Header Ads



"முஸ்லிம் அரச ஊழியர்களின் மானம், காற்றில் பறக்கிறது"

முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளா் எம்.. ஆர். எம் மலிக் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஆற்றிய உரை

எமது திணைக்களத்தில் 2700 பள்ளிவாசல்கள் பதியப்பட்டுள்ளன. அதில் 2000 பள்ளிவாசல்கள் பிரச்சினைகள் உள்ளன. நாளாந்தம்  அலுவலகத்திற்கு வரும் பள்ளிவாசல் பரிபாலனை சபைகளது உறுப்பிணா்களோடு பிரச்சினைகளையே பேசிப் பேசி வருகின்றோம். பள்ளிவாசல்களில் சிறிய சிறிய பிரச்சினைகளை தாமே தீா்த்துக் கொள்ளாமல் வக்பு சபைக்கு கொண்டு வந்திடுவாா்கள் . பள்ளிவாசல்கள் பரிபாலளை சபைக்குள் உட்புகுந்து அடுத்த குறிக்கோள் அரசியலில் புகுந்து மந்திரியாக வருவதாக்கே செயற்படுகின்றாா்கள். பள்ளிவாசல்களை முஹம்மத் நபி  (ஸல்) அவா்கள் எவ்வாறு பரிபாலிப்பது என்று எமக்கு  அழகாக காட்டித் தந்துள்ளாா்கள் அதனை யாரும் பின்பற்றுவது இல்லை.  

எமது திணைக்களத்திற்கு வந்து பள்ளிவாசல் பரிபாலனை  சபையினா் சண்டை பிடிப்பாா்கள்  ஒழுக்கம் எவ்வாறு அரச அலுவலகத்தில் நடந்து கொள்வது என்று கூட தெரியாது ? இவ்வாறானவா்கள் எவ்வாறு தமது பள்ளிவாசல் ஊாா் கட்டுபாட்டினை கொண்டு வழிகாட்டுவது ?  இவ்வாறுதான் எமது சமுகத்தின் நிர்வாகம் ஓழக்கம் இருந்து வருகின்றது. 

ஹற்றனில் ஒரு ஜம்ஆப்  பள்ளிவாசல் உள்ளது. அப் பள்ளிவாசலில் பரிபாலன சபைத் தலைவராக ஒருவா்  30 வருடம் தலைவராக பதவிவகித்துள்ளாா். அவா் அண்மையில் தான் பதவி வகித்த காலம் போதுமானது வேறு ஒரு சபையை நியமியுங்கள் என அறிவித்திருந்தாா். ஆனால் அந்த  ஊாா் மக்கள் மீண்டும அவரையே தலைவராக நியமியுங்கள் எங்கள் ஊரில் அவரைப் போல ஒரு  தலைவர் இல்லை எனக் கேட்டுள்ளாா். இப் பள்ளிவாசல் பரிபாலிப்பு நபி முஹம்மத் (ஸல்) அவா்களின் வழிகாட்டலில் அவா் நிர்வகித்து வருவதையே இங்கு காணமுடிகின்றது. 

எமது திணைக்ளத்தில் 80 வீதம்  முஸ்லீம்  ஊழியா்கள் கடமையாற்றுகின்றனா் காலை 8.15 அலுவலகம் வந்து 04.15 வரை காலத்தினை கடத்துவாா்கள்.  ஒரு திட்டம் இல்லை. நாம் செய்யும் தொழிலுக்குரிய கடமையை சரவரச் செய்வதில்லை. நான் பல அரச திணைக்களத்தில் சிங்கள ஊழியா்கள் மத்தியில் கடமைபுரிந்துள்ளேன். அவா்கள் மேலதிக நேரம் கொடுப்பணவை எதிா்ப்பாப்பதில்லை தனக்கு தரப்பட்ட கடமையை பி.ப 6 மணியளவேனும் அலுவலகத்தில் இருந்து முடித்து விட்டுத்தான வீடு போவாா்கள்.  ஆனால் எமது முஸ்லீம் ஊழியா்கள் கடமையில் கண்னியம் கட்டுப்பாடு இல்லை. எனவும் பணிப்பாளா் மலிக் அங்கு உரையாற்றினாா்.

(அஷ்ரப் ஏ சமத்)

8 comments:

  1. Try to do the best . Sir you have to start from the department. But it is not easy.

    ReplyDelete
  2. பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கான கட்டாய தலைமைத்துவ பயிட்சி நெறி ஒன்றை அறிமுகம் செய்யப்பட வேண்டும் .இதில் கலந்து கொள்பவர்களுக்குத்தான் அங்கத்துவ சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் .

