Header Ads



''குழந்தைகளைக் காப்பாற்றிய, மருத்துவர் கபில்கான் குற்றமற்றவர்" - உயர்நீதிமன்றம் தீர்ப்பு


உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் இறந்தன. அப்போது, பணியில் இருந்த டாக்டர் கஃபீல்கான் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வரவழைத்து சில குழந்தைகளை காப்பாற்றினார். ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு சொந்த பணத்தையே கஃபீல்கான் கொடுத்தார். இக்கட்டான சூழலில் முடிந்த வரை மருத்துவ சேவையாற்றிய அவரை யோகி ஆதித்யநாத் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. கடந்த 7 மாத காலமாக அவர் சிறையில் இருந்து வருகிறார். ஜாமீனுக்கு விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை. 

தொடர்ந்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு விண்ணப்பித்தார். ஏப்ரல் 25- ந் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பு மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த  நீதிபதி. ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கும் கஃபீல்கானுக்கும் எந்த வர்த்தகத் தொடர்பும் இல்லை. குழந்தைகள் இறப்புக்கு கஃபீல்கான்தான் காரணம் என்பதற்கும் தகுந்த ஆதாரங்கள் இல்லை. மருத்துவ பணியில் அலட்சியமாக நடந்து கொள்ளவில்லை. இதற்கு முன், எந்த குற்றச்சாட்டுகளும் கூட அவர் மீது இல்லாத நிலையில் சாட்சிகளை மிரட்டக் கூடும் என்பதையும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை' என்று உத்தரவிட்டு   கஃபீல்கானுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உறுதி செய்தார். 

சிறையில் இருந்த கஃபீல்கான், ''உத்தரபிரதேச அரசின் தோல்விக்கு தன்னை பலிகடா ஆக்குவதாகவும் தன் குடும்பத்தினரின் உயிருக்கு உத்திரவாதம் இலலை '' என்று ஒரு கடிதம் எழுதியிருந்தார் . டெல்லியில் கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த கஃபீல்கானின் மனைவி, அந்த கடிதத்தை செய்தியாளர்களுக்கு விநியோகம் செய்தார். செய்தியாளர் சந்திப்பின் போது,  சிறையில் கஃபீல்கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கூட மறுக்கப்படுவதாக அவரின் மனைவி குற்றம்சாட்டினார். இதையடுத்து,  கோரக்பூர் சிறை நிர்வாகம் அவருக்கு மருத்துவ சிகிச்சை பெற அனுமதியளித்தது. 

4 comments:

  1. காபிர்களும் சுயநலவாதிகளும் என்ன சூழ்ச்சித் திட்டம் போட்டாலும் நீதிக்கும் நியாயத்துக்கும் பின்னால் அல்லாஹ்வின் உதவியும் கருணையும் இருக்கின்றது என்பதற்கு டாக்டா் கபீல்கான் சிறந்த உதாரணம். யாஅல்லாஹ. கபீல்கான் போன்று காபிர்களின் பிடியில் சிக்கித் தவிர்க்கும் அப்பாவிகள் உலகெங்கும் இ்ருக்கின்றார்கள். அவர்களை விடுவித்து சத்தியத்துக்கு பலத்தையும் அசத்தியத்துக்கு அழிவையும கேவலத்தையும் வழங்குவாயாக.

    ReplyDelete
  2. நல்லது செஞ்ஞது முஸ்லிமாச்சே அவன் நல்லது செஞ்ஞாலும் தீயதுதான் இந்தக் காவிகளுக்கு

    ReplyDelete

Powered by Blogger.