Header Ads



நவீனுக்கு செயலாளரா..? தவிசாளரா..??


அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை பொறுப்பேற்குமாறு தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த வேண்டுகோள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அலரிமாளிகையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புக் கூட்டத்தின் போது அரசியல் சபை நியமிப்பதற்கான வாக்கெடுப்பில் நவீன் திஸாநாயக்கவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கப் பெற்ற போது விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை வகிப்பவர் அமைச்சுப் பதவிகளை வகிக்க கூடாது என கொள்கை ரீதியிலான தீர்மானமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம் வினவியபோது,

முழுமையான அதிகாரம் கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை வழங்குவதாயின் அது தொடர்பில் தான் கருத்தில் கொள்வதாகவும் கூறியுள்ளார். 

2

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்படலாம் என உள்வீட்டுத் தகவல் தெரிவித்தது. 

அப்பதவியை வகித்த, அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, அறிவித்திருந்தார். 

இந்நிலையிலேயே அந்த வெற்றிடத்துக்கு, நவீன் திஸாநாயக்க நியமிக்கப்படலாம் எனத் தகவல் கசிந்துள்ளது. இ​தேவேளை, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு, தவிசாளர் பதவியை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு, ஐ.தே.கவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்றும் அந்தத் தகவல் மேலும் தெரிவித்தது. 

இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் நவீன் திஸாநாயக்க, “கட்சியின் தவிசாளர் பதவியை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு, உத்தியோகபூர்வமான அழைப்புகள் எவையும் எனக்கு கிடைக்கவில்லை. என்றாலும் கட்சியின் மேம்பாட்டுக்காகவும், வளர்ச்சிக்காகவும், முழுமையான அதிகாரங்களுடன் அப்பதவி வழங்கப்படுமாயின் அதனைப் பொறுப்பேற்பதற்கு நான் தயார்” என்றார்.  

அவர் மேலும் தெரிவித்தார்.  

கட்சியை மறுசீரமைப்பதற்கான யோசனைகளை பெற்றுக்கொள்ளவதற்காக, நியமிக்கப்பட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தலைமையிலான குழு, கட்சியில் சகல பதவி நிலைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டுமென, பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

இதேவேளை, கட்சியின் சகல பதவிகளிலும் எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதிக்கு முன்னர் மாற்றம் செய்யப்படுமென, கட்சி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. மக்களும் நாடும் குப்பையில்,பதவியும் பட்டமும் கட்சியும் பந்தியில் இருக்கும் ஒரு ஜோக்கர் நாடாக இலங்கை மாறிவருகிறது. எமது இளஞ்சந்ததியினரின் எதிர்காலம் அல்லாஹ்விடமே ஒப்படைக்கின்றோம். இவருக்கு இன்னும் எந்தவித உத்தியோகபூர்வமான பட்டமோ பதவியோ வழங்கப்படாத நிலையில் அவருக்கு முழுஅதிகாரத்துடனான பதவி தேவையாம்.

    ReplyDelete

Powered by Blogger.