Header Ads



ஒரு சமூகத்தில் மிருகத்தன செயற்பாடே, கண்டி வன்முறை - நவநீதம்பிள்ளை கடும் ஆத்திரம்

இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் நம்பிக்கையை குறையச் செய்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கண்டியில் அண்மையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

கண்டியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளை மதகலவரம் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது கிளர்ச்சி மற்றும் போர் அனுபவங்களை கொண்ட ஒரு சமூகத்தில் ஒரு மிருகத்தனமாக செயற்பாடு என்று அவர் விமர்சித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் நாளை ஏனையவர்கள் சட்டத்தை தமது கைகளில் எடுக்கத் தயங்கமாட்டார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

புதிய அரசாங்கம், ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை அடுத்து இந்த அரசாங்கம் உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றும் நம்பிக்கை வைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்

எனினும் அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் நம்பிக்கையை குறையச் செய்துள்ளன. ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் இலங்கையால் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியாது என்றும் நவநீதம்பிள்ளை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

2 comments:

  1. My3 & Ranil do not want to build Sri Lanka. They want to build their own political parties, which are almost dead at the last local government election.

    ReplyDelete
  2. They keep promise as promise, no action

    ReplyDelete

Powered by Blogger.