Header Ads



சிரியாவில் தாக்குதலை, ஆரம்பித்தது அமெரிக்கா


அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் சிரியா அரசு ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் என்று சந்தேகிக்கப்படும் இடங்கள் மீது, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை முதல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றன.

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து சிரியா மீது தாக்குதல் நடத்த தாம் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹோம்ஸ் மாகாணத்தில் ஒரு ராணுவ தளத்தை இலக்கு வைத்து அமெரிக்க கூட்டணிப் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், அவை தங்கள் பாதையில் இருந்து திருப்பப்பட்டுள்ளதாகவும், அதில் மூன்று குடிமக்கள் காயமடைந்துள்ளதாகவும் சிரியாவின் அரசு செய்தி முகமையான சனா தெரிவித்துள்ளது.

சிரியாவின் ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் மீது தற்போது கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

"ரசாயன ஆயுதங்களை தயாரிப்பது, பரப்புவது மற்றும் பயன்படுத்துவதை வன்மையாகத் தடுக்கும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் தொடங்கியுள்ளது" என்று டிரம்ப் கூறியுள்ளார்.

4 comments:

  1. ஒட்டு மொத்தமாக அழிக்கப்படுவது எவ்வகையிலும் முஸ்லிம்கள்தான் என்பது உண்மை.

    ReplyDelete
  2. சிரியாவில் எஞ்சியிருக்கும் குறிப்பிட்ட வளங்களை அழித்து நாட்டை ஈராக்கின் நிலைக்குக் கொண்டுவரும் அமெரிக்க கூட்டுப்படைகளின் வெற்றியின் ஆரம்பம். முஸ்லிம் உலகத்தலைமைத்துவம் என மார்தட்டிப் பேசும் பொம்மைகள் எங்கே!

    ReplyDelete
  3. America will never fight with Korea never fight with Russia neve ever go with any country othet than Muslims. both these supet powers want to keep israel safe. and distroy syria now. world Muslims must draw a plans to separate makkah and madina from this puppet regim.

    ReplyDelete
  4. அகண்ட இஸ்ரேலுக்கான நிலப்பகுதி தயார் செய்யப்படுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.