Header Ads



சிரியாவின் நச்சு தாக்குதல், அமெரிக்கா - ரஷ்யா போர் வெடிக்குமா..?

சிரியாவில் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் இரசாயன தாக்குதல் தொடர்பில் ஐ.நா பாதுகாப்பு சபை சந்திப்பில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா பரஸ்பரம் வார்த்தை போரில் ஈடுபட்டன.

தூமா நகரில் இடம்பெற்ற குறித்த சம்பவம் அரங்கேற்றப்பட்டது என்றும் இதற்கு அமெரிக்கா இராணுவத்தைக் கொண்டு பதில் நடவடிக்கை எடுத்தால் ‘கடுமையான விளைவை’ சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் ஐ.நாவுக்கான ரஷ்ய தூதுவர் வசிலி பென்சியா எச்சரித்தார்.

மறுபுறம் சிரிய இராணுவத்திற்கு உதவும் ரஷ்யாவின் கைகளில் ‘சிரிய சிறுவர்களின் இரத்தம்’ இருப்பதாக ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே சாடினார்.

முன்னதாக உரையாற்றிய ஐ.நா மனித உரிமை தலைவர், இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை உலக வல்லரசுகள் ‘அலட்சியத்தோடு’ நடத்துகின்றன என்றார்.

சிரியாவின் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு தூமா நகர் மீது கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட இரசாயன தாக்குதலில் 70க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை பாதுகாப்பு சபை அவசர கூட்டத்தை நடத்தியது. இதில் உரையாற்றிய ஹாலே, சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தை ‘அரக்கன்’ என்று வர்ணித்ததோடு, ஐ.நா பாதுகாப்பு சபை செயற்பட்டாலும் இல்லாவிட்டாலும் அமெரிக்கா இதற்கு பதிலடி கொடுக்கும் என்று உறுதி அளித்தார்.

“சந்திப்பு இடம்பெற்று வருகிறது, நாம் பேசிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் கூட முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன” என்று ஹாலே கூறினார்.

ரஷ்யாவுக்கு எதிரான தொணி பனிப்போர் காலத்தில் இல்லாத அளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அப்பால் சென்றிருப்பதாக பாதுகாப்பு சபையில் எச்சரித்த ரஷ்ய தூதுவர், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை பற்றி கடும் எச்சரிக்கை விடுத்தார். 

2

சிரியாவில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் இரசாயன தாக்குதலுக்கு எதிராக ‘வலுவான’ பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து மேற்கத்திய தலைவர்கள் ஆலோசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

“இராணுவ ரீதியில் எமக்கு பல தேர்வுகள் இருக்கின்றன” என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் திங்களன்று கூறினார். இதற்கான பதில் நடவடிக்கை ‘விரைவில்’ தீர்மானிக்கப்படும் என்றார்.

சனிக்கிழமை தூமாவில் இடம்பெற்ற சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்பது குறித்து அமெரிக்காவுக்கு ‘நல்ல தெளிவு’ உள்ள என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

இது பற்றி பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோனுடன் டிரம்ப் திங்கட்கிழமை இரவு பேசி இருப்பதோடு உறுதியான பதில் நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்கு இரு தலைவர்களும் தீர்மானித்துள்ளனர்.

‘காட்டுமிராண்டித்தனமான’ இரசாயன தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாக குறிப்பிட்டிருக்கும் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, ஜனாதிபதி பஷர் அல் அஸாத்துக்கு ஆதரவு அளிப்பவர்கள் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த இரசாயன தாக்குதல் குறித்து புதிய விசாரணைகளை நடத்தக் கோரும் தீர்மானம் ஒன்றின் மீது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இந்த வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட ஏற்பாடாகி இருந்தது. எனினும் இதில் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதால் இந்த பரிந்துரைக்கு ஆதரவு அளிக்க முடியாது என்று ரஷ்யா கூறியிருந்தது.

அமெரிக்கா பன்னாட்டு இராணுவ நடவடிக்கை ஒன்று பற்றி விவாதித்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

3 comments:

  1. Ellam bammathu....Muslim gala alikka Ella kaafirum ondru seruwaangal.

    ReplyDelete
  2. சிரியாவில் இன்னுமா மக்கள் வாழ்கிறார்கள்?

    இந்த மத்திய கிழக்கு நாடுகள் எதெற்கு என்று தெரியாமல், காலம் பூராவும் மாறி மாறி யுத்தம் செய்வார்கள். காரணம் கேட்டால் அமேரிக்க, ரஷ்யா என்பார்கள்.
    இவர்கள் ஒழுங்காக இருந்தால் எப்படி மற்றவர்கள் உள்ளே வர முடியும்? முட்டாள்கள்

    ReplyDelete

Powered by Blogger.