    ReplyDelete
  3. நமது சகோதரர்கள் எப்போதும் பண ஆசை மட்டும் பிடித்து அலைகிறார்கள் நமக்கன்று ஒரு கடமை உண்டு என்ற உணர்வு கிடையாது.அடுத்து பள்ளி வாசல் நிருவாகம் தெரிவது ஊர் மக்கள்தான் ஆனால் தெரிவு செய்யப்படும் நிருவாகியின் நடை முறையை கல்வித்தகைமையை குணாதிசயங்களை பார்ப்பதில்லை அவன் கஞ்சா விற்றாலும் கசிப்பு விற்றாலும் பணம் உள்ளவன் என்றால் அவர் தலைவர்தான் முன் சப்பில் நின்று தொழ வேட்கப்படுபவான் இமாம் வராத நேரம் ஒரு நேர தொழுகையை தொவிக்க தெரியாதவண் எல்லாம் பள்ளி நிருவாகம் ஆனால் எவ்வாறு ஒழுக்கம் மரியாதை வரும்.ஊரில் யாரு கேடு கேட்டவன் இருந்தாலும் பணம் இருந்தால் அவனை தைவராக ஆக்கி அழகு பார்க்கும் சில படித்தவர்களும் இருக்கிறார்கள்.இப்படிப்பட்டவனின் சட்டத்தையும் கதைகளையும் ஊர் மக்கள் கேட்க மாட்டார்கள்.விபச்சார குற்றத்தில் ஒருவனை விசாரிக்கும்போது தலைவன் அதே குற்றத்தை கடந்த காலத்தில் செய்தவனாக இருந்தால் அவனிடம் குற்றவாளி மாறி கேட்கிறான் முதலில் உனக்கு அடிக்க வேண்டும் அதன் பின் என்னை நீ விசாரணை செய் என்று சொல்லும் காலமாக இருக்கிறது.எப்படியானவர்களை நிருவாகியாக்கினால் எவ்வாறு ஊரும் சமுதாயமும் உருப்படும்

    ReplyDelete
  4. This is universal problem..
    When it comes Islam and Muslim affairs we have this mentality...
    To do all from backdoors ..
    Not honest.
    No sincerity.
    No hard working ethics
    No politeness .
    No humanism
    Rude ..
    These are now Muslim qualities

    ReplyDelete
  5. This is universal problem..
    When it comes Islam and Muslim affairs we have this mentality...
    To do all from backdoors ..
    Not honest.
    No sincerity.
    No hard working ethics
    No politeness .
    No humanism
    Rude ..
    These are now Muslim qualities

    ReplyDelete
  6. யதார்த்தமான விடயம் பேசப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் மிகவும் தீவிரமாக சிந்திக்க வேண்டிய விடயம் தங்களது வருமானம், சம்பளம் கலால் தானா என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டும். பள்ளிவாசல் பரிபாலனை சபைக்குள் உட்புகுந்து அரசியல் செய்வதையே குறையாக சிந்தித்தால்.... சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவரும் அதன் உறுப்பினர்களும் அரசியலும் செய்து, பிரதேசவாதத்தையுமல்லவா செய்கிறார்கள். இப்படியானவர்களுக்கு எதிராக வக்பு சபை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  7. தகுதிஎற்றவனை தெரிவு செய்து விட்டு தலைமை துவா பயிற்ச்சி கொடுப்பதை விட தலைமைத்துவத்துக்கு தகுதியானவனை ஆரம்பத்தில் தெரிவு செய்வதுதான் சிறந்த முறை.எருமை மாட்டை மெடிகல் காலேஜிக்கு தேர்ந்து எடுத்து பயிற்ச்சி கொடுப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது.தகுதியானவனை கண்டு பிடித்து தேடி வைக்க வேண்டும்.அதுதான் செரியான வழிமுறை.அரசியல் மாறும்போது வெற்றியடைந்த கட்சிக்காரன் எந்த எருமை மாடாக இருந்தாலும் பள்ளிக்கு தூக்கி வைத்தால் ஊரும் சமுதாயமும் நாசமாப்போகும்.

    ReplyDelete
  8. அலுவலக கடமைகளின் நிமித்தம் தூரப்பிரதேசங்களுக்கு இரவு இரண்டு மணிக்கு பிரயாணத்தை ஆரம்பிப்பவர்களும் ஹஜ் காலங்களில் இராப்பகலாக வேலை செய்பவர்களும் ஈச்சம் பழம் அஹதிய்யா நூல்விநியோக வேலைகளின் போது நேரகாலம் பாராது அர்ப்பணிப்போடு பணியாற்றும் உத்தியோகத்தர்களும் 5 மணி தாண்டியும் பணியாற்றும் அதிக உத்தியோகத்தர்களும் அங்கு இருக்கிறார்கள்.இந்த சமூகம் பிரச்சினைகளை அதிகம் கொண்டுசெல்கின்ற இடமாக இருப்பதாலும் வேகமாக நிறுவனத்தை முன்னேற்றுவதில் சவால்கள் காணப்படுகின்றன.

    ReplyDelete

Powered by Blogger.