Header Ads



மீண்டும் போர்க் கொடியை தூக்கியுள்ள, வசந்த சேனநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சிக்கான யாப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் வசந்த சேனநாயக்க போர்க்கொடி தூக்கியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று -26- கட்சியின் தலைமையகமான ஶ்ரீகொத்தாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர், ஐ.தே.க.வில் நாங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. நாங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் எத்தகையது என்பதை நான் 30ம் திகதிக்குப் பின்னர் முழு விபரத்துடன் தெரிவிப்பேன்.

கட்சியின் தீர்மானமொன்று தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதாயின் செயற்குழுவில் மூன்றில் ஒரு பங்கினர் குறித்த தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று யாப்பில் கூறப்பட்டுள்ளது. அதன் காரணமாக இன்றைய செயற்குழு தீர்மானங்களுக்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவோ அது தொடர்பாக வாக்கெடுப்பைக் கோரவோ இல்லை.

எனினும் கட்சியின் யாப்பில் இவ்வாறான விதிகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் . கட்சியின் யாப்பு ஜனநாயக ரீதியில் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறாக நாங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் தொடர்பாக 30ம் திகதிக்கு பின்னர் முழுமையான விபரங்களுடன் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுவேன் என்றும் அமைச்சர் வசந்த சேனநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.