Header Ads



நாதியற்று நிற்கும், முஸ்லிம் விவசாயிகள் - திட்டமிட்டு நசுக்கப்படும கொடூரம்...!

-மு.இ.உமர் அலி-

நிந்தவூர் நெற்செய்கைக்கு பெயர்பெற்ற ஒரு புராதான கிராமம். கிட்டத்தட்ட  ஏழாயிரம் ஏக்கர் வயற்காணிகள் இருக்கின்றன.இலங்கையின் மொத்த நெல்லுற்பத்தியில் நிந்தவூரானது கணிசமான மெற்றிக்தொன் நெல்லினை ஒவ்வொரு போகமும் சேர்த்துவருவது எவராலும் மறுக்க முடியாத விடயமுமாகும்.இங்குள்ள வயற்காணிகள் நிந்தவூர் மக்களுக்கு மட்டுமன்றி சாய்ந்த மறுத்துஇகல்முனை மற்றும் காரைதீவு பிரதேசங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமாக இருக்கின்றன.

சேனாநாயக்க சமுத்திரத்தின் இடது கரை வாய்காலில் இருந்து நீர்ப்பாசனம் பெறும் இந்தக்காணிகளில் ஆக இருபது சதவிகிதமான காணிகள் மட்டுமே இம்முறை சிறுபோக நெற்செய்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.மீதி என்பது வீதமான காணிகளும் நெற்செய்கைக்கு மறுக்கப்பட்டுள்ளன.இதற்கான காரணம் என்னவென்று கேட்டால் குளத்தில் உள்ள நீர் போதாது என்று கூறுகின்றார்கள்.

தற்போது குளத்தில் உள்ள நீர்மட்டம் அண்ணளவாக 63 அடிகளாகும் இ2017 ஆம் ஆண்டு இதேபோன்ற நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டபோது 71 அடி நீர் குளத்தில் காணப்பட்டது அவ்வருடம் நாற்பது வீதமான காணிகள் இப்பிரதேசத்தில் விவசாயம் செய்யப்பட்டன.

71 அடி நீர் குளத்தில் இருக்கும்போது நாற்பது வீதமான வயல்கள் செய்கை பண்ணப்பட முடியும் என்றால் 63 அடிகளாக நீர் மட்டமிருக்கும் இம்முறை ஏன் இருபது வீதமாக குறைக்கப்பட்டது?இதன் பின்னணிதான்  என்ன?
வரட்சிஇகுளம் வற்றிவிட்டது மட்டுப்படுத்தப்பட்ட காணிகளில் மட்டுமே விவசாயம் செய்யமுடியும் என்று என்று சட்டம்  போடுகின்ற அதே வேளை  பெரும்பான்மையினர் வாழ்கின்ற பிரதேசத்தில் இருக்கின்ற சகல நெற்காணிகளும் ஒரு ஏக்கர்கூட மிச்சமின்றி நெற்செய்கையில் ஈடுபடுவதற்கு அனுமதியும் நீரும் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதற்கிடையில் கடந்தவாரம் முழுவதும் பெய்த மழை நீரின் உதவியினால் மட்டும் சகல் வயல்காணிகளும்  உழுது விதைக்கப்பட்டு விட்டன. நெற்செய்கையினை பொறுத்தவரை தேவைப்படும் நீரின் மூன்றில் ஒரு பங்கு நீர் விதைப்பிற்கு மட்டும் தேவைப்படும்இமழைநீரின் உதவியினால் மக்கள் விதைப்பு நடவடிக்கைகளை  முடித்து விட்டதனால் குளத்தில் இருந்து வர இருந்த நீர் விதைப்பிற்காக பயன்படுத்தப்படவில்லை.எனவே அவ்வாறு விதைப்பதற்கு வழங்கவிருந்த  நீர் மிச்சமாகி விடுகின்றது.

இவ்வாறுமழைநீர் கிடைத்ததன் காரணமாக குளத்து  நீர்  மிச்சபடுத்தப்பட்டிருக்கும்  இதேவேளை  நீரேந்து பிரதேசங்களில் தொடர்ந்தும் மழைபெய்தும் வருகின்றது.இந்த மழையினால் குளத்து நீர்மட்டம் இன்னுமதிகரிக்க வாய்ப்புண்டு.

இவ்வாறு இரண்டு வழிகளிலும் நீர் சேமிப்பு நடைபெறுகின்றபடியினால் செய்கைபண்ணுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நெற்காணிகளது அளவு அதிகரிக்கப்படாதா என்று விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.?

ஒரே குளத்து நீரினை நம்பி விவசாயம் செய்கின்றவர்களில் ஒருசாரார்க்கு ஒரு நியதியும் மறுசாரார்க்கு  இன்னுமொரு நியதியும் நடைமுறைப்படுத்துவது அரசு விவசாயிகள் என்ற கூட்டத்தாரிற்கிடையே  சமத்துவத்தினை பேணாமல் முஸ்லீம்களுக்கு அநீதியிளைக்கும் வகையில் சமமற்ற முறையில் நெற்ர்காணிகளுக்கான நீர்ப்பாசன பொறிமுறையை இந்த சிறுபோகத்தில் கடைப்பிடித்துவருகின்றமை தெட்டத்தெளிவாக புரிகின்றது.

மக்கள் பிரதிநிதிகளைத் தவிர வேறு எந்த நாதியும் அற்ற நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்த  முஸ்லீம் விவசாயிகள் இவ்விடையத்தில் நாதியற்று அல்லோல கல்லோலப்பட்டு அலைகின்றனர். மக்கள் பிரதிநிதிகள் உட்பட அரச அதிகாரிகள், அரசாங்க அதிபர் ஆகியோருடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள்   இந்த விடயமாக உடனடியாக கரிசனை காட்டுவ்வார்களா?

7 comments:

  1. ஹக்கீம் சேர் மழை வேன்டி தொழ ஏற்பாடு செய்தது உங்களுக்கு தெரியாதா ?

    ReplyDelete
  2. திட்டமிட்ட சதி
    நேற்று வர்த்தகம்
    இன்று விவசாயம்
    நாளை .......

    ReplyDelete
  3. நீர் வரும் வாய்க்கால் வழியில் இருப்பவர்களை விட்டு விட்டு நீரைக்ெகாண்டு செல்லுவது சாத்தியமானதா? எடுத்ததற்கெல்லாம் இனவாதம் பேசாது குளக்கரையிலுள்ளவர்களுக்கு மட்டும் நீர் வழங்குவது நியாயம் இல்லை என்று பேசலாமே.

    ReplyDelete
  4. துறைசார் வல்லுநர்கள் அதாவது விசாயம் மற்றும் நீர்ப்பாசணம் தொடர்பான அறிவூள்ளவர்கள் மாத்திரம் விளக்கம் எழுதினால் நன்று

    ReplyDelete

  5. POOR TAMIL MUSLIM FARMERS....

    ReplyDelete
  6. நீங்கள் உண்மையாளராக அதாவது அல்லாஹவை மட்டுமே நன்புவராக இருந்தால் அவனிடம் அழுது கேளுங்கள் நிச்சயமாக அல்லாஹஅருள்புரிவானாக

    ReplyDelete
  7. இப் பிரச்னையை யாரும் பாராளுமன்றத்தில் கதைக்க வில்லையே

    ReplyDelete

Powered by Blogger.