Header Ads



கொழும்பு ஊடகம் வெளியிட்டுள்ள, பரபர தகவல்


கட்சி மறுசீரமைப்பினால் அதிருப்தியடைந்துள்ள ஐக்கியத் தேசியக் கட்சியின் கணிசமான உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு புதிய ஆட்சியொன்றை அமைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் திரைமறைவில் இரகசிய பேச்சுக்களை நடத்தி வருகின்றனர் என்று அறியமுடிவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் சிலருடனும் இது தொடர்பில் பேசப்பட்டு அவர்களையும் அரசின் பங்காளிகளாக இணைத்துக்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சரொருவர் தெரிவித்திருந்தார்.

புதிய ஆட்சியை அமைப்பதற்கு மஹிந்த ராஜபக்ஸ அணியில் இருக்கும் உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவும் பேச்சு நடத்தப்படவுள்ளது.

அவர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெறாத பட்சத்தில் வெளியில் இருந்து ஆதரவை வழங்க முடியும் என்றும் அந்த அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஆட்சி அமையத் தேவையான ஏற்பாடுகள் மற்றும் பிரதமராக யாரை நியமிப்பது என்பன பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளதாக கொழும்பு ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

1 comment:

  1. This is the fate of democracy with politicians who is running behind money and positions.

    Eventually citizens will suffer paying the price from all means.

    ReplyDelete

Powered by Blogger.