Header Ads



கம்பஹா மாவட்டத்திலிருந்து, முதலாவது முஸ்லிம்

மல்வானை உளஹிட்டிவலையை சேர்ந்த பாதில் பாருக் (நளீமி) அவர்கள் இலங்கை அரச சேவையின் மிக முக்கிய போட்டிப் பரீட்சையான இலங்கை வெளிநாட்டு சேவைகள் திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார்.

இம்முறை இப்பதவிக்கு மொத்தம் 23 பேர் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதில் 02 முஸ்லிம்கள் சித்தியடைந்துள்ளனர். மல்வானையில் இருந்து இந்த சேவைக்கு தெரிவாகியுள்ள முதல் நபர் இவர் என்பதும், கம்பஹா மாவட்டத்திலிருந்து தெரிவாகியுள்ள முதல் முஸ்லிம் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாதில் (நளீமி) அவர்கள் ஆரம்பப் படிப்பை மல்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலையில் கற்றதோடு, உயர்தரத்தை பேருவளை நளீமியா கலாசாலையில் பயின்றார். நளீமியாவில் பட்டம் பெற்றபின்னர் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் B.A பட்டம் பெற்றார். இவர் உளஹிட்டிவலை மொஹமட் பாருக், சித்தி மதீனா தம்பதிகளின் புதல்வராவார்.


4 comments:

  1. சகோ.பாதில் அவர்களுக்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  2. Great Achievement, congratulation.

    and wish you a all the best

    ReplyDelete

Powered by Blogger.