Header Ads



பாடசாலையிலும், அரச நிறுவனங்கள் அபாயாவை தடை செய்ய வேண்டும் - ஞானசாரா

நாட்டு மக்கள்  அனைவருக்கும் பொதுவானதாகவே தேசிய சட்டங்கள் காணப்பட வேண்டும். பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடைகளில் வேறுபாடுகள் மிதமிஞ்சியதாக காணப்படுகின்றது.  முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாகக் கூறி நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் என தெரிவித்த பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசாரதேரர் , அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் முழுமையாக முகத்தினை மூடும் அபாயாக்கள் அணிவதை முற்றாக தடை செய்வதற்கான  சட்டத்தினை கொண்டுவர வேண்டும் .

அவ்வாறு இல்லாவிடின்  நாட்டு மக்கள் இதற்கு எதிராக ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மாணவ , மாணவிகளுக்கு  முஸ்லிம் முறைப்படி சீருடைகளை அணிய வேண்டும் என்று சில பாடசாலைகள் வலியுறுத்தி வருகின்றனர். இவைகள் ஒரு இனத்தின் தேசிய கலாச்சாரத்திற்கு புறம்பானதாகவே காணப்படுகின்றது.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் சம்பவங்கள் வேதனையளிக்க கூடியதாகவே காணப்படுகின்றது. பாடசாலையில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்கள் முழுமையாக உடம்பினை மறைக்கும் அபாயா ஆடையினை அணிந்து வருவதற்கு பாடசாலை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து  அப்பிரதேசத்தில் இரண்டு சமூக மக்கள் மத்தியிலும் விரோதங்கள் ஏற்பட்டுள்ளன.

 பாடசாலை நிர்வாகத்திற்கு எதிராக முஸ்லிம் ஆசிரியர்களின் கணவன்மார் கல்வி அதிகாரிகளிடம் முறைப்பாட்டினை செய்திருக்க வேண்டும். பாடசாலைக்குள் அத்துமீறிய நிலையில் பாடசாலை அதிபரை அச்சுறுத்தியமையானது கண்டிக்கத்தக்கது. நாட்டில் உள்ள தேசிய பொது சட்டங்களுக்கு முரணாகவே முஸ்லிம் மக்கள் செயற்பட்டு வருகின்றனர்.

அதாவது நீதிமன்றங்களில் தொப்பி, மற்றும் முகத்தினை மூடும் ஆடைகளை அணியக் கூடாது என்ற பொதுவான  சட்டம் தேசிய பொது பாதுகாப்பு நலன் கருதி காணப்படுகின்றது . ஆனால் இவர்கள்  அதனை பின்பற்றுவது கிடையாது. தமது சமய கோட்பாடுகளை மதிப்பதாக கூறி தேசிய சட்டங்களை அவமதிக்கின்றனர். இதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

இந்த நிகழ்வின் பின்னர் சமூக வலைத்தளங்களில் இலங்கையின்  தேசிய ஆடையான  சேலையினை அவமதிக்கும் பதிவுகள் இடம் பெற்றதுடன் சிங்கள மாணவர்களின் பாடசாலை சீருடைகளை குறிப்பாக பெண் பிள்ளைகளின்  சீருடைகள் தொடர்பில் மிகு அருவருக்கத்தக்க பதிவுகள் இடம்பெற்று வருகின்றது . தேசிய உடையினை பற்றி அவமதிக்கும் பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வட கிழக்கு பாடசாலைகளில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மாணவர்கள் முஸ்லிம் மாணவர்களை போன்று ஆடை அணிய வேண்டும் என்ற முறைமை காணப்படுகின்றது. இதற்கு எதிராக தமிழ் மக்கள் இதுவரை காலமும் எவ்வித பிரச்சினைகளையும் தோற்றுவிக்கவில்லை. மனித வாழ்க்கையில் ஆடைகள்  என்பது ஒரு அங்கமாகவே காணப்படுகின்றது. ஒருவரை தவறான முறையில் நோக்கமிட ஆடைகள் காரணமாக அமையாது பார்ப்பவரின் எண்ணங்களும், பார்வையும் தவறாக காணப்படும் போது நிகழ்வுகளும் தவறானதாகவே காணப்படும்.

தேசிய அரசாங்கம் இந்த சமூக பிரச்சினைக்கு விரையில் சிறந்த தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும். இனங்களுக்கிடையில்  நல்லிணக்கம் என்பது பெயரளவிலே காணப்படுகின்றது. ஆனால் அமைச்சுக்களின் மத்தியில் நல்லிணக்கம்  சிறந்த முறையில் காணப்படுகின்றது என தெரிவித்தார்.

18 comments:

  1. WE SAW THE TIP OF THE ICEBERG IN TRINCO, THE REAL ICE MOUNTAIN IS UNDER THE SEA NOW SLOWLY EMERGING.....!

    ReplyDelete
  2. Swaami.... Oya kohode innawa thaama elieda ? ethulata yanna neththam , eliye inda berinum Angoda hospital pathe yanda puluwan.

    ReplyDelete
  3. Apply this emotional illiterate LAW then to all the places and all cultural dresses, regardless of Men, Women, Monk, Nurse, Police, and so on.

    Those who do not respect cultural diversity.. will end up with foolish and racist emotional statements only.

    Those Monks, Nuns going to school also then should change their dress inside the school as per the principals choice.. what a foolishness statements.

    ONLY think this country is to band not the Cultural Dresses.. BUT THE RACIST people living inside this land.

