Header Ads



பாராளுமன்றத்திற்கு செல்லாமல், இருக்கப்போகும் அரசியல்வாதிகள் யார்..?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும் நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் குறிப்பிடத்தக்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதில்லை என தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்கட்சியின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் நாடாளுமன்றத்திற்கு வர மாட்டார் என கூறப்படுகிறது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தாலோ, வெற்றி பெற்றாலோ தமது கட்சிக்கோ தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கோ எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை தொண்டமான் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது.

அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பிரதியமைச்சர் முத்து சிவலிங்கமும் நாளை மறுதினம் நாடாளுமன்றத்தை புறக்கணிக்க உள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எவரும் நாளை மறுதினம் நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்க மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து இதுவரை எந்த முடிவுகளை எடுக்கவில்லை என்பதுடன் இதன் மூலம் மலையக மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை என்பதால்,காங்கிரஸ் இந்த விடயத்தில் போதிய அக்கறை காட்டவில்லை எனவும் பேசப்படுகிறது.

இதனிடையே ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதம் மற்றும் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ள மாட்டார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

Powered by Blogger.