அண்மையில் கண்டியில் நடைபெற்ற இனவன்முறைகள் பேஸ்புக் ஊடாகவே தகவல் பரிமாற்றம் நடைபெற்று பல்வேறு இடங்களுக்கும் பரவியமை காரணமாக இலங்கை அரசாங்கம் சமூக வலைத்தளங்களை தற்காலிகமாக தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.