    ReplyDelete
  4. Ok Ghanasara, We will remove the ABAYA but your people have to remove the SIHURA. OK.

    ReplyDelete
  5. Okay we will ban Habaya, then you also should abolish wearing your saffron sari and white sari can you do it asshole?

    ReplyDelete
  6. நாங்கள் பார்த்து கொள்ளுகின்றோம் இது அன்னான் தம்பி பிரச்சினை. காலகாலமாக அப்பாவி முஸ்லிம்களை வைத்து சிங்களவர்களுக்கு ஆதரவாகவே செயல்படும் செயல்பட்டு கொண்டு இருக்கும் முஸ்லீம் தலைவர்கள் போல எங்களால் நடக்கமுடியாது. நாங்கள் மனிதர்களை மனிதர்களாக பார்ப்பவர்கள் முஸ்லிம்கள் போல மத சாயம் போடு மனிதர்களை பார்ப்பவர்கள் அல்ல. தமிழர்களை கிழக்கில் அழித்து கருவறுக்க கிழக்கில் அணைத்து முஸ்லிம்களும் சிங்களவர்களுடன் கை கோர்த்தது வரலாறு. ஆனால் இதையே நாங்கள் செய்தால் மனிதத்திட்கும் மதவெறி பிடித்த மிருகங்களுக்கும் வித்தியாசம் இல்லை. நாங்கள் நாகரீகமான சமூகம் இதை கையாள எங்களுக்கு தெரியும். தேவை இல்லாமல் முக்குடை படாமல் போனால் நல்லது.

    ReplyDelete
  7. இந்த முஸ்லிம் விரோச சக்தியான சைத்தானையும் அவ னை ப் போன்ற சைத்தான்கள் அனைத்தையம் கேவலப்படுத்தி அவமானப்படுத்தி அழிந்து ஒழிய வேண்டும் என இந்த ரமழானில் எல்லா முஸ்லிம்களும் அல்லாஹ்விடம் பிராத்திக்குமாறு அனைத்து முஸ்லிம்களையும் பணிவாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  8. Hey Gnanasara come to the ground now.

    Call your Ampantiya Thera also.

    He is notorious for obscene language.

    ReplyDelete
  9. யாழ் பல்கலைக்கலகத்தில் புத்தர் சிலை வைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதைபற்றி வாய் திறக்கவே இல்லையே ஏன்டா ராசா.

    ReplyDelete
  10. Anusath இதைவிட பெரிய ஒரு பகடியை காணவே முடியாது. என்னது நீங்கள் நாகரிகமானவர்களா? மனிதாபிமானவர்களா? காத்தான்குடி பள்ளியில் நடந்தது நாகரிகமா? அல்லது யாழ்பாணத்தில் இருந்து முஸ்லிம்களை விரட்டி அடித்தது நாகரிகமா?

    ReplyDelete
  11. ஞானசார மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்யும் வாய்ப்பு ! எந்தவித ஆதாரமும் இல்லாமல் முஸ்லிம் பாடசாலைகளில் மாற்று மத மாணவ மாணவிகள் இஸ்லாமிய ஆடை அணிய வேண்டுமென சில பாடசாலைகளில் கூறுவதாக இவர் கூறியுள்ளார்.இதட்கு என்ன ஆதாரம் இருக்கிறது ? இருந்தால் அதை காட்டவும். இல்லையேல் இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் இவர்மீது அந்தந்த மாவட்டத்திலேயே வழக்கு பதிவு செய்யுங்கள்.இவர் வழக்கு விசாரணைக்காக மாவட்டம் மாவட்டமாக அலைய வேண்டும்.

    ReplyDelete
  12. ஞானசார மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்யும் வாய்ப்பு ! எந்தவித ஆதாரமும் இல்லாமல் முஸ்லிம் பாடசாலைகளில் மாற்று மத மாணவ மாணவிகள் இஸ்லாமிய ஆடை அணிய வேண்டுமென சில பாடசாலைகளில் கூறுவதாக இவர் கூறியுள்ளார்.இதட்கு என்ன ஆதாரம் இருக்கிறது ? இருந்தால் அதை காட்டவும். இல்லையேல் இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் இவர்மீது அந்தந்த மாவட்டத்திலேயே வழக்கு பதிவு செய்யுங்கள்.இவர் வழக்கு விசாரணைக்காக மாவட்டம் மாவட்டமாக அலைய வேண்டும்.

    ReplyDelete
  13. முதலில் உன்னைத் தடை பண்ணவேண்டும்.

    ReplyDelete
  14. You are not respected by your own people. You have a luxurious life so enjoy it until you perish. People have realised that you are a good for nothing fellow.

    ReplyDelete
  15. இவன் சந்தர்ப்பம் காத்துக்கொண்டிருக்கும் தருனம் இது தமிழ் முஸ்லிம் பிரச்சினைகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் இதயமே இல்லாத நீ இதைப்பற்றி பேச தகுதி இல்லை

    ReplyDelete
  16. திகன கண்டி இல் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அழிவிற்கு பின்னணியாக செயற்பட்ட இந்த சாதுவை நல்லாட்சி அரசு இன்னமும் கைது செய்யாமல் ஏன் பின் வாங்குகின்றார்கள் என்பதைப்பற்றி யாரும் கேள்வி கேட்க மாட்டார்களா??

    ReplyDelete
  17. ayyyyyyooooo tungee kondeerndavany aluppevettanol

    ReplyDelete

Powered by Blogger.