Header Ads



"இலங்கைக்கு செல்லும்போது, முன்னெச்சரிக்கையுடன் செயற்படுங்கள்"

இலங்கையில் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமது நாட்டு பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராஜியம் பயண ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக the Gulf செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையை தொடர்ந்து கடந்த 6ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு நாடு முழுவதும் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு இராஜிய தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்றைய தினம் பதிவொன்றை விடுத்துள்ளது.

அதில், “இலங்கைக்கு பயணம் செய்யும் போது ஐக்கிய அரபு இராஜிய நாட்டினர் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளுமாறு” தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவசரகால நிலையின் போது தூதரகத்தை தொடர்புகொள்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கை தூதுவர் Sulaiman J. Mohideen தெரிவித்தார்.

அவசர அறிவிப்பு என்பது வன்முறை பரவுவதைத் தடுக்க அதிகாரிகளால் எடுக்கப்பட்ட “தடுப்பு நடவடிக்கை” ஆகும்.

“இது கண்டி மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளுக்கு மட்டுமல்லாமல், நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.