Header Ads



"பிரதமருக்கு விசுவாசமில்லை என வாக்களித்த அமைச்சர்கள், அமைச்சரவையில் வீற்றிருப்பது நெறிமுறையல்ல"

-JM.HAFEEZ-

பிரதமருக்கு விசுவாசமில்லை என்று வாக்களித்த அமைச்சர்கள் அதே பிரதமரின் அமைச்சரவையில் வீற்றிருப்பது சரியான அரசியல் நெறிமுறையாகாது. அவர்களாகவே நீங்கிக்கொள்வதுதான் கனவான் அரசியலில் பாராளுமன்ற மரபாகும் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். (9.4.2018)

கண்டி நகராதிபதியாக மீண்டும் தெரிவான கேசர சேனாநாயக்காவின் பதவியேற்பு வைபவத்திலே (9.4.2108) கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-

பிரதமருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு ஆதரவளித்த ஸ்ரீ.ல.சு.க. யைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர்கள் தொடர்ந்தும் அமைச்சர் பதவியில் வீற்றிருப்பது  நேர்மையதன ஒரு நெறிமுறை அல்ல.  அரசில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருப்பதாயின் அமைச்சரவைக்கு விசுவாகம் கொண்டவராக இருத்தல் வேண்டும். அதற்கு எதிராக இருக்க முடியாது. 

நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர்கள் தற்போது செய்ய வேண்டியது தமது பதவிகளை இராஜிநாமாச் செய்து கொள்வதே பாராளு மன்ற சம்பிரதாயப்படி கனவான் அரசியலாகும்.

இம்மாதம் முடிவடைய முன் ஐ.தே.க.ன் புனரமைப்பு பணிகள் பூரணப்படுத்தப்படும். இளைஞர்களுக்கு கட்சியினுள் பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படும். நாட்டு மக்கள் வெளிப்படையாக உணரக் கூடிய மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்படும்.  இன்னும் 25 வருடங்களுக்கு மேல் கண்டி மாநகர சபையை ஐ.தே.க. யே ஆட்சி செய்யும் என்றார்.

கண்டி மாநகர சபையின் பிரதி மேயர் இலாஹி ஆப்தீனும் தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார். இவ்வைபவத்திற்கு மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்காவும் சமூகமளித்திருந்தார். 




No comments

Powered by Blogger.