Header Ads



பரபரப்பான நிலையில் நாளை, நடைபெறவுள்ள முக்கிய கூட்டங்கள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்னும் இரண்டு தினங்களில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள நிலையில், இன்று பல்வேறு சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

தற்போது ஜனாதிபதிக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

இந்த சந்திப்பின் பின்னர், ஜனாதிபதிக்கும், கூட்டு அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் சிறிலிங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றும் நடைபெறவுள்ளது.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியாக இருந்து, கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதில்லை என்று அறிவித்து விலகிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் இன்று பிரதமர் ரணில்விக்ரமசிங்கவை சந்தித்தனர்.

அலரிமாளிகையில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஈபிஆஎல்எஃபின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் அந்த கட்சியின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதற்கிடையில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நாளையதினம் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்திப்பை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து அவர்களுக்கு இடையிலான கலந்துரையாடப்படும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாளையதினம் நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதியில் ஒன்று கூடவிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் இன்றையதினம் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று பிரதமர் தலைமையில் நடைபெற்றிருந்தது.

எனினும் இந்த கூட்டத்தில் அமைச்சர்களான மனோகணேசன், பாட்டளி சம்பிக்க ரணவக்க மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோர் தமது கட்சிகள் சார்பில் நேரடியாக கலந்து கொள்ளாமல்,தங்களது பிரதிநிதிகளையே அனுப்பி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தீர்மானிப்பதற்காக, நாளையதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடவுள்ளனர்.

நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

3 comments:

  1. Choose the lesser evil.
    You do not need to Have a big head for this

    ReplyDelete
  2. Too many parties, politicians without any vision for the people and country, etc. have become a curse. When will this end.

    ReplyDelete
  3. IF Srilanka is following Democracy... ASK the people in this regard.

    If Politicians are to vote .. They will vote for benefit of their pockets. Each one seeing who will give more to their pocket... to vote.

    So Politician Vote is not for the sake of country.. BUT for the sake of their pockets.

    So Ask public opinion...if you say SLK is democratic.

    NOTE: Also what will be the alternative to RANIL... Will the new one be Lesser Evil or More Devil ...

    Otherwise again after some years there will another similar situation will start. This will destabilize this country from all the direction.

    SOME how MARA brothers... seems to escape all the cases from courts, by working hard coming to power.

    RANIL made his fate... BY not acting against to Political and Racial CRIMINALS of the past and PRESENT. Now he is tasting it.

    ReplyDelete

Powered by Blogger.